*தினம் ஒரு புத்தகம்* - மாசில்லாக் காட்சி

 



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:201

தேதி:21-02-2023

புத்தகம் எண்ணிக்கை:201

புத்தகத்தின் பெயர் :மாசில்லாக் காட்சி 

ஆசிரியர் :கோ.பங்கயம் 

பக்கங்கள் :44 

விலை :75 

பதிப்பகம் :அகழ் பதிப்பகம் 

 

*கத்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் திருமதி கோ. பங்கயம் அவர்கள் எழுதிய நூல் 

 

*திருக்குறளில் உள்ள மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் உள்ள 10 திருக்குறளுக்கு எழுதிய 10 கதைகளின் தொகுப்பே மாசில்லாக்காட்சி என்ற இந்தப் புத்தகம் ஆகும் 

 

*நூலாசிரியர் அவர்கள் இலக்கிய மன்ற பேச்சுப்போட்டியின் போது இந்த நூலை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார் 

 

*நூலாசிரியர் ஏற்கனவே திருக்குறள் மற்றும் திருக்குறளின் பொருளை இசை வடிவில் பாடி வெளியிட்டுபலரின் பாராட்டுகளைப் பெற்றவர் 

 

*பல்வேறு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார் பல விருதுகளை பெற்றுள்ளார் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் 

 

*இந்தப்புத்தகத்தின் சிறப்பு இதற்கு இவரே  அட்டைப்படைத்தை வடிவமைத்துள்ளார் 

 

*பத்து திருக்குறள் கதைகளில் என் மனதை மிகவும் கவர்ந்தது மெய்யறிவு ஆகும் 

 

*கதைகளின் தலைப்புகளே கவித்துவமாக உள்ளது 

 

*கதையின் தலைப்பே நம்மை கதை படிக்கத் தூண்டுகிறது 

 

*மெய்ப்பொருள் அறிவோம் என்ற கதையின் மூலம் அன்பே அகிலத்தில் சிறந்தது என உணர்த்திய விதம் அருமை 

 

*அழியாத மெய்ப்பொருள் அன்பே என்று அறியாமல் அழியும் பொருள் செல்வத்தை மெய்ப்பொருள் என்ற அறியாமையை உணர்ந்து கொண்டு வாழ வேண்டும் 

 

*உண்மை இன்பம் தரும் எனும் கதையின் மூலம் மெய்யறிவு பெற்றவர்களுக்கு உண்மை தோன்றி இருள் விலகி இன்பப்பேறு வாய்க்கும் என உணர்த்துகிறார் 

 

*அறிவுத்தெளிவு கதையின் மூலம் மெய் உணர்ந்தவர்கள் வானுலகம் அடைவார் என்பதை விளக்குகிறார் 

 

*கதையின் எழுத்து நடை கவித்துவமாக மனதைக் கவரும் வகையில் உள்ளது 

 

*கவிதை நடையில் கதையினை படிப்பது போன்ற உள்ளது இது இந்த புத்தகத்தின் தனி சிறப்பு ஆகும் 

 

*அன்பே தெய்வம் என்ற கதையில் எந்த பொருளையும் அது தோற்றத்தை ஆராயாமல் அதன் உண்மை தன்மையினை அறிந்து உணர வேண்டும் என விளக்குகிறார் 

 

*பெரியோர் சொல் கேள் என்ற கதையின் மூலம் பெரியோர் சொல் கேட்டு நடப்பதன் நன்மைகளை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறார் 

 

*பத்து கதைகளிலும் பத்து மையக்கருத்துக்களை அழகாக உணர்த்தியிருக்கிறார் 

 

*நூலின் இறுதிப்பகுதியில் திருவள்ளுவர் போற்றி எனும் தலைப்பில் 113 போற்றி என திருவள்ளுவரைப் போற்றுகிறார் 

 

*"அகரமும் பகவனும் ஆதியாம் போற்றி அஞ்சத்தக்கன அகற்றினாய் போற்றி அடக்கமே ஆளுமென அருளைப் போற்றி "

 

*இந்தப்புத்தகம் கண்டிப்பாக மாணவர்களும் குழந்தைகளும் படிக்க வேண்டிய புத்தகம் அவர்களுக்கு நல்ல பழக்கத்தையும் நல்ல அறிவையும் ஏற்படுத்தக்கூடிய கதைகளை கொண்ட புத்தகம் இது 

 

*ஆசிரியர்களும் குழந்தைகளும் பெற்றோர்களும் படிக்க வேண்டிய புத்தகம்

 

* திருக்குறளை பொருளாக படிக்காமல் கதையாக படிப்பதன் மூலம் குரளில் உள்ள கருத்துக்கள் மனதில் எளிதில் பதியும் என்பதற்கு இந்தப்புத்தகம் சிறந்த சான்று

 

* மேலும் பல நல்ல நூல்களைப் படைக்க ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments