*தினம் ஒரு புத்தகம்* - ரெட்இங்க் ஆசிரியரின் பெயர் :ச.க. முத்து கண்ணன்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:191

தேதி:02-02-2023

புத்தகம் எண்ணிக்கை:191

புத்தகத்தின் பெயர் :ரெட்இங்க் ஆசிரியரின் பெயர் :ச.க. முத்து கண்ணன் 

பக்கங்கள் :  103 

விலை : 95 

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் 

 

*என்ன செய்வது 

சிவப்பு மையால் தான் 

திருத்த வேண்டி இருக்கிறது 

என்றார் கவிஞர் புகழேந்தி. அவரின் வரிகள் ஆயிரம் அர்த்தங்களை உடையது 

 

*சிவப்பு மைக்குப்பின் உள்ள மனதை நெருடும் அனுபவங்களில் சில அனுபவங்களை மட்டுமே கதையாகத் தந்துள்ளார் 

 

*மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன படிக்கும்போது இப்புத்தகத்தின் எழுத்து நடை நம்மை நிகழ்வு நடைபெறும் சூழலுக்கே கொண்டு செல்கிறது எழுத்து நடை மிகவஅருமை மனதைக் கவர்கிறது 

 

*எனக்கு மிகவும் பிடித்தத்தலைப்பு "வாத்தியார் தினம்" என்னுடன் பயணித்த  என் நண்பர்கள் பலரை நினைவுக்கு கொண்டு வருகிறது.

 

* விருதுகள் பெரும் 

தருணங்களை விட 

பிஞ்சு கையால் 

வாழ்த்து அட்டை பெறும்

 தருணம் மட்டற்ற மகிழ்வானது ...!

அனுபவப்பட்டவர்களால் மட்டுமே உணர முடிகிறது முடியும்

 

*இலக்கின்றி பயணித்து இறுதியில் ஆசிரியர் பணியினை பெற்று இலக்கினை நிர்ணயித்துக் கொண்ட தருணங்களை இப்புத்தகம் நினைத்துப் பார்க்க வைக்கிறது 

 

*கீச் கீச் என்ற கதையில் புத்தகம் கொடுத்து கோழிக்குஞ்சு பெற்ற மாணவர்களின் குழந்தை மனது புலனாகிறது பல்வேறு தருணங்களில் நம்மையும் குழந்தையாக்கி விடுவார்கள் 

 

*மாணவர்கள் பெற்றோர்களின் குடும்பப் பிரச்சனை காரணமாக சில குழந்தைகளின் கல்வி திசை மாறி போவதை படிக்கும் போது நமக்கு கண்ணீர் தான் வருகிறது 

 

*ஒவ்வொரு குழந்தையின் இடைநிற்றல் பின்னாலும் பல உணர்வுப்பூர்வமான கதைகள் மறந்துள்ளது 

 

*நீலப்பந்து கதையில் உள்ள ராசாவை போல் பல ராசாக்கள் வகுப்பறையில் நிறைந்துள்ளார்கள் இன்றைய ஆசிரியர்கள் தாயுள்ளத்தோடு அவர்களை அரவணைத்துக் கொள்கின்றனர் 

 

*பரு கதை  விடலைப்பருவ மாணவர்களின் அறியாப் பருவநிலை உணர்த்துகிறது இத்தகைய தருணங்களில் தான் மாணவர்களுக்கு உடற்கல்வியோடு உடலில் அறிவு கல்வியும் தேவை 

 

*ஜெயந்தி டீச்சர் கதை போல் பல தாய் உள்ளம் கொண்ட ஆண் தலைமை ஆசிரியர்கள் இன்னும் இருக்கிறார்கள் இந்தக் கதையினை படிக்கும் போது நான் படித்த போது பார்த்த பல நல்ல ஆசிரியர்கள் நினைவுக்கு வருகிறார்கள் 

 

*ஒவ்வொரு கதையையும் படிக்கும் போது மனதிற்கும் இனம்புரியாத வலி ஏற்படுகிறது இதுதான் இவரின் கதைக்கு கிடைத்த வெற்றியோ..?இது கதை அல்ல நிஜம் என உணர்த்துகிறது 

 

*ரெட் இங்க் நமது மனதிற்குள் நீங்கா இடம் பிடித்த கிரீன் இங்க் கதைகள் ஆகும்

 

* கண்டிப்பாக மனிதத்தை நேசிப்பவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments