தினம் ஒரு புத்தகம் - தமிழியல்

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:255

தேதி:16-04-2023

புத்தகம் எண்ணிக்கை:255     

நூலின் பெயர் : தமிழியல் 

ஆசிரியர் : நன்னன் 

விலை : 150 

பக்கங்கள் : 416 

பதிப்பகம் : முத்தமிழ் பதிப்பகம் 

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.  

*தமிழ் மொழி 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்,' என மூன்று பிரிவுகளை உடையது. இவையே 'முத்தமிழ்' என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. 

 

*முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். 

 

*அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாகத் தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. 

 

*செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். 

 

*தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும்.

 

*மா.நன்னன் மக்கள் தொலைக்காட்சியில் அறிவோம் அன்னைமொழி என்ற தலைப்பில் தமிழைப் பிழையின்றி எழுதவும், வாக்கியங்களை அமைக்கவும் நாள்தோறும் தகவலை வழங்கிவந்தார். 

 

*நிகழ்ச்சியின் வாசகர்களை தமிழ்ப் பண்ணையார்கள் என்று அழைத்தார்.

 

*நன்னனின் “பெரியாரைக் கேளுங்கள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.

 

*நன்னன் அவர்கள்  பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு. வி. க. விருது போன்ற விருதுகளையும் பெற்றவர்.

 

*இந்நூல் உள்ளுறை ,முகவுரை ,எழுத்து, சொல் தொடர் என ஐந்து பகுதிகளை உடையது 

 

*தொல்காப்பியர் போன்றோரின் தமிழ் மரபை பின்பற்றி பேணுவதோடு ஆரியம் ஆங்கிலம் போன்றவற்றால் ஏற்பட்ட கொள்கை நோய்களிலிருந்து தமிழைக் காப்பதை நோக்கமாகக் கொண்டது எம் முயற்சி என்கிறார் நூலாசிரியர்

 

* தமிழ் மொழியை பயன்படுத்துவோர் அதன் இயல்பை அறிந்து அதற்கு ஏற்ப அதனை ஆள வேண்டுமே அன்றி பிற மொழிகளின் இயல்புகளுக்கு ஏற்ப இம்மொழியை ஆளக்கூடாது 

 

*இலக்கணம் என்பதன் பொருளை விட இயல் என்பதன் பொருளே மிகப் பொருத்தமாக உள்ளது 

 

*உள்ளிலிருந்து எழும் அல்லது எழுப்பப்படும் ஒளியே எழுத்து எனப்படும் 

 

*தாமே செய்வதை செய்வினை அன்றும் பிறரை செய்விப்பதை செய்யப்பட்டு வினை என்றும் கூறலாம் 

 

*பயனிலை இல்லா எழுத்து பயனற்ற எழுத்தே எனலாம்

 

* தமிழ் அறிவு நாகரீகத்தை நிறுவது  திணைப் பகுதியாகும் 

 

*ஒன்பது என்பதன் குற்றியலுகரம் தன் வடிவு திரிந்து கெடாமல் சாரியை பெரும் 

 

*புணர்ச்சி என்பதற்கு இணைதல் சேர்தல் கூடுதல் என்பது பொருள்

 

* தமிழ் மொழியை பிழையின்றி எழுதுவதைப் பற்றி இந்நூல் கூறுகிறது 

 

*தமிழ் மொழியைப் பிழையில்லாமல் எழுத பேச இந்தநூல்  கண்டிப்பாகத் தேவை

 

              *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

            இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

                

Post a Comment

0 Comments