*தினம் ஒரு புத்தகம்* - ஜெய்ஹிந்த் செண்பகராமன்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:242

தேதி:03-04-2023

புத்தகம் எண்ணிக்கை:242             

புத்தகத்தின் பெயர் : ஜெய்ஹிந்த் செண்பகராமன் 

ஆசிரியர் : குப்புசாமி 

பக்கங்கள் : 212 

விலை : 40 

பதிப்பகம் : சுவாமிமலை 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*அடிமைத்தனத்திலிருந்தும் கொடுமைகளில் இருந்தும் விடுபட 'நாடு விடுதலை பெறுவதே சிறந்தது' என்பதை மனதில் கொண்டு இந்தியாவிற்கு வெளியே இருந்து இந்தியா விடுதலை பெறப் போராடியவர் செண்பகராமன் 

 

*1891 ஆம் ஆண்டு சின்னசாமி பிள்ளைக்கும் நாகம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் 

 

*ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தினார் 

 

*புரட்சிவீரனாகவும் கொள்கைவாதியாகவும் நினைத்ததை முடிப்பவனாகவும் விளங்கியவர் செண்பகராமன் பிள்ளை 

 

*சர்வாதிகாரியாக விளங்கிய ஹிட்லர் இந்திய மக்களுக்கு நாடாளத்தெரியாது என்று சொன்னதை கேட்டு கொதித்து எழுந்த செண்பகராமன் எங்களுக்கா ஆளத்தெரியாது ..?பாராண்ட மன்னர் வாழ்ந்தது எங்கள் நாடு அப்படிப்பட்டவர்களை ஆளத் தெரியாது என்று சொன்னீர்கள் இவ்விடம் சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் ஹிட்லர் மன்னிப்பு கேட்டார் 

 

*திருவனந்தபுரம் பகுதியில் இருந்து ஜெர்மனிக்கு புறப்படும் போது நான் வெளிநாடுகளுக்கு சென்று விட்டு வரும் நாளில் நம் நாட்டு சுதந்திரக் கொடி பறந்திடும் கப்பலில் தான் வருவேன் என்று சபதம் ஏற்று சென்றார் அந்த சபதத்தின் படியே சுதந்திரக்கொடி பறந்து வந்த கப்பலில் வந்தார் உயிருடன் அல்ல அஸ்தியாக 

 

*ஜெர்மனிய மன்னர் கைசருக்கு ஆலோசகராக இருந்தார் 

 

*பள்ளிப் பருவத்தில் பாரதமாதா வாலிபர் சங்கம் தோற்றுவித்து மாணவர்களுக்கு சுதந்திர உணவை ஊட்டினார் 

 

*ப்ரோ இந்தியா என்ற ஆங்கில பத்திரிக்கையை வெளியிட்டார் 

 

*ஜெர்மனிய கடற்படையில் பயிற்சி எடுத்தார் 

 

*செண்பகராமனை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வருவதற்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பிரிட்டிஷ் அரசு அறிவித்தது

 

* 1915 ஆம் ஆண்டு ஆப்கான் தலைநகர் காபுலில் இந்தியாவின் சுதந்திர சர்க்கார் என்ற அமைப்பை அமைத்தார் 

 

*நேருவின் மகள் இந்திராவுக்கு செண்பகராமன் வழங்கிய சரவிளக்கு நேருவின்  ஆனந்த பவனில் செண்பகவின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது 

 

*ஜெர்மனியில் ஹிட்லரை விட செண்பகராமன் புகழ் பெறுவதை விரும்பாத நாஜிக்கள் விருந்தில் விஷம் வைத்தனர் அதிலிருந்து சிகிச்சை மூலம் தப்பினார் மீண்டும் தாக்கப்பட்டவர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 உயிரிழந்தார் 

 

*குறைந்த வயதான 42 வயதில் உயிரிழந்தார் 

 

*1949 ஆம் ஆண்டு மும்பை காங்கிரஸ் மாளிகையில் டாக்டர் செண்பகராமன் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது

                      

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments