*தினம் ஒரு புத்தகம்* - பன்மொழி புலவர் கா.அப்பாதுரை

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:227

தேதி:19-03-2023

புத்தகம் எண்ணிக்கை:227

புத்தகத்தின் பெயர் : பன்மொழி புலவர் கா.அப்பாதுரை 

ஆசிரியர் பெயர் : கு.வெ.பாலசுப்பிரமணியன் 

பதிப்பகம் : சாகித்திய அகாதெமி 

விலை : 40 

பக்கங்கள் : 122 

*குறிப்பு :

 இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

*அப்பாதுரை பன்மொழிப் புலவர் என அழைக்கப்பட்டார் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*40 மொழிகளை திறம்பட கற்றறிந்தமையால் பன்மொழிப்புலவர் என்று அழைக்கப்பட்டார் 

 

*இலக்கியம் ,வரலாறு ,வாழ்வியல் ,

மொழிபெயர்ப்பு, மொழியியல் ,நிலவியல் அகராதி என பல துறைகளில் ஏறத்தாழ 40 நூல்களைப் படைத்த பெருமை இவருக்கு உண்டு 

 

*தென்மொழி உலக இலக்கியங்கள் தென்னாட்டுப் போர்க்களங்கள் ,குமரிக்கண்டம் ,கடல் கொண்ட தென்னாடு ,திருக்குறள் மடி விளக்க உரை போன்ற நூல்கள் இவரின் புகழ்பெற்ற படைப்புகள் ஆகும் 

 

*தமிழ்மொழி ,தமிழினம் என்பவற்றின் வேரையும் விழுதையும் ஆராய்ந்து அவற்றுக்கு உலகத் தொடர்பு உண்டு என்று காட்டிய பெருமை பன்மொழிப் புலவர் அப்பாதுரை உண்டு 

 

*அறிவுச்சுரங்கம் ,அறிவுக்கடல் , பன்மொழிப் புலவர் என்ற பல சிறப்பு பெயர்களில் அழைக்கப்பட்டார் 

 

*கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்ற சிற்றூரில் 

24 -6 -197 அன்று காசிநாத பிள்ளைக்கும் முத்து இலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்

 

* அப்பாதுரை எழுதிய நூல்களில் தென்னாட்டு போர்க்களங்கள் எனும் நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும் என்று அறிஞர் அண்ணா கூறுவார் 

 

*அப்பாதுரை வரலாற்றை கிளிப்பிள்ளை போல சொன்னவர் அல்ல சான்றாதாரங்களின் அடிப்படையில் தன் கருத்துக்களை விளக்குவாரே அன்றோ பிறர் கருத்தை எடுத்துரைத்து மறுப்பதில்லை 

 

*நேதாஜி வரலாற்றை எழுதும்போது அவரை இந்தியாவின் நெப்போலியன் ஆக குறிப்பிடுகிறார் 

 

*நாடு நமக்கு தந்தையின் தோள் 

மொழி நமக்கு தாயின் மடி 

 

*உலக வழக்கும் செய்யுள் வழக்கும் இலக்கணத்துக்கு இலக்கியமாகக் குறிக்கப்பட்டது தமிழ் மொழி மட்டுமே

 

         *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments