*தினம் ஒரு புத்தகம்* - வள்ளுவ மையிரிவு

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:218

தேதி:10-03-2023

புத்தகம் எண்ணிக்கை:218

புத்தகத்தின் பெயர் :வள்ளுவ மையிரிவு 

ஆசிரியர் பெயர் :ராசித் கசாலி 

விலை :80

பக்கங்கள் : 70 

பதிப்பகம் :விஜயா பதிப்பகம் 

 

*பெரு நிறுவனங்களில் ஆலோசகராகவும் வாழ்வியல் வழிகாட்டியாகவும் பெரும் கல்வியாளராகவும் திகழும் ராசித்  கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு குக் கிராமத்தில் எளிய குடும்பம் ஒன்றில் பிறந்தவர் 

 

*தமிழக அரசினால் நியமனம் செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் ஆவார் 

 

*தங்கள் சுய மகிழ்ச்சியை நாடுபவர்கள் மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக வாழ வேண்டும் என்று ஸ்ரீ நாராயண குரு சொன்னது போல பிறர் நலம் சார்ந்த வாழ்க்கை வாழ்வதன் மூலம் மனிதன் தன் வாழ்க்கையை நலமாக்கி கொள்ளலாம் என்பதை திருக்குறள் அறிவுறுத்துகிறது 

 

*சாதி மதம் போன்ற எந்த வேறுபாடும் இன்றி அனைத்து மனிதர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுமறையான திருக்குறட் கருத்துக்களை அறிமுகப்படுத்துவதே இந்நூல் ஆகும் 

 

*மொத்தம் 11 தலைப்புகள் உள்ளன எனக்கு பிடித்த தலைப்பு தன்னடக்கம் ஆகும் 

 

*அறம் கண்டு அகம் மகிழ்ந்து மறம் கண்டு மனம் பதிப்பவர் யாரோ அவரே உண்மையான இறை நம்பிக்கையாளர் 

 

*தங்களை விட தங்கள் பிள்ளைகள் அறிவாளிகளாகவும் இருப்பது பெற்றோருக்கு இனிமை தரக்கூடியதாகவும் 

 

*தர்மத்தின் உண்மையை அறிந்தவர்களின் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் இனிமையும் அன்பும் பொருந்தி குற்றமில்லாதவர்களை திகழும் என்கிறார் திருவள்ளுவர் 

 

*தனக்குள் பொங்கும் சீற்றத்தை கட்டுப்படுத்தும் மன கற்றல் உடையவர் யாரோ அவரே வலிமையானவர் 

 

*நம்மைச் சுற்றி உள்ள எளியவர்களுக்கு நாம் வாழும் காலம் வரை நலம் புரிந்து நம் முழு வாழ்வையும் அர்த்தமுடையதாக செய்வதை காட்டிலும் மேலானது வேறு என்ன இருக்க முடியும் 

 

*11 கட்டுரைகளும் நம்மை கவரும் வகையில் எளிய எழுத்து நடையில் எழுதப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பாகும்

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments