*தினம் ஒரு புத்தகம்* - ம.ப.பெரியசாமி தூரன்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:210

தேதி:02-03-2023

புத்தகம் எண்ணிக்கை:210

 

புத்தகத்தின் பெயர்: ம.ப.பெரியசாமி தூரன்

ஆசிரியர் பெயர் :சிற்பி பாலசுப்ரமணியம் 

விலை : 50 

பக்கங்கள் : 124 

பதிப்பகம் :சாகித்ய அகாடமி 

 

        * தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பெரும் சாதனை என்று மதிப்பிடப்படுகின்ற கலைக்களஞ்சியம் குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டிற்கும் முதன்மை ஆசிரியராக இருந்தவர் 

 

*செந்தமிழ் செல்வர் என போற்றப்படுபவர் 

 

*ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள மஞ்சள் காட்டு வலசு எனும் கிராமத்தில் 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் நாள் பிறந்தார் 

 

*நண்பர்களுடன் சேர்ந்து வனமலர் சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தினார். அந்த அமைப்பின் மூலம் பித்தன் என்ற இதழை நடத்தினார் 

 

 

*இளம் தமிழா ,மின்னல் பூ, நிலா பிஞ்சு ,பட்டினப்பறவைகள் முதலிய கவிதை நூல்களை படைத்தார் 

 

*பத்மபூஷன் ,கலை மாமணி ,இசை பேரறிஞர் ,பெருந்தமிழ் செல்வர் ,செந்தமிழ் செல்வர் போன்ற விருதுகளும் பட்டங்களும் தூரனுக்கு பெருமை சேர்த்தன 

 

*1940களில் காலச்சக்கரம் என்ற வார பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார் 

 

*1968 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்றார் 

 

*1987 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் நாள் மறைந்தார் 

 

*தமிழக அரசு இவருடைய நூல்களை எல்லாம் நாட்டுடைமையாக்கி உள்ளது 

 

*2008 வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை தனது ஆண்டு விழாவை பெரியசாமித்தூரன் நூற்றாண்டு விழாவாக கொண்டாடியது 

 

*கர்நாடக இசை வல்லுனராகவும் வழங்கினார் 

 

*முருகா முருகா என்றால் உருகாதா உந்தன் உள்ளம் என்ற சிறந்த முருக பக்தி பாடல்களில் முதன்மையானதாகவும் உள்ள பாடலை  இயற்றியுள்ளார் 

 

*மரபுக் கவிஞராகவும் தூரன் நாமக்கல் கவிஞர் மரபு எனும் பாரதிக்குப் பிந்தைய கவி மரபைச் சார்ந்தவர்

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments