*தினம் ஒரு புத்தகம்* - தெரு விளக்கும் மரத்தடியும்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:185

தேதி:27-01-2023

புத்தகம் எண்ணிக்கை:185

புத்தகத்தின் பெயர் :தெரு விளக்கும் மரத்தடியும் 

ஆசிரியர் :ச.மாடசாமி 

பக்கங்கள் :88 

விலை :80 

பதிப்பகம் :புதிய தலைமுறை

 

* களத்து மேடு கல்லூரி வாசல் வரை நம்மை அழைத்துச் செல்லும் ஒரு கல்விப் பயணம் தெருவிளக்கும் மரத்தடியும். 

 

*அறிவொளி இயக்கத்தில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்ட பேராசிரியர் மாடசாமி தனது அனுபவத்தின் வாயிலாக குட்டிக்கதைகளுடன் மெல்லிய நகைச்சுவை இழையோட எளிய சொற்களால் வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கல்வி உலகை காட்டுகிறார் 

 

*மனதில் பதிந்தவை 

 

*குறுகி சிறுத்த வகுப்பு சிறையில் இருந்து விடுபட்டு வெளியே வந்து பார்த்தால் வகுப்பறைகளும் ஏராளம் ஆசிரியர்களும் ஏராளம் 

 

*பயிற்சிகள் எல்லாம் கண்களைத் திறக்கத்தான் வெளிச்சத்துக்கு வராத சிறு ஆளுமைகளை காணத்தான் சில நேரங்களில் அப்படி நடப்பதில்லை 

 

*கற்பிக்கையில் சில நேரம் தோற்றுப் போக நேரலாம் ஆனால் தோல்வியை ஒப்புக்கொள்வதன் மூலம் மனங்களை வெற்றிகொள்ள முடியும் 

 

*குழந்தைகளுக்கு வீடும்பள்ளிக்கூடமும் போதாது அவர்களுக்கு மூன்றாவதாக ஒரு இடம் வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஜான் ஹோல்ட் 

 

*படி இறங்கியவர்கள் தோற்பதில்லை. 

 

*ஒரு கண்ணுக்குக் குறையாகத் தோன்றுவது இன்னொரு கண்ணுக்கு வளமாக தெரிகிறது 

 

*சமூகத்துக்கும் கல்விக்கூடத்துக்கும் ஆன சந்திப்பு முக்கியமானது ஏனில் ஏனெனில் இது இதயத்துக்கும் மூளைக்குமான சந்திப்பு  இந்த சந்திப்பு தொடர்ந்தால் மாற்றம் உறுதி வளர்ச்சி உறுதி 

 

*தெரு விளக்கும் மரத்தடியும் வகுப்பறையை தாண்டி வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் உள்ளத்தை படிக்கச் சிறந்த நூலாகும்

     

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments