*தினம் ஒரு புத்தகம்* - ஜி.டி.நாயுடு

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:199

தேதி:10-02-2023

புத்தகம் எண்ணிக்கை:199

புத்தகத்தின் பெயர்:ஜி.டி.நாயுடு 

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன் 

விலை:60 

பக்கங்கள்:99

பதிப்பகம்:ராமையாபதிப்பகம்

 

*அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு...!

ஜி.டி. நாயுடு என்று பிரபலமாக அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மாமேதை இவரின் வாழ்க்கை வரலாறு இந்தப்புத்தகத்தில் உள்ளது

 

*இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்து பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தவர். 

 

*கோயம்புத்தூரில் உள்ள கலங்கல் என்னுமிடத்தில் 1893-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி பிறந்தார்.

 

*நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி டிக்கெட், ரேடியேட்டர் அதிர்வு கருவி, பேருந்து வழித்தட கருவி என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர்.

 

*ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. 

 

*ஒரு துவரை செடி ஆறடி உயரமும் எட்டு அவுன்ஸ் துவரையும் கொடுக்கும் ஆனால் நாயுடு வளர்த்த செடி ஒரு மரமாக வே வளர்ந்தது அது 65 அவுன்ஸ் துவரை கொடுத்தது. ராட்சச செடிகளை பார்த்து பிரமித்த சர்.சி.வி.ராமன் இது “தாவரவியல் விநோதம் என்று குறிப்பிட்டார்.

 

*விவசாயத் துறையிலும் பல சாதனைகள் புரிந்தார். இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன் என பெயரிட்டு ஜெர்மன் கவுரவித்தது.

 

*கோவை அவினாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி மற்றும் அருங்காட்சியகம் இவரது அறிவாற்றலை இன்றும் பறைசாற்றுகிறது

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments