+2 கணக்குப்பதிவியல் L 1 - L 10
பாடம்:- 1 - 10
Prepared by Muthu Selvam Madurai Cell : 9842104826
- முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு
- பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு
- பத்திர முனைமக் கணக்கு
- பங்குமுதல் கணக்கு
- அழைப்பு முன்பணக் கணக்கு
- ஒறுப்பிழப்புச் செய்த பங்குகளை மறுவெளியீடு செய்த பிறகு, பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கின் இருப்பு மாற்றப்படுவது
- பத்திர முனைமக் கணக்கிற்கு
- முதலினக் காப்பு கணக்கிற்கு
- பொதுக்காப்பு கணக்கிற்கு
- உபரி கணக்கிற்கு
- முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?
- ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது
- வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை.
- இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை
- இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்.
- A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். B-ன் விலகலின் போது நிறுவனத்தின் நற்பெயர் ` 30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B-க்கு ஈடு செய்வதற்கு A மற்றும் C யின் பங்களிப்பைக் கண்டறியவும்.
- 10,000 மற்றும் 20,000
- 20,000 மற்றும் 10,000
- 8,000 மற்றும் 4,000
- 15,000 மற்றும் 15,000
- நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்
- முதலினக் காப்பு
- அங்கீகரிக்கப்பட்ட முதல்
- காப்பு முதல்
- அழைக்கப்பட்ட முதல்
- கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?
- செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு
- செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது.
- செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு
- அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு
- பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு
- சொத்து கணக்கு
- பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
- பெயரளவு கணக்கு
- ஆள்சார் கணக்கு
- தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது
- தொடக்க முதல் கண்டறிய
- அவ்வாண்டின் நட்டம் கண்டறிய
- இறுதி முதல் கண்டறிய
- அவ்வாண்டின் இலாபம் கண்டறிய
- முழுமை பெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது
- சிறிய அளவிலான தனி ஆள் வணிகம்
- அரசு
- நிறுமம்
- பன்னாட்டு நிறுவனங்கள்
- சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துகள் அழைக்கப்படுவது
- காப்புகள்
- விரைவு சொத்துகள்
- நிதி
- புலனாகும் சொத்துகள்
- பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- கூட்டாளிகளுக்கு சம்பளம் அல்லது ஊதியம் அனுமதிக்கப்பட மாட்டாது.
- கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்
- கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்.
- கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.
- கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 –ன் படி வழங்கப்படும் வட்டி வீதம்
- ஆண்டுக்கு 6%
- ஆண்டுக்கு 12%
- ஆண்டுக்கு 5%
- ஆண்டுக்கு 8%
- கடனாளிகள் தொடக்க இருப்பு ரூ. 30,000, பெற்ற ரொக்கம் ரூ.1,00,000 கடன் விற்பனை ரூ.90,000 கடனாளிகள் இறுதி இருப்பு ?
- 40,000
- 1,30,000
- 20,000
- ரூ 30,000
- பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது
- முதலினத் தன்மை மட்டும் உடையது
- மேற்கண்ட எதுவுமில்லை
- அந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டம்
- வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது
- பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்
- வருவாயினத் தன்மை மட்டும் உடையது
- வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது
- முதலினத் தன்மை மட்டும் உடையது
- மேற்கண்ட எதுவுமில்லை
- பின்வரும் வாக்கியங்களில் எது சரியானதல்ல?
- நிதிநிலை அறிக்கை பகுப்பாப்பாய்வின் கருவிகளில் பொது அளவு அறிக்கை உள்ளடங்கும்.
- குறிப்புகள் மற்றும் பட்டியல்களும் நிதிநிலை அறிக்கைகளின் பகுதி ஆகின்றன.
- போக்குப் பகுப்பாப்பாய்வு என்பது ஓராண்டில் தொகைகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்தலைக் குறிப்பதாகும்.
- பொது அளவு அறிக்கை சில பொது அடிப்படைகளைக்ப்படைகளைக் கொண்டு பல்வேறு இனங்களின் தொடர்பினைக் காட்டுவதாகும். இவ்வினங்கள், பொது அளவு அடிப்படைப்படையின் சதவிகிதமதாக காட்டப்பப்படுகின்றன.
- பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.
- 2:1
- 3:1
- 1:3
- 1:2
- எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்பப்படுகிறது?
- அலுவலக பயண்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்
- சொத்துகள் கடனுக்கு வாங்கியது
- அறிக்கைகள்
- தலைமைப் பதிவு
- அறைகலன் கடனுக்கு வாங்கியதை Tally-இல் எந்த வகை சான்றாவனத்தில் பதியப்படும்?
- உரிய குறிப்பேடு சான்றாவணம்
- கொள்முதல் சான்றாவணம்
- பெறுதல்கள் சான்றாவணம்
- பெறுதல்கள் சான்றாவணம்
- பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது அல்ல?
- ஆய்வு செய்யப்பட்ட தகவல்களை உய்த்துணர்வது தனிப்பட்ட கருத்துகளை உள்ளடக்கியதாகும்.
- நிதி நிலை அறிக்கை பகுப்பாப்பாய்விற்கு நிபுணத்துவம் தேவையில்லை
- நிதிநிலை அறிக்கை பகுப்பாப்பாய்வு ஒரு வழிமுறை, இது ஒரு முடிவல்ல.
- நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் அனைத்தும் நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்விற்கும் பொருந்தும்.
- அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ. 25,000 வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது. எந்த வகை சான்றாவனத்தில் இந்த நடவடிக்கை பதியப்படும்?
- விற்பனை சான்றாவனம்
- எதிர்பதிவு சான்றாவணம்
- செலுத்தல்கள் சான்றாவணம்
- பெறுதல்கள் சான்றாவணம்
- வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு
- சொத்து கணக்கு
- பெயரளவுக் கணக்கு
- பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
- ஆள்சார் கணக்கு
- ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை
- வருவாயின வரவு
- முதலின வரவு
- வருவாயினச் செலவு
- முதலினச் செலவு
- பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவதில்லை?
- பழைய செய்தித்தாள்கள் விற்றது
- சொத்து விற்பனை மீதான நட்டம்
- செயலாளருக்கு வழங்கிய மதிப்பூதியம்
- அறைகலன் விற்ற தொகை
- A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4:2:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்
- 3:4
- 4:3
- 2:1
- 1:2
- வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது.
- நிதிநிலை
- இலாபம் அல்லது நட்டம்
- ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
- உபரி அல்லது பற்றாக்குறை
- பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?
- புற அக பொறுப்புகள் விகிதம் – விகிதாச்சாரம்
- நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் – சதவீதம்
- மொத்த இலாப விகிதம் – சதவீதம்
- நீர்மை விகிதம் – விகிதாச்சாரம்
- உயில்கொடை ஒரு
- முதலின வரவு
- வருவாயினச் செலவு
- முதலினச் செலவு
- வருவாயின வரவு
- 2017- ல் கணக்கேட்டின்படி இலாபம் ரூ.35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ரூ.2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம்
- ரூ.38,000
- ரூ.36,000
- ரூ.35,000
- ரூ.34,000
- ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ரூ.100 செலுத்துகின்றனர்.நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ. 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.
- ரூ 49,800
- ரூ 50,000
- ரூ 49,000
- ரூ 50,200
- கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது
- முதல் விகிதத்தில்
- சமமான விகிதத்தில்
- சமமான மற்றும் முதல் விகிதத்தில்
- மேற்கூறிய எதுவுமில்லை
- நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது
- தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று
- ஒரு சொத்து
- ஒரு பொறுப்பு
- ஒரு செலவு
- Tally-யில் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு?
- கொடுபட வேண்டிய செலவு க/கு
- விற்பனை க/கு
- முதலீடுகள் க/கு
- அனாமத்து க/கு
- நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாப்பாய்வின் பின்வரும் எந்த கருவி பல்வேறு ஆண்டுகளுக்கான விவரங்களை பகுப்பாப்பாய்வு செய்வதற்கு ஏற்புடையதாகும்?
- பொது அளவு அறிக்கை
- ரொக்க ஓட்ட பகுப்பாப்பாய்வு
- போக்கு ஆய்வு
- ஒப்பீட்டு அறிக்கை
- கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி
- ஆண்டுக்கு 6% வழங்கப்படும்
- வங்கி வீதத்தில் வழங்கப்படும்
- வழங்கப்படுவதில்லை
- ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்
- பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் கணக்கியல் அறிக்கையானது
- குறிப்பிட்ட நோக்க அறிக்கை
- வழக்கமான கணக்கியல் அறிக்கை
- இருப்புநிலைக் குறிப்பு
- இருப்பாய்வு
- சரியான விடையைத் தேர்வு செய்யவும் மறுமதிபீட்டுக் கணக்கு ஒரு
- பெயரளவு க/கு
- ஆள்சாரா க/கு
- ஆள்சார் க/கு
- சொத்து க/கு
- X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ரூ 36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரியஇலாபத்தில் X ன் பங்கினைக்கண்டறியவும்.
- ரூ 3,000
- ரூ 12,000
- ரூ 1,000
- ரூ 36,000
- ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது, அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக
- 6.5 மாதங்கள்
- 6 மாதங்கள்
- 5.5 மாதங்கள்
- 12 மாதங்கள்
- கூட்டாண்மை நிறுவனத்தில், நிலைமுதல் முறை பின்பற்றப்படும்போது, பின்வருவனவற்றுள் எது முதல் கணக்கில் காட்டப்படும்?
- இலாபப் பகிர்வு
- முதல் மீது வட்டி
- எடுப்புகள் மீது வட்டி
- கூடுதல் முதல் கொண்டுவந்தது
- பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?
- கடன்மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
- இலாபப் பகிர்வு – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
- எடுப்புகள் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
- முதல் மீது வட்டி – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
- கடன் விற்பனைத் தொகையை கணக்கிட தயாரிக்கப்படுவது
- பெறுதற்குரியமாற்றுச்சீட்டு கணக்கு
- மொத்தகடனீந்தோர் கணக்கு
- செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு
- மொத்தக்கடனாளிகள் கணக்கு
- எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ரூ.10,500. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத்தொகையை கண்டறியவும்.
- ரூ.150
- ரூ.50
- ரூ.500
- ரூ.550
- ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினை கணிதவியல் முறையில் கூறுவது
- விகிதம்
- முடிவு
- மாதிரி
- தீர்மானம்
- உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும்
- சராசரி இலாபம் மற்றும் சாதாரண இலாபம்
- சொத்துகள் மற்றும் பொறுப்புகள்
- நடப்பு ஆண்டின் இலாபம் மற்றும் சராசரி இலாபம்
- பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் சராசரி இலாபம்
- கீழ் வருவனவற்றில் எது சரியானது?
- உயர் இலாபம் = மொத்த இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
- உயர் இலாபம் = சராசரி இலாபம் – சாதாரண இலாபம்
- உயர் இலாபம் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகள்
- உயர் இலாபம் = கூட்டு இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
- சரியற்ற இணையினை அடையாளம் காணவும்
- சராசரி இலாபமுறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
- ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு
- உயர் இலாப முறையில் நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
- கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
- உரிமையாளரின் சொத்துகள் ரூ.85,000 மற்றும் பொறுப்புகள் ரூ.21,000 எனில் அவருடைய முதல் தொகை
- ரூ.85,000
- ரூ.1,06,000
- 21,000
- 64,000
- சராசரி இலாபம் ரூ.25,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம்
- ரூ.5,000
- ரூ.10,000
- ரூ.25,000
- ரூ.15,000
- கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால்அவ்வேறுபாடு அழைக்கப்படுவது
- இவற்றுள் எதுவுமில்லை
- தியாக விகிதம்
- முதல் விகிதம்
- ஆதாய விகிதம்
- Tally- யின் நுழை வாயிலிலிருந்து இருப்பாய்வை பார்வையிட எந்த விருப்பத்தேர்வு பயன்படும்?
- Gateway of Tally - > Trial Balance
- Gateway of Tally - > Reports - > Display - > Trial Balance
- இவைகளில் ஏதுமில்லை
- Gateway of Tally - > Reports - > Trial Balance
- ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ரூ.1,00,000; சொத்துகள் ரூ.1,50,000 மற்றும் பொறுப்புகள் ரூ.80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு
- ரூ.40,000
- ரூ.70,000
- ரூ.1,00,000
- ரூ.30,000
- மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது
- இவற்றுள் எதுவுமில்லை
- செலவு
- நட்டம்
- ஆதாயம்
- ஜேம்ஸ் மற்றும் கமல் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் சுனில் என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாக விகிதத்தை கணக்கிடவும்.
- 1:3
- 5:3
- 3:5
- 3:1
- கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது கூட்டாளிகள் பெறத் தகுதியுடையது
- சம்பளம்
- கழிவு
- முதல் மீது வட்டி
- கடன் மீது வட்டி
- பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?
- நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து
- நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து
- நற்பெயரினை வாங்க முடியாது
- நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து
- கூட்டாளி சேர்ப்பின்போது நற்பெயரானது மதிப்பீடு செய்யப்பட்டு யாருடைய முதல்கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.
- பழைய கூட்டாளிகள்
- தியாகம் செய்த கூட்டாளிகள்
- அனைத்து கூட்டாளிகள்
- புதிய கூட்டாளி
- கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?
- பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்
- கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்
- முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு
பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் - ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது
- பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
- முதலீட்டு மாறுபடும் நிதி
- பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்
- மறுமதிப்பீட்டு இலாபம்
- புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்
- சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்யும் போது ஏற்படும் இலாபம் அல்லது நட்டம்யாருடைய முதல் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?
- அனைத்து கூட்டாளிகள்
- தியாகம் செய்த கூட்டாளிகள்
- பழைய கூட்டாளிகள்
- புதிய கூட்டாளி
- கூட்டாளி ஒருவர் ஜுன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது
- கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்
- முந்தைய கணக்காண்டின் இறுதி வரைக்கும்
- கூட்டாளியின் கணக்கைத் தீர்வு செய்யும் வரைக்கும்
- நடப்பு கணக்காண்டின் இறுதி வரைக்கும்
- சம்பளக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும்?
- நேரடி செலவீனங்கள்
- மறைமுக செலவீனங்கள்
- மறைமுக வருமானங்கள்
- நேரடி வருமானங்கள்
- கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி விலகலின்போது பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு இந்த அடிப்படையில் பகிரப்படுகிறது.
- தியாக விகிதம்
- பழைய இலாபப் பகிர்வு விகிதம்
- ஆதாய விகிதம்
- புதிய இலாபப் பகிர்வு விகிதம்
- மறுமதிப்பீட்டின்போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது
- ஆதாயம்
- இலாபம்
- மேற்கண்ட எதுவுமில்லை
- நட்டம்
- விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத்தொகை உடனடியாகசெலுத்தாதபோது, அது மாற்றப்படும் கணக்கு
- விலகும் கூட்டாளியின் முதல் க/கு
- வங்கி க/கு
- விலகும் கூட்டாளியின் கடன் க/கு
- பிற கூட்டாளிகளின் முதல் க/கு
- ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த ‘A’ என்பவர் 2019, மார்ச் 31 அன்று இறந்து விட்டார். அவருக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை ` 25,000 உடனடியாகச்செலுத்தப்படவில்லை. அது மாற்றப்பட வேண்டிய கணக்கு
- A –ன் நிறைவேற்றாளர் கணக்கு
- A-ன் முதல் கணக்கு
- A –ன் நிறைவேற்றாளர் கடன் கணக்கு
- A-ன் கடன் கணக்கு
- நிதிநிலை அறிக்கைகள் வெளிக்காட்டாதது
- கடந்தகால தகவல்கள்
- நீண்டகால தகவல்கள்
- பணம்சாரா தகவல்கள்
- குறுகிய கால தகவல்கள்
- ஒரு பொது அளவு இருப்புநிலைக் குறிப்பில், நீண்டகாலச் சொத்துகளின் சதவீதம் 75 எனில், நடப்புச் சொத்துகளின் சதவீதம் எவ்வளவு?
- 125
- 25
- 100
- 175
- முன்னுரிமைப் பங்கு என்பது
(i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் செலுத்துவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு
(ii) கலைப்பின்போது பங்கு முதலை திரும்பப்பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு- (i) மற்றும் (ii) சரியானது
- (i) மற்றும் (ii) தவறானது
- (i) மட்டும் சரியானது
- (ii) மட்டும் சரியானது
- கூட்டாளி விலகலின் போது பொதுக்காப்பு மாற்றப்படுவது
- மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு
- தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
- நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு
- அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
- பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது?
- பங்குகள் குறை ஒப்பமாக இருக்கும் நிலையில் வெளியிடப்பட்ட பங்குமுதல், ஒப்பிய பங்குமுதலை விட குறைவாக இருக்கும்
- செலுத்தப்பட்ட பங்குமுதல், அழைக்கப்பட்ட பங்கு முதலின் ஒரு பகுதி ஆகும்
- வெளியிடப்பட்ட பங்குமுதல் அங்கீகரிக்கப்பட்ட பங்குமுதலை விட ஒருபோதும் அதிகமாக இருக்கக் கூடாது.
- காப் காப்பு முதல் நிறுமத்தை கலைக்கும்போது செலுத்துமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.
- விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை ரூ.3,00,000; அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு ரூ.60,000; அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு ரூ.40,000 எனில் சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
- 3 மடங்கு
- 2 மடங்கு
- 8 மடங்கு
- 6 மடங்கு
- சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும்போது வரவு வைக்கப்படும் கணக்கு
- பற்பல சொத்துகள் க/கு
- விற்பனையாளர் க/கு
- பங்குமுதல் க/கு
- வங்கி க/கு
- குழுக்கள், பேரேடுகள் மற்றும் சான்றவன வகைகளை Tall-யின் எந்த துணைப்பட்டியல் காண்பிக்கும்?
- கணக்கு தகவல்
- கணக்கியல் சான்றாவணங்கள்
- சரக்கிருப்பு சான்றாவணங்கள்
- நிறுவன தகவல்
- ரூ.8 செலுத்தப்பட்ட, ரூ.10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை
- பங்கொன்று ரூ.10
- பங்கொன்று ரூ.2
- பங்கொன்று ரூ.8
- பங்கொன்று ரூ.5
- சுப்ரீம் நிறுமம் பங்கொன்று ரூ.10 மதிப்புடைய 100 பங்குகளை இறுதி அழைப்புத்தொகை ரூ.2 செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்தது. அவை அனைத்தும் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. முதலினக் காப்புக்கு மாற்றப்பட வேண்டிய தொகை.
- ரூ.900
- ரூ.700
- ரூ.1,000
- ரூ.800
- நிலை அறிக்கை ஒரு
- கடன் நடவடிக்கைகளின் தொகுப்பு
- வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை
- சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை
- ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு
- இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய ________ தகவல்களை வழங்குகிறது.
- ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய
- ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான
- ஒரு காலக்கட்டத்திற்கு மேலான
- குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய
- ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?
- முகமதிப்பு
- அழைக்கப்பட்ட தொகை
- செலுத்தப்பட்ட தொகை
- பெயரளவு மதிப்பு
- பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாப்பாய்வின் ஒரு கருவி அல்ல?
- போக்குப் பகுப்பாப்பாய்வு
- பொது அளவு அறிக்கை
- நிர்ணயிக்கப்பப்பட்ட அடக்கவிலையியல்
- ஒப்பீட்டு அறிக்கை
- நிதி என்னும் சொல் குறிப்பிடுவது
- நடப்புப் பொறுப்புகள்
- நிலைச் சொத்துகள்
- நீண்டகாலச் சொத்துகள்
- நடைமுறை முதல்
- ஒரு வரையறு நிறுமத்தின் விற்பனை ரூ.1,25,000 லிருந்து ரூ.1,50,000க்கு அதிகரித்துள்ளது. இது ஒப்பீட்டு வருமான அறிக்கையில் எவ்வாறு தோன்றுகிறது?
- -120%
- +120%
- +20%
- -20%
- ஒரு கூட்டாளி விலகலின்போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது?
- பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்தளிப்பதற்கு
- மேற்கண்ட எதுவுமில்லை
- மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம் மாற்றப்படுவதற்கு
- நற்பெயரை சரிக்கட்டுவதற்கு
- பின்வருவனவற்றில் எது இலாபநட்டப் பகிர்வு கணக்கில் காட்டப்படும்?
- வங்கிக்கடன் மீதான வட்டி
- கூட்டாளியின் ஊதியம்
- பணியாளர் ஊதியம்
- அலுவலகச் செலவுகள்
- ஒரு வணிகத்தின் முதலாம் ஆண்டுச் செலவுகள் ரூ.80,000. இரண்டாம் ஆண்டில் செலவுகள் ரூ.88,000 ஆக அதிகரித்திருந்தது. இரண்டாம் ஆண்டின் போக்கு விகிதம் என்ன?
- 11%
- 10%
- 90%
- 110%
- நடப்பு விகிதம் காட்டுவது
- குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
- இலாபம் ஈட்டும் திறன்
- மேலாண்மை திறன்
- நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
- புற அக பொறுப்புகள் அளவிடுவது
- நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
- குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
- செயல்திறன்
- இலாபம் ஈட்டும் திறன்
- (i) நடப்பு விகிதம் 1. நீர்மைத் தன்மை
(ii) நிகர இலாப விகிதம் 2. செயல்திறன்
(iii) புற அக பொறுப்புகள் விகிதம் 3. நீண்டகால கடன் தீர்க்கும் திறன்
(iv) சரக்கிருப்பு சுழற்சி விகிதம் 4. இலாபத்தன்மை- 4 3 2 1
- 1 2 3 4
- 1 4 3 2
- 3 2 4 1
- (A) குறை ஒப்பம் (i) முன்கூட்டிச் செலுத்திய அழைப்பு பணம்
(B) மிகை ஒப்பம் (ii) வெளியிட்ட பங்குகளை விட அதிகமாக ஒப்பப்பட்டது
(C)அழைப்பு நிலுவை (iii) வெளியிட்ட பங்குகளை விட குறைவாக ஒப்பப்பட்டது
(D) அழைப்பு முன்பணம் (iv) செலுத்தப்பெறாத அழைப்பு பணம்- (i) (ii) (iii) (iv)
- (iv) (iii) (ii) (i)
- (iii) (ii) (iv) (i)
- (iii) (iv) (i) (ii)
- ஒரு நிறுமத்தின் நீர்மைத்தன்மையை சோதிக்க கீழ்க்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகிறது?
(i) விரைவு விகிதம்
(ii) நிகர இலாப விகிதம்
(iii) புற அக பொறுப்புகள் விகிதம்
(iv) நடப்பு விகிதம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்- (i) மற்றும் (iv)
- (ii) மற்றும் (iii)
- (ii) மற்றும் (iv)
- (i) மற்றும் (ii)
- பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரம்
- புற அக பொறுப்பு விகிதம்
- நடப்பு விகிதம்
- முதல் உந்துதிறன் விகிதம்
- உரிமையாளர் விகிதம்
- பொறுப்புக்களை காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துக்கள்
- ரொக்கம்
- முதல்
- நட்டம்
- இலாபம்
- தொடக்க முதல் ரூ. 10,000 அவ்வாண்டின் எடுப்புகள் ரூ.6,000 அவ்வாண்டின் இலாபம் ரூ.2,000 மற்றும் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ. 3,000 எனில் இறுதி முதல் காணவும்.
- 21,000
- 3,000
- 11,000
- ரூ. 9,000
- பொருத்துக
(i) தியாக விகிதம் 1. முதலீட்டு மாறுபடும் நிதி
(ii) பழைய இலாபப் பகிர்வு விகிதம் 2. பகிர்ந்துதரா இலாபம்
(iii) மறுமதிப்பீட்டு கணக்கு 3. நற்பெயர்
(iv) முதல் கணக்கு 4. பதிவுறா பொறுப்பு- 3 2 4 1
- 4 3 2 1
- 3 1 4 2
- 1 2 3 4
- நடப்புப் பொறுப்பு ரூ.40,000; நடப்புச் சொத்து ரூ.1,00,000; சரக்கிருப்பு ரூ.20,000 எனில் விரைவு விகிதம்
- 1:2
- 1:1
- 2.5:1
- 2:1
- F11 எனும் பயன்பாடு
- நிறுவனப் பண்புகூறுகள்
- இவைகளில் எதுவும் இல்லை
- நிறுவன கட்டமைப்பு
- கணக்கியல் சான்றாவணங்கள்
- Tally-யில் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடு(கள்) ?
(i) ரொக்கம்
(ii) இலாப நட்டக் க/கு
(iii) முதல் க/க- (ii) மற்றும் (iii) இவை இரண்டும்
- (ii) மட்டும்
- (i) மற்றும் (ii) இவை இரண்டும்
- (i) மட்டும்
- ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாபவிகிதமாக கருதப்படுவது
- சராசரி இலாபம்
- எதிர்நோக்கும் இலாப விகிதம்
- இவைகளில் ஏதுமில்லை
- சாதாரண இலாப விகிதம்
0 Comments