தினம் ஒரு புத்தகம்* - தீக்குள் விரலை வைத்தேன்

 


தினம் ஒரு புத்தகம்*

நாள்:245

தேதி:06-04-2023

புத்தகம் எண்ணிக்கை:245             

புத்தகத்தின் பெயர் : தீக்குள் விரலை வைத்தேன் 

ஆசிரியர் : சி.மகேந்திரன் 

பக்கங்கள் : 335 

விலை : 125 

பதிப்பகம் : ராஜராஜன் பதிப்பகம் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*இது வெறும் பயண நூல் மட்டுமின்றி இலங்கை தமிழ் பேசும் மக்களின் ஒரு முக்கியமான காலகட்ட வரலாற்றைக் கூறி நிற்கும் நூல் 

 

*நாவல் போல் படிக்கத்தக்க வேகமான நடையில் எழுதப்பட்டுள்ளது 

 

*இலங்கை முஸ்லிம்தமிழர்கள் வாழ்க்கையும் சிங்கள மக்களது வரலாற்றையும் இந்த நூல் மூலம் அறிந்து கொள்ளலாம்

 

* தீக்குள் விரலை வைத்தால் சுடும் என்பது யாவரும் அறிந்த உண்மை திரு மகேந்திரன் அவர்கள் தீக்குள் விரலை வைத்தேன் என்ற தலைப்பில் 335 பக்கங்களில் ஒரு நூலை எழுதியுள்ளார் 

 

*படிக்கும்போது நாவலா கட்டுரையா என்ற மயக்கமும் ஏற்படலாம் 

 

*நூலின் உட்பொருள் வேறு எதுவும் இல்லை இனப்பதையால் எரிந்து கொண்டிருக்கும் இலங்கை நாட்டின் பயண அனுபவங்களையே விரிவான நூலாக எழுதியுள்ளார்

 

* பயண அனுபவங்கள் இன்று வரலாற்று ரீதியாக அலசியதோடு அங்கு வாழும் தமிழ் பேசும் மக்களது இன்றைய துன்பங்கள் பிரச்சனையை அவற்றை அடி ஞானத்துடன் அங்குள்ள கலை இலக்கியப் படைப்புகளையும் விரிவான விமர்சனத்திற்கு உட்படுத்தி உள்ளார் 

 

*தமிழ் பேசும் மக்கள் என்றதும் ஈழத் தமிழர்களாக வரலாற்றுக் காலத்தில் இருந்து வாழ்ந்து வருபவர்கள் மட்டுமல்ல தமிழில் தாய்மொழியாக பேசும் இஸ்லாம் மதத்தவர்கள் இலங்கையின் காலனி ஆதிக்க பிரிட்டிஷ்காரர்களால் தென்னிந்தியாவிலிருந்து 19ஆம் நூற்றாண்டு 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட உழைக்கும் தமிழ் மக்களையும் உள்ளடக்கும் 

 

*திரு மகேந்திரன் சிறப்பாக இந்த மூன்று பிரிவு மக்களது கலை இலக்கிய ஆர்வத்தையும் பங்களிப்பியும் அவரது வரலாற்று பின்னணியுடன் எழுதியுள்ளது என் நூலின் தனிச்சிறப்பாகும் 

 

* திருகோணமலைக்குச் சென்றதும் அதன் வரலாற்றுடன் அங்குள்ள எழுத்தாளர்களின் படைப்பாற்றலை பற்றியும் ஆசிரியர் கூறத்தவறவில்லை 

 

* இலங்கை பற்றி தமிழில் வெளிவந்துள்ள நூல்களில் இது தனி வகைப்பட்ட தாகும் 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments