*தினம் ஒரு புத்தகம்* - பனிமலை

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:220

தேதி:12-03-2023

புத்தகம் எண்ணிக்கை:229

புத்தகத்தின் பெயர் : பனிமலை

ஆசிரியர் : எண்டமூரி வீரேந்திரநாத்

தமிழில்:கௌரி கிருபானந்தன்

பக்கங்கள் :352

விலை : 110

பதிப்பகம்: அல்லயன்ஸ்பதிப்பகம் 

 

*பிரபல தெலுங்கு எழுத்தாளர் திரு. எண்டமூரி வீரேந்திரநாத் அவர்கள் எழுதிய "மஞ்சு பர்வதம் என்ற நாவலின் தமிழாக்கமே  “பனிமலை என்ற நாவல் ஆகும்

 

*இந்த நாவல் ஏற்கனவே வேறு ஒரு மொழிபெயர்ப்பாளரால் தமிழில் இதே தலைப்பில் வந்திருந்தாலும், மூலநாவலின் முழுவீச்சு வாசகர்களுக்கு போய்ச் சேரவேண்டும் என்ற உந்துதல்தான் இந்தப் படைப்பு உருவாகக் காரணமாக இருந்தது.

 

*வைஜயந்தி, விசாலி, அனுராதா மற்றும் பார்கவி நால்வரும் வகுப்புத் தோழிகள். ப்ளஸ் டூ முடிந்த பிறகு பிரிந்து போகும்போது பதினைந்து வருடங்களுக்குப்பிறகு அதே தேதியில் பள்ளி வளாகத்து மரத்தடியில் சந்திக்க வேண்டும் என்றும், தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களை ஒளிவுமறைவு இல்லாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள். 

 

*வாழ்க்கையில் அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்கள், சந்தித்த பிரச்னைகள், அந்தப் பிரச்னைகளை அவர்கள் எதிர்கொண்ட விதம் எல்லாமே வித்தியாசப் படுகின்றன. 

 

*ஆணாதிக்கியம் என்பது சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரோடிப் போய் விட்டது என்பது ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் மூலமாக அழகாய் விவரிக்கிறார்.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments