எனது நாடக வாழ்க்கை - ஆசிரியர்: ஔவை தி.கா சண்முகம்

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:264

தேதி:25-04-2023

புத்தகம் எண்ணிக்கை:264    

புத்தகத்தின் பெயர் :எனது நாடக வாழ்க்கை 

ஆசிரியர்: ஔவை தி.கா சண்முகம் 

பதிப்பகம் :ஏ கே .எல் .பதிப்பகம் 

பக்கங்கள் :576 

விலை:

 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் என்னும் ஔவை தி. க. சண்முகம் 

 

*1918 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை தமிழ் நாடகக்கலைக்கு நற்பணி ஆற்றியவர்

 

*நாடகத்துறையில் தொல்காப்பியர் என மு. கருணாநிதியால் புகழப்பட்டவர்.

 

* ம. பொ. சிவஞானம் தலைமையில் இயங்கிய தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். 

 

*சண்முகத்தின்  தம்பி தி. க. பகவதி புகழ்பெற்ற நாடக நடிகரும், திரைப்பட நடிகரும் ஆவார்.

 

*எனது நாடக வாழ்க்கை என்பது அவ்வை சண்முகம் அவர்களின் தன் வரலாற்று நூலாகும்

 

*சண்முகம்வாழ்க்கை வரலாறு என்றாலும், அது 50 ஆண்டுகால, தமிழ் நாடக வரலாற்றைச் சொல்லும் நூலாகும். 

 

*இந்த நூலில் 1918 ஆம் ஆண்டு தொடங்கி 1972 வரை தன் நாடக உலக அனுபவங்களை எழுதியிருக்கிறார். 

 

*இந்த நூல் முதலில் கவி கா. மு. ஷெரீப் நடத்திய சாட்டை என்ற வார இதழில் தொடராக வந்தது பின்னர் அதன் தொகுப்பு நூல்வடிவம் பெற்றது.

 

*எனது நாடக வாழ்க்கை என்ற அவ்வை தி.க.சண்முகம் நூலில் மல்லாங்கிணருக்கு நாடகம் போட வந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில் சங்கரதாஸ் சுவாமிகள் மல்லாங்கிணருக்கு வந்து நாடகம் நடத்திய செய்தி இடம்பெற்றுள்ளது.

 

*மல்லாங்கிணரில் நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் ஏதாவது நடக்கிறது என்றால் வேட்டுப் போடுவார்கள். அந்தச் சப்தம் கேட்டு பக்கத்துக் கிராமத்து மக்கள் யாவரும் ஒன்று திரண்டு வந்துவிடுவார்கள். அந்த விளம்பர யுக்தியை வியந்து டிகே சண்முகம் எழுதியிருக்கிறார்.

 

*ஆடல் இல்லாத நாடகத்தை மக்கள் எப்படி ரசித்தார்கள் என்பதைப் பற்றிய குறிப்பும் சுவாரஸ்யமானது.

 

*நாடகம் முடிந்த பிறகு நடிகர்கள் கௌரவிக்கப்படுவார்கள். அப்போது விவசாயிகள் தங்களின் நிலத்தில் விளைந்த காய்கறிகள். பழங்கள். கம்பு, சோளம் போன்ற தானியங்கள். நாட்டுக்கோழிகளை அன்புப் பரிசாகக் கொடுப்பார்கள்

 

* இந்நூலில் நாடகங்கள் மக்களை எவ்வாறு கவர்ந்தது என்பது பற்றியும் மக்களை நாடகத்தின் பால் ஈர்க்க என்ன செய்வது என்பது பற்றியும் கூறியுள்ளார்

 

* ஒரு நாடகத்தை நடத்த நாடகக் கலைஞர்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் தெளிவாக விளக்கியுள்ளார்

 

* நாடகங்கள் மக்கள் மனதில் எப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தின என்பதை பற்றியும் விளக்கி உள்ளார்

 

*தனது வாழ்வில் அடைந்த துன்பங்களையும் துயரங்களையும் மற்றவருக்கு படிப்பினையாக தெளிவுபட கூற கூறியுள்ளார்

 

* இந்த நூலை படிக்கும் போது சண்முகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்லாமல் அன்றைய காலகட்டத்தில் நாடகங்கள் எவ்வாறு நடிக்கப்பட்டன நாடகங்கள் எவ்வாறு காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்தன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது 

 

*நமது நாட்டில் நாடகத்தில் பழங்கால நிலையை அறிந்து கொள்ள இந்த நூல் ஒரு கால கண்ணாடி மற்றும் வரலாற்று பொக்கிஷம் ஆகும்

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் பள்ளிபாளையம் அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments