*தினம் ஒரு புத்தகம்* - குழந்தை மொழியும்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:192

தேதி:03-02-2023

புத்தகம் எண்ணிக்கை:192

புத்தகத்தின் பெயர் :குழந்தை மொழியும்

ஆசிரியரும் 

மூல நூல் ஆசிரியர் : கிருஷ்ணகுமார் தமிழாக்கம் :முனைவர்.என்.மாதவன் 

பக்கங்கள்:106

விலை:40

பதிப்பகம்:நேஷனல் புக் டிரஸ்ட்

 

*இந்தப்புத்தகம் யுனிசெப் அமைப்பால் 1986 ஆம் ஆண்டு முதன் முதலாக வெளியிடப்பட்டது 

 

*மூலநூலை மிக எளிய வகையில் அனைவரும் படிக்கும் வகையில் மிக அழகாக தமிழில் மொழி பெயர்த்தவர் முனைவர்.என்.மாதவன் அவர்கள்

 

* தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், நர்சரி மற்றும் மழலைப் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் போன்ற அனைவரும் படிக்க வேண்டிய பயன் தரக்கூடிய புத்தகமாகும்

 

* பொதுவாக குழந்தைகளோடு செயல்படும் அனைவருக்கும் இந்தப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 

 

*குழந்தைகளின் வாழ்வில் பேசுதல், வாசித்தல், எழுதுதல் போன்ற அடிப்படை செயல்பாடுகளில் மொழியின் பங்கை ஆராயும் இந்தப்புத்தகம் அவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தக்கூடிய பல்வேறு செயல்பாடுகளையும் விளையாட்டுகளையும் கொண்டுள்ளது 

 

*மூலநூலில் உள்ளக்கருத்துக்களை தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யாமல் சூழலுக்கு ஏற்ப மொழிபெயர்ப்பு செய்துள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு ஆகும் 

 

*அந்த வகையில் முனைவர்.என்.மாதவன் அவர்கள் சிறந்த உளவியல் ஆசிரியரும் கூட குழந்தை உளவியலை அழகாய் மொழிபெயர்த்த குழந்தைகள் விரும்பும் குழந்தை மாதவன் ஆவார் 

 

*இந்தப்புத்தகத்தில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் மத்திய பிரதேசத்தில் உள்ள டிகம்கர் என்ற இடத்தில் அமைந்துள்ள குழந்தைகள் இலக்கிய மையத்தில் 1985 ஆம் ஆண்டு சோதனை செய்து பார்க்கப்பட்டவை 

 

*மொழியினை கருத்து பரிமாற்றத்திற்காக ஒரு கருவியாக நம்மில் பலரும் கருதுகிறோம் ஆனால் சிந்திப்பதற்கும் உணர்வதற்கும் பல்வேறு சூழல்களில் வினைபுரிவதற்கும் மொழி பயன்படுகிறது என்பதை அடிக்கடி மறந்து விடுகிறோம் 

 

*குழந்தையின் ஆளுமையை திறமைகளை வளர்த்தெடுப்பதில் குழந்தையின் மொழி முக்கிய பங்கு வைக்கிறது எனவே மொழியின் முக்கியத்துவம் உணர வேண்டும் குழந்தைகள் உடன் இருப்பவர்கள் 

 

*குழந்தைகளை பேச வைக்க அவர்களுக்கு பல்வேறு விதமான சூழல்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.குழந்தைகள் பேசப் பேச தான் ஆளுமை வளரும் 

 

*இளம் குழந்தைகளின் ஆசிரியர்கள் சந்திக்கும் பல்வேறு சவால்களில் குழந்தைகளுக்கு வாசிப்பை அறிமுகப்படுத்துவது மிகவும் சிக்கலானது அதே நேரம் இது ஒரு பரவசமூட்டும் பணியும் கூட 

 

*வீட்டில் குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் வாசித்தாலே போதும் குழந்தைகள் வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள் 

 

*அச்சடிக்கப்பட்ட அல்லது எழுதப்பட்ட ஒரு செய்தியின் பொருளோடு தன்னை தொடர்பு படுத்தி வாசிக்க இயலுவது சிறந்த வாசிப்புத்திறன் என்று குழந்தைகளுக்கு உணர வைக்க வேண்டும் 

 

*குழந்தைகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்கு நமக்கு பலவகையான நல்ல பாடல்கள் தேவை நல்ல பாடல்களை வாசித்துப் பாடுவதன் மூலம் குழந்தைகளின் வாசிப்போடு மனப்பாடம் மற்றும் நினைவு சக்தியும் மேம்படுத்தலாம் 

 

*ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் பல நல்ல பாடல்களை இந்தப்புத்தகத்தில் ஆசிரியர் தந்துள்ளார் 

 

*வட்டமான தட்டு 

தட்டு நிறைய லட்டு 

லட்டு மொத்தம் எட்டு 

எட்டில் பாதி விட்டு 

எடுத்தான் மிதி கிட்டு 

எளிய வார்த்தைகளில் குழந்தைகள் விரும்பும் வகையில் நிறையப்பாடல்கள் இந்தப்புத்தகத்தில் தந்துள்ளார் 

 

*எழுதுதல் என்பது பேச்சின் விரிவாக்கம் என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும் 

 

*எழுதுதல் என்பது ஒரு கலை அதை தொடர்ந்து செய்யச்செய்ய தான் மேம்படும் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும் 

 

*இந்தப் புத்தகம் அனைவருக்கும் அடிப்படையான மொழி, எழுதுதல் ,பேசுதல் ,படித்ததால் என்பதைப்பற்றி விரிவாக விளக்கி உள்ளது 

 

*இறுதிப்பகுதி ஆசிரியர்களுக்கு மிகவும் தேவையானது பாடப்புத்தகங்கள் தேர்வு முறைகள் மற்றும் இடவசதிகள் எனக்கு மிகவும் பிடித்த பகுதியாகும். 

 

*இந்தப்புத்தகம் தலைப்பு வைத்துப் பார்த்தால் குழந்தைகளுக்கு உரியது என்று தோன்றலாம் ஆனால் படித்தால் தான் தெரிகிறது இந்த புத்தகம் கலைத்திட்ட வல்லுநர்கள், பாடத்திட்ட வல்லுநர்கள், வினா வடிவமைப்பாளர்கள், கல்வியாளர்கள் என அனைவருக்கும் மிக அவசியமான புத்தகம் ஆகும் 

 

*இந்தப்புத்தகத்தின் சிறப்புகளில் ஒன்று இதில் இடை இடையே உள்ள பெட்டிச்செய்திகள் ஆகும் ஒவ்வொன்றும் அருமை 

 

*இந்தப்புத்தகத்தில் உள்ள செயல்பாடுகள் ஒவ்வொன்றும் வகுப்பறைகளில் அனைவரும் செய்து பார்க்கலாம் 

 

*குழந்தைகளின் மொழி ஆற்றலை மேம்படுத்த இந்தப்புத்தகம் கண்டிப்பாக அனைத்து நிலை ஆசிரியர்களும் பெற்றோர்களும் படிக்க வேண்டிய புத்தகமாகும் 

 

*முனைவர் என்.மாதவன் படைப்புகளில் இதுவும் ஒரு மணிமகுடம் ஆகும்.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments