*தினம் ஒரு புத்தகம்* - நாட்டுக்கு உழைத்த நல்லவர் விஸ்வேஸ்வரய்யா




*தினம் ஒரு புத்தகம்*

நாள்:198

தேதி:09-02-2023

புத்தகம் எண்ணிக்கை:198

புத்தகத்தின் பெயர்:நாட்டுக்கு உழைத்த நல்லவர் விஸ்வேஸ்வரய்யா

ஆசிரியர் பெயர்:சு.கலிய பெருமாள்

பக்கம்:80

விலை:30

பதிப்பகம்:பழனியப்பா பிரதர்ஸ்

 

*கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி என கருதப்படும் எம். விஸ்வேஸ்வரய்யா ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் ஆவார். 

 

* இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது மத்திய அரசால் வழங்கி கொவ்ரவிக்கப்பட்டது. 

 

*சுதந்திர இந்தியாவின் எதிர்காலத்திற்காக வியக்கவைக்கும் கட்டுமானப் பணிகளை ஏற்படுத்தி மாபெரும் சாதனையாளராக விளங்கிய எம். விஸ்வேஸ்வரய்யாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் இப்புத்தகத்தில் உள்ளது

 

*எம். விஸ்வேஸ்வரய்யா அவர்கள், 1860  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15  ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சிங்கபல்லபுரா (கோலார் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு) மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் சீனிவாச சாஸ்திரிக்கும், வெங்கடலக்ஷ்மியம்மாவுக்கும் மகனாகப் பிறந்தார்.

 

*ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

பதினைந்து வயதில் தந்தையை இழந்த விஸ்வேஸ்வரய்யா அவர்கள், தன்னுடைய ஆரம்ப கல்வியை சிங்கபல்லபுராவிலும், உயர் கல்வியை பெங்களூரிலும் பயின்றார். 1881 ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்டப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்த அவர், பின்னர் தன்னுடைய கட்டடப் பொறியியல் கல்வியை “புனே அறிவியல் கல்லூரியில் முடித்தார்.

 

*சிறந்த பொறியாளராக

தன்னுடைய பொறியியல் படிப்பை முடித்த பிறகு, மும்பை பொதுப் பணித்துறையில் ஒரு பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர், “இந்திய பாசன ஆணையத்தில் பணியைத் தொடங்கிய அவர், தானியங்கி வெள்ளமடை மதகை வடிவமைத்து, 1903ல் புனேவிலுள்ள “கடக்வசல நீர்தேக்கத்தில் அதை செயல்படுத்தி வெற்றியும் கண்டார். 

 

*வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்க “வெள்ளதடுப்புமுறை அமைப்பையும் மற்றும் துறைமுகங்களை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் “தடுப்பு அமைப்பையும் வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். 

 

*ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்தேக்க அணைகளில் ஒன்றாக கருதப்படும் “கிருஷ்ணராஜ சாகர் அணையை காவிரியின் குறுக்கே உருவாக்கி பெரும் புகழ்பெற்றார். 

 

*1912 ஆம் ஆண்டு, மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார்

 

*இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதினார்

 

* நூறு வயத்திற்கும் மேல் அயராது பாடுபட்ட எம். விஸ்வேஸ்வரய்யா 1962 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 ஆம் தேதி தன்னுடைய நூற்றியொன்றாவது வயதில் காலமானார்.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments