வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் ஆசிரியர் பெயர் : தெய்வச் சிலை பாகங்கள் : இரண்டு

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:284

தேதி:14-05-2023

புத்தகம் எண்ணிக்கை:284    

புத்தகத்தின் பெயர் :வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் 

ஆசிரியர் பெயர் : தெய்வச் சிலை பாகங்கள் : இரண்டு 

பக்கங்கள் : 475 

விலை : 175 

பதிப்பகம் :நக்கீரன் பதிப்பகம் 

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் என்ற நூலில் தமிழகத் தலைவர்களில் தலைவர்கள் தொடங்கி உலகத் தலைவர்கள் வரை அவர்களின் சொற்சுவை ,பொருட்சுவை, நகைச்சுவை  கலந்து அவர்களின் வார்த்தை ஜாலங்களையும் வர்ணஜாலங்களையும் தொகுத்து தந்திருக்கிறார் 

 

*வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் இரு பாகங்களிலும் உள்ளவை அனைத்தும் அற்புதமானவையே சிரிக்க சிந்திக்க மட்டுமல்ல வாழ்க்கை தத்துவத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது 

 

*மனிதனின் பேச்சு குழந்தையின் மழலை சொல்லிலிருந்து பிறந்தது 

 

*குழந்தை பேச்சை தான் வள்ளுவர் பெருமையாக பேசுகின்றார் 

 

*வாரியாரிடம் ஒருவர் வந்து பஸ்ஸில் ஏறி போகவே பயமா இருக்குங்க எங்கு பார்த்தாலும் விபத்து ஏற்படுகிறது என்றார் அதற்கு வாரியார் பஸ்ஸில் நாம ஏறிப் போனா நாம பிரயாணி பஸ் நம்ம மேல ஏறி போச்சுன்னா நாம் பிரியாணி என்றார் 

 

*இறக்கும் 16 மணி நேரத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் ஹிட்.லர்

 

*தமிழ்நாட்டு மக்கள்

 செழிப்பாய் வாழ 

இறைவன் நிலமும் வைத்தான். 

நீரும் வைத்தான். 

எல்லாம் வைத்தான். 

ஆனால் ஒன்று வைக்க

 மறந்து விட்டான் 

புத்தி இல்லை 

புத்தி இல்லை  என்றார்பாரதியார் 

 

*கைதான் மிகவும் சுத்தமானது ஏன் தெரியுமா இதை வேறு யாரும் உபயோக உபயோகப்படுத்த முடியாது அதனால் தான் என்றால் டாக்டர் ராதாகிருஷ்ணன் 

 

*பிறக்கும்போது கூடவே பிறக்குது தலைமுடி மீசையும் தாடியும் 15 அல்லது16 ஆண்டு கழித்து தானே வருது அதனால் தான் தலைமுடி அண்ணன் மீசையும் தாடி தம்பிகள் என்றார் பெரியார் 

 

*பெண்கள் நிறைந்த கூட்டம் ஒன்றில் நிக்சன் பேசும்போது கென்னடி சொல்வதை கேட்காதீர்கள் அவர் பேசுவதெல்லாம் பொய் என்றார் பின்னர் கென்னடி பேசும்போது இந்த கூட்டத்தில் உள்ள பெண்களைப் பார்த்து அழகானவர்கள் என்று கூறுகிறேன் இதைத்தான் நிக்சன் பொய் என்று சொல்கிறார் என்று நகைச்சுவையாக முடித்தார் 

 

*உன் எதிரிகள் வாயிலிருந்து ஆத்ம ரத்தமாக ஒரு வார்த்தைகளை உண்மையான பாராட்டு 

 

*இப்படி பல்வேறு அறிஞர்களின் வாழ்வியல் நடந்த சுவையான நிகழ்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது 

 

* மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மேடையில் பேசுபவர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் பயனுள்ள நூல்

 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments