*தினம் ஒரு புத்தகம்* - நானும் நீதிபதி ஆனேன்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:190

தேதி:01-02-2023

புத்தகம் எண்ணிக்கை:190

புத்தகத்தின் பெயர் : நானும் நீதிபதி ஆனேன் 

ஆசிரியர் :கே .சந்துரு 

பக்கங்கள் : 480 

விலை : 500 

பதிப்பகம்  அருஞ்சல் வெளியீடு 

 

*கே .சந்துரு ஸ்ரீரங்கத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்தவர் 30 ஆண்டுகள் வழக்குரைஞராகவும் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றியவர்

 

* தன்னுடைய ஆறேமுக்கால் ஆண்டு காலக்கட்டத்தில் 96 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்ப்பளித்தவர் 

 

*"கடையரிலும் கடையருக்காக சிந்தியுங்கள், செயல்படுங்கள்." என்ற காந்தியின் சொல்வாக்கைத் தனது அலுவலகத்தில் வைத்திருந்தார் அவ்வாசகத்தின் படியே செயல்பட்டவர் 

 

*இப்புத்தகத்தில் மொத்தம் 22 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.எனக்கு மிகவும் பிடித்தது இறுதி கட்டையான "நானும் நீதிபதி ஆனேன்" என்பதே ஆகும் .

 

*இந்தப்புத்தகத்தை படிக்கும் போது சந்துருவே நம்மிடம் பேசுவது போல் ஒரு தெளிந்த எழுத்து நடை படிக்க படிக்க நம்மை நிகழ்வுக்கு கூட்டிச்செல்லும் அதி அற்புதமான எழுத்து நடை.

 

*படிக்கும்போது நாமும் வழக்கறிஞர் ஆகி இருக்கலாமே என்ற மன ஓட்டம் ஏற்படுகிறது 

 

*ஒவ்வொரு வழக்குகளையும் துல்லியமாக ஆராய்ந்த விதத்தை பார்க்கும்போது அவரின் திறமைகளை போற்ற வார்த்தைகள் இல்லை 

 

*நீதியை வெற்றி பெற வைக்க எடுத்த முயற்சிகளை பார்க்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது 

 

*இவன் என் மகன் இல்லை என்று கூறும் அப்பாவின் நிலை இக்கட்டான தருணத்தில் கண்டிப்பாக யாருக்கும் வரக்கூடாது அண்ணாமலை பல்கலைக்கழக வழக்கு படிக்கும் போது கண்ணீர் வருகிறது 

 

*வக்கீல் சந்துருவை ஆர்ப்பரித்து அணைத்துக் கொண்டாலும் நீதிபதி சந்துருவை நித்தமும் நித்தித்து நிராகரித்து வரும் வக்கீல் தம்பிகளுக்கு என அவர் எழுதியதும் உண்மையினை இந்தப் புத்தகத்தினை படிக்கும் போது தான் புரிகிறது யாருமே உண்மையை மதிப்பதில்லை போலிகளை தான் மதிக்கிறார்கள் என்று

 

* ஜெய்பீம் பட நிகழ்வு போல பல்வேறு உண்மையான நிகழ்வுகள் இந்தப்புத்தகத்தில் உறைந்துள்ளது ஒவ்வொரு நிகழ்வையும் படிக்கும் போது கண்ணீர் அல்ல ரத்தம் தான் வருகிறது

 

* திருநம்பிக்கு சிறைக்குள்ளும் மாளாத துயரம் சிறைக்கு வெளியேயும் மாளாத துயரம் இப்படியும் சமூகத்தில் மனித மிருகங்களா என கண்ணீர் விட வைக்கிறது

 

* இந்தப்புத்தகத்தை படிக்க படிக்க நாமும் வழக்கறிஞர் ஆகலாம் என்ற பெருமிதம் ஏற்படுகிறது 

 

*முதலில் ஆரம்பித்த வாசிப்பு இறுதி வரை விறுவிறுப்பாக தொடர்கிறது புத்தகத்தை கீழே வைக்க மனது வரவில்லை 

 

*சந்துரு அவர்கள் நீதிபதிக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்ட போது அரசியல் மற்றும் நேர்மை ஆகிய காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது நமக்கு மனது கடினமாகிறது எப்படியோ இறுதியில் நீதிபதி ஆகிவிட்டார் என்னும்போது மனம் ஆறுதல் அடைகிறது 

 

*பெரியாரின் தத்துவக் கருத்துக்களை தீர்ப்புகளில் மேற்கோள் காட்டியது வியக்க வைக்கிறது 

 

*மனித உரிமைகளை நிலை நாட்ட போராடிய விதம் நமக்கு வியப்பைத்தருகிறது மனித உரிமைகளுக்காகவும் ஏழை மக்களுக்காகவும் இவர் வாதாடியதை பார்க்கும்போது மிக வியப்பாக உள்ளது 

 

*ஒவ்வொரு வழக்கின் தரவுகளையும் துல்லியமாகத் தொகுத்த விதம் வியப்பளிக்கிறது நீதிமன்ற நடைமுறைகளை சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இந்தப் புத்தகம் உள்ளது 

 

*இந்தப்புத்தகத்தை மாணவர்களும் குறிப்பாக இளைஞர்களும் படிக்க வேண்டும் இது வாழ்க்கை வரலாற்றுப்புத்தகமல்ல எதிர்கால வாழ்விற்கான படிப்பினை புத்தகமாகும் 

 

*நானும் நீதிபதியான இந்தப் புத்தகம் பல்வேறு இளைஞர்களை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி 

 

*இந்தப்புத்தகம் படிக்க படிக்க கே சந்துரு எனும் ஒப்பற்ற மனிதரைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.நமக்கு முன்மாதிரியாக வைத்துக் கொள்ள இந்த புத்தகம் தூண்டுகிறது 

 

*கடமையும் நீதியும் போராடினால் மட்டுமே வெற்றி பெறும் உண்மைக்கு போராடத் தயங்க கூடாது என்பதை உணர்த்துகிறது

 

*புத்தகத்தின் இறுதி மேற்கோள் நூல்களையும் ,ஆதாரத்தகவல்களையும் ,அடிக்குறிப்புகளையும் தந்த விதம் மிகவும் சிறப்பாக உள்ளது.

 

*நானும் நீதிபதியானேன் உண்மைக்கு ,மனித உரிமைக்கு ஒரு நிகழ்கால அடையாளம்.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301


Post a Comment

0 Comments