*தினம் ஒரு புத்தகம்* - ஆகட்டும் பார்க்கலாம்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:194

தேதி:05-02-2023

புத்தகம் எண்ணிக்கை:194

புத்தகத்தின் பெயர் : ஆகட்டும் பார்க்கலாம் 

ஆசிரியர் :வீரபாண்டியன் 

பக்கங்கள் : 328 

விலை : 300 

பதிப்பகம் : தூரிகை வெளியீடு

 

* வாழ்க்கையைத் தவமாய் வாழ்ந்த அரசியல் முனிவனுக்கு நாங்கள் இயற்றிய தவமிது ..!குடிசை கூட இல்லாத தலைவனுக்கு நாங்கள் கட்டிய காகித மாளிகை என்று முதல் பதிப்பின் முன்னுரையில் தொடங்குகிறது இந்தப்புத்தகம்

 

* முதன்மைச் செயலாளர் திரு உதயசந்திரன் அவர்கள் சோர்வு ஏற்படும் தருணங்களில் எல்லாம் தன் சோர்வை நீக்க தான் படித்த சிறந்தப் புத்தகம் இதுவென தனது மாபெரும் சபை தனிலே என்ற நூலில் எழுதியுள்ளார்

 

* பொது வாழ்வில் மற்றும் அரசுப்பணியில் இருப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய மிக சிறந்த புத்தகம் இது என்று கூறியுள்ளார் உதயச்சந்திரன் அவர்கள் 

 

*பெருந்தலைவர் காமராசர் பற்றி 113 தலைப்புகளில் 113 பேர் கூறிய தகவல்களின் தொகுப்பே இந்தப்புத்தகம் ஆகும் 

 

*எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு காமராசரின் உதவியாளர் வைரவன் அவர்கள் எழுதிய ரேஷன் அரிசி வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் என்பது ஆகும் 

 

*இந்தப்புத்தகம் கண்டிப்பாக ஒவ்வொருவரும் படித்துப்பாதுகாக்க வேண்டிய புத்தகமாகவும் ஏனென்றால் எதிர் கருத்து உடையவர்கள் ,எதிர்க்கட்சிக்காரர்கள் ,மாற்று கருத்து கொண்டவர்கள் என பலதரப்பட்டவர்கள் காமராசரின் பண்பை குண நலன்களை பற்றி எழுதியவைகள் ஆகும் 

 

*காமராசர் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய வார்த்தை "ஆகட்டும் பார்க்கலாம் "எப்போதும் எந்த செயலுக்கும் பயன்படுத்தும் வார்த்தை இதுவே ஆகும் 

 

*ஆங்கிலத்தை அகற்றி விட்டால் அந்த இடத்தில் இந்தி வந்து உட்கார்ந்து விடும் என்கிற பயம் பெருந்தலைவருக்கு உண்டு அதே நேரத்தில் தமிழுக்கு ஆபத்து வரக்கூடாது என்று அழுத்தமான எண்ணம் கொண்டிருந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்று கூறினார் கலைஞர் கருணாநிதி 

 

*இரட்டை மலை சீனிவாசன் பேரன் பரமேஸ்வரனை அமைச்சராகி அவருக்கு அறநிலையத்துறையை ஒதுக்கினார் 

 

*பரமேஸ்வரன் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தாலும் தற்போது அவருக்கு முதல் மரியாதை தந்து தான் ஆக வேண்டும் என்பதற்காக என்றார் காமராசர் என்று கூறினார் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நல்லக்கண்ணு 

 

*நெருக்கமான உறவுகளை காமராசர் எப்போதும் நெருங்கவே விட்டதில்லை என்றார் காமராசரின் பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணன் 

 

*காமராசர் எப்போதும் சவால் விடுவதில்லை சாதிப்பது மட்டுமே அவரது பாணி என்றார் முன்னாள் சபாநாயகர் எஸ் செல்ல பாண்டியன் 

 

*நான் காமராஜரின் மதியுகத்தையும் தொலைநோக்குப்பார்வையும் நினைத்து வியந்தேன் மனிதர்களின் முகக்குறிப்பை வைத்து ஒரு சில கணங்களில் அவர்களைப் பற்றிய முடிவுக்கு வந்துவிடக்கூடிய ஞான திருஷ்டி கொண்டவர் பெருந்தலைவர் காமராஜர் என்றார் முன்னாள் அமைச்சர் ஜி.புவராகவன் 

 

*முதலமைச்சரான பிறகு ரேஷன் அரிசி தான் சாப்பிட்டார் அரசு கடையில் தான் பொருட்கள் வாங்கினார் என கூறினார் காமராசரின் உதவியாளர் வைரவன் 

 

*தன்னை வீழ்த்த நினைத்த பெண்மணியை வாழ்த்த நினைத்தார் காமராசர் என்று கூறினார் நாத்திகம் ராமசாமி 

 

*இப்படி இந்தப் புத்தகம் முழுவதும் காமராஜர் பற்றி வியக்க வைக்கும் தகவல்கள் பல நிறைந்துள்ளது 

 

*ஒரு மாபெரும் சாதனை மனிதர் காமராஜரைப்பற்றி அறிந்து கொள்ள அவர் வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்ள இந்த புத்தகம் வரலாற்றுப் பெட்டகம் ஆகும் 

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301 

Post a Comment

0 Comments