*தினம் ஒரு புத்தகம்* - மற்றொரு கோணம்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:202

தேதி:22-02-2023

புத்தகம் எண்ணிக்கை:202

புத்தகத்தின் பெயர் :மற்றொரு கோணம்

 ஆசிரியர் :சத்குரு ஜக்கி வாசுதேவ் விலை : 120 

பக்கங்கள் :200

பதிப்பகம்: நக்கீரன் வெளியீடு 

 

*சத்குரு போதனைகள் ஆன்மீக உலகத்திற்கு புது வெளிச்சம் காட்டுபவை

 

* ஆசை கூடாது என்று நமது எண்ணங்களை முனை முறித்து வந்த பழமைவாதிகளுக்கு இடையே அத்தனைக்கும் ஆசைப்படு என ஆசீர்வதித்து நமது புலன்களை உற்சாகப்படுத்தும் இவரது மேதமை வியக்கத்தக்கது

 

*மக்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார் அந்த கேள்வி பதில்களின் தொகுப்பே இந்தப் புத்தகம் ஆகும்

 

* ஜக்கி வாசுதேவ் அவர்களின் பதில்களில் இருந்து என்னை கவர்ந்த சில பதில்கள் 

 

*மனிதன் ஒரு முழு மனிதனாக இருந்தால் போதும் கடவுள் தன்மையோடு இருக்க அவசியம் இல்லை உலகத்தில் கடவுள் பற்றி இவ்வளவு பேச்சுகள் நடப்பதற்கு மனித தன்மையின் மகத்துவம் புரியாதது தான் காரணம் 

 

*அன்பான உலகம் உருவாக்குவது என்றால் பல நல்ல அன்பான மனிதர்களை உருவாக்குவது தான் அப்படி செய்தாலே அந்த அன்பு ஒவ்வொரு செயல் மூலமும் தானாகவே வெளிப்படும்

 

* நீங்கள் மத நூல்கள் எதையும் படிக்கத் தேவையில்லை உங்கள் உள் தன்மை என்னவென்று பார்க்கத் தெரிந்து கொண்டால் அதுவே போதும் 

 

*இன்று மாணவர்களுக்கு எப்படி டாக்டராவது இன்ஜினியர் ஆவது என்று நன்றாகத் தெரியும் ஆனால் வாழ்க்கை என்று வரும்போது அவர்கள் மூளையை எப்படி உபயோகிப்பது என்று தெரியாமல் வாழ்கிறார்கள் மூளையை உபயோகிக்க கூடிய கல்வி முறை கண்டிப்பாக உருவாக்க வேண்டும்

 

* உங்களுக்குள் ஒரு ரசாயன மாற்றத்தை இயல்பாக ஏற்படுத்தக்கூடிய விஞ்ஞானத்திற்கு யோகா என்று பெயர் 

 

*ஆனந்தத்தை உணர்ந்தாலும் கண்ணீர் வரும் அன்பை உணர்ந்தாலும் கண்ணீர் வரும் தியானம் செய்து உங்களுக்குள் இருக்கும் அமைதி தீவிரப்பட்டாலும் கண்ணீர் வரும் 

 

*ஆணின் மனம் பெண்ணை தாழ்வாக கருதுகிறது அதனால் தான் பெண்ணுக்கு ஆன்மீகம் உண்டா என்பது போன்ற கேள்விகளை தோன்றுகின்றன ஆன்மீகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமையான வாய்ப்புகள் உள்ளன 

 

*உயர்ந்தது தாழ்ந்தது என்று பார்ப்பதை விட முழு விருப்பத்தோடு உங்களால் எதை ஆனந்தமாக செய்ய முடிகிறதோ அதையே மன உறுதியோடு செய்யுங்கள் 

 

*பொதுமக்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஜக்கி அளித்த பதில்கள் மனதைக் கவருகிறது

 

*ஜக்கி பதில்கள் மூலம் உணர்ந்து கொள்வது ஆன்மிக வாதிகள் நிறையப்படிக்கிறார்கள்.படித்தவற்றை பொருத்தமான இடங்களில் பயன்படுத்துகிறார்கள் என்று.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301 

Post a Comment

0 Comments