*தினம் ஒரு புத்தகம்* - தமிழாற்றுப்படை

 



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:241

தேதி:02-04-2023

புத்தகம் எண்ணிக்கை:241 

 புத்தகத்தின் பெயர் :தமிழாற்றுப்படை ஆசிரியர் : வைரமுத்து 

பக்கங்கள் : 360 

விலை : 500 

பதிப்பகம் : திருமகள் நிலையம் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*நூலின் முதல் பக்கத்தில் 

எனக்கு 

நண்பராய் 

மந்திரியாய்

 நல்லாசிரியருமாய் 

விளங்கிய 

கலைஞர் அவர்களே 

நீங்கள் இல்லாமல்

 வெளிவரும் இந்நூலில்

நீங்களும்

இருக்கின்றீர்கள்

 எஎன்ற அறிமுகமே கலைஞருக்கும் வைரமுத்துவுக்கும் இடையேயான உறவு நேசம் நட்பு தெரிகிறது 

 

*மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நிலவெளிகளை ஜான் மார்ஷல் ஆழப் பிளந்து அகழ்வாய்வு செய்த பிறகுதான் உண்மையின் நாகரீகம் பூமியிலிருந்து புறப்பட்டு வந்தது

 

* திராவிட மொழிகளில் பழமையானது தமிழே அதுவே முதல் மொழியாக இருக்கலாம் என்று நான் நம்புகிறேன் இது பேராசிரியர் கில் கொண்ட நம்பிக்கை 

 

*தமிழ் மொழி என்பது பண்பட்டது இயல்பாக வளர்ந்த இலக்கிய வளம் கொண்டது என்பது மாக்ஸ்முல்லர் கூற்று

 

* திராவிட மொழிகளில் பழமையானது தமிழ்,தமிழ்பதிவே முதல் மொழியாக இருக்கலாம் என்று நம்புகிறேன் 

 

*மொழி ஓர் உயிர் ஒலியே அதன் உயிர் எழுத்து அதன் உடல் அது தன்னை பேசும் மனிதர்களை இயக்குகிறது அவர்களின் இயக்கமும் வருகிறது 

 

*இறந்த காலத்தை சுமந்து கொண்டு நிகழ்காலத்தில் இயங்கிக்கொண்டு எதிர்காலத்தில் பெருவெளியில் பயணிக்கிறது 

 

*தயிரும் வெண்ணையும் பாலுக்குள் நிறைந்திருப்பது போல யாப்பும் அணியும் தொல்காப்பியத்துக்குள் துணிந்து உரைகின்றன 

 

*இந்நூலில் 24 தமிழ் அறிஞர்கள் பற்றிய தகவல்களை தந்துள்ளார் 

 

*மூன்று அதிகாரங்கள் அதிகாரத்திற்கு 27 இயல்கள் இளம்பூரணர் கருத்துப்படி 1595 நூற்பாக்கள் தொல்காப்பியத்தில் உள்ளன

 

*நச்சினார்க்கினியார் கணக்குப்படி 1611 பாக்கள் உடையது தொல்காப்பியம் 

 

*மனிதராகிய உயர்தனிக்கும் மனிதர் அல்லாதவைக்கும் இயற்கை இட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தில் மூலப்படியே முற்றிலும் உணர்ந்து கொண்ட முதற்றமிழ் கவி கபிலர்

 

*ஆற்றுப்படை என்பதற்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் தரும் விளக்கம்: ஆற்றுப்படுத்துதல் என்றால் அதனை நோக்கிச் செலுத்துதல் என்கிறார் . 

 

*தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் என்கிற நம்பிக்கையால் இக்கட்டுரைத் தொகுப்புக்கு தமிழாற்றுப்படை என பெயர் வைத்திருக்கிறார். 

 

*நம்முடைய மொழியும் அதன் பண்பாடும் பல எதிர்ப்புகளை ஆதிக்கங்களை முறியடித்து 3000 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக இன்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த சிறப்புக்கு காரணமான தமிழ்ச் சான்றோர்களை இந்த தமிழாற்றுப்படையில் வரிசைப்படுத்தி காட்டியிருக்கின்றார் வைரமுத்து

 

*தொல்காப்பியரில் இருந்து அவர் துவங்கி இருக்கின்றார்.

 

*மன்னனின் அவையில் தனி ஒரு பெண்ணாக நீதி கேட்ட கண்ணகி மூலம், முடியாட்சி காலத்திலும் ஜனநாயகம் நிலவியதை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் எடுத்துக் காட்டுகின்றது. 

 

*சங்க இலக்கிய தென்றலின் மணம் வீசிய 100 பூக்களைப் பாடிய கபிலரின் தமிழ் திறத்தை கவிப்பேரரசு எடுத்துக் காட்டியிருக்கின்றார். 

 

*ஆத்திகம் - நாத்திகம் என்று பேதமின்றி தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய சான்றோர்களின் பணிகளை விருப்பு வெறுப்பின்றி வைரமுத்து அவர்கள் இந்த நூலில் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கின்றார்.

 

*கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், உ.வே.சா, பாரதியார், மறைமலை அடிகளார், இறைப்பற்று இலக்கியம் செழிக்க செயல்படும் பெரும்பணியை பதிவு செய்திருக்கின்றார். 

 

*ஔவையார் என்பவர் ஒருவரா, ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு ஆட்கள் இருந்தார்களா, என்ற ஆய்வு நோக்கோடு தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பை மிகச் சிறப்பாக இந்த தமிழாற்றுப்படையில் அவர் எடுத்துக் காட்டியிருக்கின்றார்.

 

* படிக்க வேண்டிய நல்ல நூல் ஆகும்

       

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments