*தினம் ஒரு புத்தகம்* - எனக்கும் ஒரு கனவு மூலநூல்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:193

தேதி:04-02-2023

புத்தகம் எண்ணிக்கை:193

புத்தகத்தின் பெயர் : எனக்கும் ஒரு கனவு மூலநூல் ஆசிரியர் : கவுரிசால்வி

தமிழாக்கம் :மு.சிவலிங்கம் 

பக்கங்கள் :412 

விலை: 400 

பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் 

 

*தனது வாழ்க்கையை வர்க்கீஸ் கூரியன் விவரிக்க உயிரோட்டமான விறுவிறுப்பான நடையில் அதற்கு நூல் வடிவம் கொடுத்தவர் கவுரி சால்வி மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் 

 

*மூலநூலைப்படித்து அதை மொழி பெயர்த்தவர் மு சிவலிங்கம் 

 

*24 மாநிலங்கள் 

200 பால் பண்ணை தொழில் கூடங்கள் 11400 கிராம கூட்டுறவு சங்கங்கள் 

ஒரு கோடியே 10 லட்சம் உறுப்பினர்கள் தினமும் ஒரு கோடியே 80 லட்சம் லிட்டர் பால் சேகரிப்பு 

வருட விற்பனை வருவாய் 2882 கோடி ரூபாய் 

 

இத்தகுசாதனைக்கும் பால் உற்பத்தியில் முதன்மையான தேசமாக பாரதத்தை பாரில் உயர்த்திய இந்த வெண்மைப்புரட்சியில் விவசாயிகளை வழி நடத்திச் சென்ற வெற்றி நாயகர் வர்கீஸ் குரியனின் வாழ்க்கை வரலாறு இந்த புத்தகம் ஆகும் 

 

*இது ஒரு தனி மனிதனின் வாழ்க்கை கதை அல்ல ஒன்றுபட்ட ஏழை விவசாயிகளின் அதிசய சாதனைக்கதை 

 

*தனது வாழ்வில் எதிர்கொண்ட சோதனைகள் சுயநல அரசியல்வாதிகள் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சுரண்டல் கும்பல்களின் சதித்திட்டங்கள் பக்கபலமாக துணை நின்ற தலைவர்களின் வலுவான ஒத்துழைப்பு மக்கள் நலன் மறந்த ஆணவ அதிகாரத்தின் அலட்சியப் போக்கு என திடுக்கிட வைக்கும் திகைக்க வைக்கும் அடுக்கடுக்கான நிகழ்வுகளைத் தனது வாழ்க்கை வரலாறாக வடித்துதந்துள்ள நூல்தான் எனக்கும் ஒரு கனவு 

 

*கேரளாவில் கள்ளிக்கோட்டையில் பிறந்தவர் சென்னை லயோலாவில் அறிவியல் பட்டம் கிண்டி பொறியில் கல்லூரியில் பட்டப்படிப்பு அமெரிக்க மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் அணுசக்தி இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றவர் 

 

*இந்தியாவின் பால் உற்பத்தியை அதிகரித்து வெண்மைப்புரட்சியில் சாதித்த வெற்றி நாயகன்

 

* ராமன் மக்காசோ விருது, வாட்டர் அமைதி விருது ,உலக உணவு விருது ,பத்ம விருது, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, பத்ம விபூஷன் விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப்பெற்றவர் வர்கீஸ் கூரியன் 

 

*இந்தியாவின் பால் தலைநகரம் என்று ஆனந்த் நகரை உருவாக்கியவர் 

 

*நீ கொண்டு வர விரும்புகிற மாற்றம் உன்னில் இருந்தே ஆரம்பம் ஆகட்டும் என்ற காந்திஜியின் வாக்கு தான் என்னுடைய தாரக மந்திரம் என்று கூறியவர் 

 

*எங்களுடைய கனவுகள் மிகப்பெரியவை அவை எங்களுடைய லட்சியம் மிக உயர்ந்தது ஆனால் படிப்படியாக அடிமேல் அடிவைத்து தான் நாங்கள் முன்னேறினோம் என்று கூறியவர் வர்கீஸ் குரியன்

 

*இந்தப் புத்தகம் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய ஒரு வாழ்க்கை வரலாற்று புத்தகம் ஆகும்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments