*தினம் ஒரு புத்தகம்* - அறிஞர் அண்ணா




*தினம் ஒரு புத்தகம்*

நாள்:203

தேதி:23-02-2023

புத்தகம் எண்ணிக்கை:203

புத்தகத்தின் பெயர் :அறிஞர் அண்ணா 

ஆசிரியர் பெயர் :சு.சண்முகசுந்தரம்  பக்கங்கள் :142 

விலை: 50 

பதிப்பகம் :சாகித்திய அகடமி 

 

*பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கை வரலாறு இந்தப்புத்தகம் ஆகும் 

 

*அன்பின் உருவம் 

பண்பின் சின்னம் 

உயர்ந்த எழுத்தாளர் 

ஒப்பற்ற நாடக ஆசிரியர்

 நலம் தரும் தோழர் 

நல்லவருக்கு நல்லவர் 

காஞ்சியில் பிறந்தவர் 

கன்னித்தமிழ் வளர்ப்பவர் அனைவருக்கும் அண்ணா 

அவரது முழு பெயர் என்ன? அவரின் முழுப் பெயர் அண்ணாதுரை அவரின் வாழ்க்கை வரலாறே இந்தப்புத்தகமாகும்

 

* 1909 செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார் 

 

*பெற்றோர்கள் நடராஜ்- பங்காரு அம்மாள் 

 

*அண்ணாவின் இறுதி ஊர்வலத்திற்காக சென்னையில் குவிந்தவர்கள் எண்ணிக்கை 1.5 கோடி இது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் பதிவானது 

 

*சமூகநீதி ,மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையாளர் அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர் 

 

*காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவின் முதலமைச்சரான இரண்டாவது தலைவர்

 

* 53 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தவர்

 

* தமிழ்நாடு என பெயர் சூட்டியவர்

 

* அண்ணாவின் பெயரில் கட்சி பல்கலைக்கழகம், விமான நிலையம் ,சாலை ,நூலகம் என ஏராளமான நிறுவனங்கள் உள்ளன 

 

*அண்ணா தீவிரமான படிப்பாளி நீண்ட நேரங்களில் நூலகங்களில் செலவிடுபவர் 

 

*1931 பச்சையப்பன் கல்லூரி மாணவர் பேரவையின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் 

 

*சென்னை கோவிந்தப்ப நாயக்கர் நடுநிலைப்பள்ளியில் சிறிது காலம் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்

 

* 1937 இல் பெரியாரின் குடியரசு மற்றும் விடுதலை நாளிதழ்களில் துணை ஆசிரியராக பணிபுரிந்தார். 

 

*தன்னுடைய பத்திரிக்கைக்கு திராவிட நாடு என பெயரிட்டார் 

 

*1949 இல் செப்டம்பர் 17 திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார் 

 

*1957 இரண்டாவது பொதுத் தேர்தலில் ஈடுபட்டு 15 எம்எல்ஏ, 2எம்பிக்கள் வெற்றி பெற்றனர் அண்ணா காஞ்சிபுரம் வெற்றி பெற்றார் 

 

*1962 ல் திமுக 50 தொகுதிகளில் வென்றது எம்எல்ஏ தேர்தலில் தோல்வியடைந்த அண்ணா நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டார் 

 

*மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே அண்ணாவின் புகழ் பெற்ற முழக்கம் 

 

*1967 மார்ச் ஆறாம் தேதி அண்ணா முதல்வரானார் 

 

*1967 ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு நாள் அன்று தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் என என்னும் பெயர்ப்பலகையை கோட்டை முகப்பில் திறந்து வைத்தார் இதை மத்திய அரசும் தடையின்றி ஏற்றுக்கொண்டது 

 

*தமிழ்நாட்டில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தியது அண்ணாவின் மாபெரும் சாதனை 

 

*1969 பிப்ரவரி மூன்றாம் தேதி மறைந்தார்

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments