*தினம் ஒரு புத்தகம்* - தமிழ் வளர்த்த வீரமாமுனிவர்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:236

தேதி:28-03-2023

புத்தகம் எண்ணிக்கை:236             

புத்தகத்தின் பெயர் : தமிழ் வளர்த்த வீரமாமுனிவர் 

பதிப்பாசிரியர் :முனைவர் சி. மணிவளன் பக்கங்கள் : 314 

விலை :300 

பதிப்பகம் : கிறிஸ்தவ ஆய்வு மையம் திருச்சி

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

 

*வீரமாமுனிவர் அவர்களின் படைப்புகள் ,பணிகள், சிறப்புகள் ,எழுத்துத் திறன் என்று பல்வேறு திறன்கள் குறித்த 73 ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூலாகும் 

 

*இந்த நூலைப் படிக்க படிக்க வீரமாமுனிவர் குறித்த பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்கிறது 

 

*தமிழ்வளர்த்த வீரமாமுனிவர் குறித்து 73 ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து அரிய தகவல்களை ஒரே தொகுப்பில் படிக்க முடிகிறது 

 

*வீரமாமுனிவரின் குறித்த தகவல்களை உள்ளடக்கிய வரலாற்றுப் பெட்டகமாக இந்த நூல் உள்ளது 

 

*தமிழில் பல வகை இலக்கியங்கள் உண்டு அவற்றுள் ஒருவகை இலக்கியத்திற்கு மாலை என்பது பெயராகும் தமிழில் உள்ள நூற்றுக்கணக்கான சிற்றிலக்கிய வகைகளில் மாலை என்பது ஒரு வகை சிற்றிலக்கியம் ஆகும் அந்த வகையில் அடைக்கல மாலை வீரமாமுனிவர் எழுதியுள்ளார் 

 

*தமிழின் பெருமையாம் உலகப் பொதுமறை எனும் பொய்யாமொழி பொக்கிஷமான திருக்குறளின் சிறப்புகளை தம் சொந்த நாட்டு மக்களுக்கு காட்டும் நோக்கில் திருக்குறளை இலத்தின் மொழியில்ல மொழிபெயர்த்துள்ளார்

 

* திருக்குறளுக்கு உரையினை பண்பாட்டுச் சூழலிலும் மொழிபெயர்ப்பு செய்து புகழ்ப்படைத்தார் 

 

*வீரமாமுனிவர் தமிழில் கடினச் சொற்களுக்கு பொருள் காண நிகண்டுகளையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றினார் 

 

*1732 ஆம் ஆண்டு இவர் தொகுத்த சதுரகராதி முதல் தமிழ் அகர முதலி எனும் பெருமை பெற்றது 

 

*தமிழ் எழுத்துக்களையும் சீர்திருத்தம் செய்துள்ளார் 

 

*தேம்பாவணியில் 95 இடங்களில் குதிரை பற்றிய குறிப்பு உள்ளது 

 

*தேம்பாவணியில் 11 இடங்களில் குரங்குகள் பற்றிய செய்தி உள்ளது 

 

*தேம்பாவணியில் 3 இடங்களில் கரடி பற்றிய குறிப்பு உள்ளது 

 

*தேம்பாவணையில் 8 இடங்களில் எருமை பற்றிய குறிப்புகள் உள்ளது 

 

*தேம்பாவணியில் 2 இடங்களில் அன்பில் பறவை பற்றிய குறிப்பு உள்ளது 

 

*தேம்பாவணியில் அன்னப்பறவை பற்றி 44 இடங்களில் குறிப்புகள் உள்ளது 

 

*இது போன்ற தகவல்கள் நம்மை வியக்க வைக்கிறது 

 

*இலக்கிய சுவடிகளை பல இடங்களில் தேடிச் சென்று எடுத்ததால் சுவடி தேடும் சாமியார் எனவும் அழைக்கப்பட்டார் 

 

*வீரமாமுனிவர் தமிழில் முதன் முதலில் வந்த நகைச்சுவை இலக்கியம் வீரமாமுனிவரின் பரமாத்த குரு கதையாகும் வெளியான ஆண்டு 1728 

 

*தமிழில் முதல் சிறுகதையை அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர் 

 

*ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் மொழியில் பொருள் கூறியுள்ளார்

 

* வீரமாமுனிவர் எழுதிய புத்தகங்கள் 36 வீரமாமுனிவருக்கு 13 மொழிகள் தெரியும்

 

* வீரமாமுனிவரை எனக்கு மிகவும் பிடிக்க காரணம் தனது கல்லறையின் மீது இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என எழுதியது ஆகும்

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments