*தினம் ஒரு புத்தகம்* - வைகறை மேகங்கள்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:197

தேதி:08-02-2023

புத்தகம் எண்ணிக்கை:197

புத்தகத்தலைப்பு: வைகறை மேகங்கள்

ஆசிரியர்:கவிப்பேரரசு வைரமுத்து

 

**கவிப்பேரரசின் முதலாவது கவிதைத்தொகுப்பாகும்

 

** பதினேழு வயதிற்குள் எழுதிமுடித்து பத்தொன்பதாவது வயதில் அச்சேற்றி இருக்கின்றார்கள்.

 **கவிதைகளைப்படிக்கும்போது பிரமிப்பாக இருக்கின்றது. இவ்வளவு சிறியவயதில் இத்தனை கவி ஆளுமை எப்படி சாத்தியமாயிற்று? 

 

**கவித்தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கி இருப்பவர் கவியரசு கண்ணதசன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

** கண்ணகி பற்றிய கவிதை

கறுப்பு நிலா....

 

கண்ணகியே தாயே கறுப்பான இரும்பிடையே

 

பொன்னகையே பூவே புரட்சி துறவியவன்

 

தீட்டிவைத்த காவியமே திருமகளே தேனுக்குள்

 

போட்டுவைத்த பழம்போலப் பூந்தமிழர்க் கினிப்பவளே..

 

மாதத்தின் முழுநிலவே மறமகளே உன்னினிய

 

பாதத்தில் சின்னமகன் பாட்டுமலர் தெளிக்கின்றேன்

 

உச்சிமிகக் குளிர்ந்துவிட உன்னை புகழ்ந்து விட்டேன்

 

நிச்சயமாய் இனிஎன் நினைப்பைச் சொல்லுகிறேன்...

 

** உலகம் பற்றிய கவிதை

உன்னை பார்த்து உலகம் குரைக்கும்

 

''தன்னம்பிக்கை தளர விடாதே''

 

இரட்டை பேச்சு பேசும் உலகம்

 

மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே....

 

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு

 

உலகின் வாயில் இரட்டை நாக்கு

 

** ஒவ்வொரு இரவுகளையும் அழகாய் மொழி பெயர்த்துள்ளார்

 

என்னோட ராவுகள்....

 

சில ராத்திரிகள் எனக்கின்னும்

 

விடியவே இல்லை..

 

அந்த இரவுகளைச்

 

சூரியன் துடைத்துவிட்டாலும்

 

என்னுள் அந்த இருள்வெள்ளம்

 

விடியவே இல்லை....

 

விளயாட்டுச் சிறுவயதில்

 

வெறிநாய் கடிக்க

 

நாய் போல் குரைத்துசாகும்

 

நரகத்தை எண்ணியெண்ணி

 

அச்சத்தில் விழித்திருந்த

 

ஆஸ்பத்திரி ராத்திரி...

 

** காதலை அழகாய் கூறியவை

 

அன்னமே காதலியே ஆவி கலந்தவளே

 

உன்னை பிரிகின்ற ஓவியமே - கண்ணீரும்

 

ஓடிப் பெருக உளமுருகி நம்பிரிவைப்

 

பாடி முடிக்கின்றேன் பார்....

 

வானத்தில் வட்டநிலா வந்ததடம் இல்லையென

 

ஆனதுபோல் நம்காதல் ஆனதடி

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments