சோழர் கால வரலாறு ஆசிரியர் :தி.வை. சதாசிவப்பண்டாரத்தார்

 


*தினம் ஒரு புத்தகம்*       

நாள்:263.         

தேதி:24-04-2023.     

புத்தக எண்ணிக்கை: 263 

புத்தகத்தின் பெயர் :சோழர் கால வரலாறு 

ஆசிரியர் :தி.வை. சதாசிவப்பண்டாரத்தார் 

பதிப்பகம் : முத்தமிழ் பதிப்பகம் பக்கங்கள் : 704

விலை : 660

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*தி. வை. சதாசிவ பண்டாரத்தார் சோழர்களின் முழுமையான வரலாற்றை முதன் முதலில் தமிழில் எழுதியவர்

 

*சதாசிவப் பண்டாரத்தார் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். 

 

*1910 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார்.

 

* பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் கற்றுத் தேர்ந்தார். 

 

*பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் தாலுகா அலுவலகத்திலும், கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். 

 

*பின்னர் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் (1917-1942) தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 

 

*பணியில் இருந்த பொது “செந்தமிழ் என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் வெளியாகின. 

 

*1930 ஆம் ஆண்டு “முதலாம் குலோத்துங்க சோழன் என்ற முதல் நூல் வெளியானது. 

 

*1942-1953, 1953-60 காலகட்டங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 

 

*பல இடங்களுக்கும் சென்று சோழர் வரலாற்றை ஆய்வு செய்து “பிற்கால சோழர் சரித்தரம் என்னும் பெரு நூலை எழுதினார். 

 

*இது மூன்று தொகுதிகளாக 1949, 51 மற்றும் 61 ஆம் ஆண்டுகளில் வெளியானது. 

 

*இரு தமிழ் இலக்கிய வரலாறு நூல்களும், பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். 

 

*தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது.

 

*“பொன்னியின் செல்வன் நாவலின் அடிப்படை ஆதாரம் சதாசிவ பண்டாரத்தாரின் “பிற்கால சோழர் சரித்திரம் – ஆனால் கல்கி  பேசப்பட்ட அளவுக்கு பண்டாரத்தார் பேசப்படவில்லை.

 

*தி.வை.சதாசிவ பண்டாரத்தார்

தமிழ் வரலாற்று ஆய்வின் பிதாமகன் என்று அனைவராலும் போற்றப்படும் பேரு பெற்றவர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார்.

 

*தமிழக வரலாற்றில், யூகங்கள், கற்பனைகள், இடைச்செருகல்கள் அனைத்தும் நீங்கிய ஆய்வுகளை, முதன் முதலில் அளித்த பெருமை தி.வை.சதாசிவ பண்டாரத்தாரையே சாரும்.

 

* கிட்டத்தட்ட எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களை நன்கு படித்து ஆராய ஆரம்பித்தார். குறிப்பாக இந்திய வரலாற்றிலேயே நீண்டகாலம் நிலைத்து ஆட்சி செய்த, சோழ வம்சத்தின் வரலாறுகளை ஆதாரத்துடன், முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.

 

*அதன்படி 1930 ம் ஆண்டு அவர் முதலில் எழுதி வெளியிட்ட நூல் “முதல் குலோத்துங்க சோழன் என்ற நூலாகும். இந்நூல், மிகுந்த வரவேற்பை பெற்றது. அத்துடன் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலும்  சேர்க்கப்பட்டது.

 

*மதுரை தமிழ் சங்கத்தால் வெளியிடப்பட்ட “செந்தமிழ், தஞ்சை கரந்தை தமிழ் சங்கத்தால் வெளியிடப்பட்ட “தமிழ் பொழில் போன்ற இதழ்களில் பண்டாரத்தாரின் கட்டுரைகள் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. 

 

*செந்தமிழ் இதழில் வெளியான “சோழன் கரிகாலன் என்ற கட்டுரை, பண்டாரத்தாரின் அறிவுப்புலமைக்கும், ஆய்வுத்திறனுக்கும் சான்றாக அமைந்ததுடன், அறிஞர் உலகத்தால் போற்றி கொண்டாடப்பட்டது.

 

*பண்டாரத்தாரின் ஆய்வுத்திறன் மற்றும் நுண் புலமை, ராஜா சர் அண்ணாமலை செட்டியாரை மிகவும் ஈர்த்தது. அதனால், அவரது அழைப்பை ஏற்று, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ் ஆராய்ச்சி துறை பணியில் பண்டாரத்தார் சேர்ந்தார். 1942 முதல்   1960 ம் ஆண்டுவரை அங்கு பணியாற்றிய பண்டாரத்தார், எண்ணற்ற ஆய்வு நூல்களையும் தமிழுக்கு அளித்தார்.

 

*பேருந்துகள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் போன்றவற்றில் பயணித்தும், சில இடங்களுக்கு நடந்தே சென்றும், ஒவ்வொரு கல்வெட்டையும் தாமே நேரடியாக படித்து ஆராய்ந்தவர் பண்டாரத்தார். அந்த அளவுக்கு வரலாற்று ஆய்வில் உண்மையும், ஆதாரமும் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் பள்ளிபாளையம் அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments