2026–2027ஆம் கல்வியாண்டில், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு முடிய கணிதம் மற்றும் அறிவியல் பாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்றுவிப்பவர்களுக்கான பயிற்சியினை (ToT) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அளவிலான பயிற்சியினை 23.11.2026 முதல் 27.11.2026 ஆகிய ஐந்து நாள்களில் உண்டு உறைவிடப் பயிற்சியாக சென்னை, புனித தோமையார் பன்னாட்டுப் பயிற்சி மையத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் இணைப்பு-I இல் உள்ள கணிதம் மற்றும் உயிரியல் பாடம் கற்பிக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முதன்மைக் கருத்தாளர்களாக செயல்படுவர்.
இப்பயிற்சியில் கலந்துகொள்ளவிருக்கும் இணைப்பு (I & II) உள்ள கணிதம் மற்றும் அறிவியல் கற்பிக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்திடுமாறு தொடர்புடைய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இப்பயிற்சியினை சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பொறுப்பேற்று நடத்திடுமாறும், இந்நிறுவன பட்டதாரி ஆசிரியர் மேக்டலின் பிரேமலதா என்பார் ஒருங்கிணைப்பாளராக செயல்படுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், நாமக்கல் மாவட்டம், எஸ்.பி. புதூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளராகப் பணிபுரியும் திரு. M. தங்கவேல் என்பாரை பயிற்சியில் உரிய நாளில் பங்கேற்கும் பொருட்டு, பணியிலிருந்து விடுவித்திடுமாறு தொடர்புடைய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு தெரிவிக்கப்படுகிறது.
இப்பயிற்சிக்கான உத்தேச செலவினம் சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வங்கிக் கணக்கிற்கு பின்னர் இணைப்பில் உள்ளவாறு வழங்கப்படும். மேலும், இப்பணிமனையில் இந்நிறுவன துணை இயக்குநர் (பயிற்சி) உடனிருந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது
பள்ளி கல்வித்துறை ToT பயிற்சி ஆசிரியர்களுக்கான 5 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி விவரங்கள் 2026 - 2027 Pdf Link : Download Here

0 Comments