*தினம் ஒரு புத்தகம்* - பானை செய்வோம் பயிர்கள் செய்வோம்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:226

தேதி:18-03-2023

புத்தகம் எண்ணிக்கை:226

புத்தகத்தின் பெயர் : பானை செய்வோம் பயிர்கள் செய்வோம் 

ஆசிரியர் பெயர் : காஞ்சனா ஐலைய்யா

பக்கங்கள்: 148 

விலை :65 

பதிப்பகம் :துளிகா பதிப்பகம் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*இந்நூலில் கால்நடைகளை மேய்ப்போர் ,தோல் தொழிலாளர்கள் ,பானை செய்வோர் ,விவசாயிகள் ,நெசவாளர்கள் ஆகியோரின் அறிவியல் மற்றும்  கலை திறன்களை வெளிச்சமிட்டு காட்டுகிறார் 

 

*நூல் ஆசிரியர் ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியர் 

 

*இந்த நூலாசிரியர் நூலின் சமர்ப்பணமே நம்மை நூலைப் படிக்கத்தூண்டுகிறது 

இந்தியாவிலும் உலகத்திலும் உள்ள எழுதவும் படிக்கவும் அறியாமல் உணவுப் பொருள் மற்றும் உபயோகமான பொருள்கள் தயாரிப்பதில் உழைக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 

 

*பள்ளியிலும் வீட்டிலும் உடல் உழைப்புக்கான மதிப்பை பற்றி சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம் 

 

*ஒவ்வொரு தொழிலில் அறிவியலும் வரலாற்று ரீதியாகவும் உலக அளவிலும் எப்படி வளர்ந்து என்பதை புத்தகம் விவரிக்கிறது 

 

* நல்லக் கருத்துக்களை உருவாக்கி பகுத்தறியவும் அறிவியல் மனப்பான்மை மிக்க ஜனநாயகமான இந்தியாவை கட்டமைப்பதில் இந்த புத்தகம் வழிகாட்டுகிறது

 

* இன்று நாம் உண்ணும் உணவுகளை கண்டறிந்த முதன்மை ஆசான்கள் பழங்குடியினர் 

 

*இந்தப்புத்தகத்தில் மொத்தம் 12 கட்டுரைகள் உள்ளது 11 தொழில்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது 

 

*இடை இடையிடையே உள்ள பெட்டிச் செய்திகள் நிறைய பொது அறிவு தகவல்களைத் தருகிறது

 

* தடம் பதித்தவர்கள் மண்பொருள் வினைஞர் (குயவர்).

 

* பட்டையும் துணியையும் கண்டுபிடித்தவர்கள் துணியில் துணி நெய்து வடிவங்களை படைத்தவர்கள் நெசவாளர்கள் 

 

*பண்பாட்டின் அடிப்படையைக் கண்டுபிடித்தவர்கள் தானியங்களாலும் பருப்புகளாலும் கனிகளாலும் காய்களாக வும் நமக்கு ஊட்டம் தருபவர்கள் விவசாயிகள் 

 

*முதன்முதலாக வேதிவினை சோப்பை கண்டுபிடித்தவர்கள் துணிகளை சுத்தம் செய்து நம்மை நோய்களிலிருந்து காப்பாற்றுபவர்கள் சலவை தொழிலாளிகள் 

 

*இந்த நூல் படிக்க படிக்க ஒவ்வொரு அடிப்படை தொழில் செய்பவர்கள் மீதும் அந்தத்தொழில் மீது மதிப்பு ஏற்படுகிறது

 

* உலகில் அனைத்து தொழிலும் தொழிலாளர்களும் சமமே என்பதை இந்த நூல் உணர்த்துகிறது

 

         *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments