*தினம் ஒரு புத்தகம்* - நா. வானமாமலை

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:206

தேதி:26-02-2023

புத்தகம் எண்ணிக்கை:206

புத்தகத்தின் பெயர்: நா. வானமாமலை 

ஆசிரியர் பெயர் :எஸ்.தோதாத்திரி பக்கங்கள் :112 

விலை : 50 ம

பதிப்பகம்: சாகித்திய அகடமி 

 

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*பேராசிரியர் நா வானமாமலை டிசம்பர் 7 1917 இல் நாங்குநேரியில் நாராயணன் திருவேங்கடத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப்பிறந்தார் 

 

*மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ ரசாயனம் படித்தார் 

 

*சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் எல் டி பட்டப் படிப்பினை படித்தார் இவை அனைத்தும் அவருடைய 20 வயதிற்குள்ளே முடிவடைந்தன 

 

*ஜில்லா போர்டு உயர்நிலைப் பள்ளியில் அவருக்கு நிரந்தர ஆசிரியர் பதவி கிடைத்தது நாங்குநேரி கோவில்பட்டி தென்காசி ஆகிய இடங்களில் 1948 ஆம் ஆண்டு முடிய பதவி வகித்தார் 

 

*பேராசிரியர் அவர்கள் ஆசிரியர் பணியில் இருக்கும் போது பல மாணவர்களை தந்தால் ஈர்த்தவர் ஆவார் 

 

*கோபமாகவோ அல்லது அதிர்ந்தோ பேசாதவர் மிக மென்மையாக பேசுவார் 

 

*பேராசிரியர் பேச்சில் ஒரு தெளிவும் உறுதியும் இருக்கும் 

 

*வகுப்பறையில் கற்றுத்தரும்போது மெதுவாக அதே சமயத்தில் தெளிவாக கற்றுத் தருவார் இந்த குணத்தால் கவரப்பட்டு பல மாணவர்கள் அவரது ரசிகர்களாக இருந்தனர் ஆசிரியர் பணியில் இருக்கும் போது ஒரு நல்ல ஆசிரியராக இருந்தார்

 

* 1947 இல் நெல்லை எழுத்தாளர் சங்கம் என்று அமைப்பை உருவாக்கினார் 

 

*பத்தாம் வகுப்பு தவறிய மாணவர்களுக்காக வானமாலை டுடோரியல் கல்லூரி என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தினார் 

 

*பேராசிரியர் நாட்டுப்புற இலக்கியத்தை பேணி வளர்த்த விற்பன்னர் 

 

*ஆய்வு நெறியில் புதுமையை புகுத்தி இலக்கியம், வரலாறு ,சமூகவியல் போன்ற துறைகளில் புது ஒளி பாய்ச்சியவர்.

 

*ஆராய்ச்சி என்ற காலாண்டு இதழை நடத்தியவர் 

 

*தமிழர் நாட்டுப் பாடல்கள், கட்டபொம்மன் கதைப்பாடல்கள் ஆகியன இவருடைய சிறந்த தொகுப்புகள் ஆகும் 

 

*பல்துறை அறிஞர் ,திறனாய்வாளர் 

 

*பேராசிரியர் பணியைப் பாராட்டு முறையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவரது மறைவுக்கு பின்னர் டி.லிட் பட்டம் அளித்து கௌரப்படுத்தியது.

 

*2008 ஆம் ஆண்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது 

 

*1980 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் நாள் எதிர்பாராத விதமாக மூளையில் உள்ள ரத்தக்குழாய் வெடித்து அவரது ஆவி பிரிந்தது

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments