தினம் ஒரு புத்தகம் - இயற்கை செய்திகள் சிந்தனைகள்

 


தினம் ஒரு புத்தகம் 

நாள்:259

தேதி:20-04-2023

புத்தகம் எண்ணிக்கை:259  

புத்தகத்தின் பெயர்:இயற்கை செய்திகள் சிந்தனைகள்

ஆசிரியர்:ச.முகமது அலி

இயற்கை வரலாற்று அறக்கட்டளை

விலை:200/-

பக்கங்கள்: 200 

 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


*இயற்கைவாதிகளை பொதுவில் ஐந்தாக வரிசைப்படுத்தலாம்.

 

*காடுகளில் சுற்றித் திரிந்து, விலங்குகளை, பறவைகளை வேட்டையாடுவதில் திறமைகளை வெளிப்படுத்தி பெருமை காண்பவர் வேட்டைக்காரர்.

 

*பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்புக்காகவும், அவற்றின் அடிப்படையில் வேலை வாய்ப்பும் பெறுபவர் ஆராய்ச்சியாளர்.

 

*சுற்றுச்சூழல், இயற்கையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் பற்று உடையவர் சூழல் ஆர்வலர்.

 

*சுற்றுச்சூழல் விரும்பிகள்‌ என்பவர் கள் இயற்கையின் வரலாற்று அடிப்படையைப் புரிந்து, நுகர்ந்து இயற்கை வளம் காத்திடும் பொருட்டு எவ்வகைப் பரிமாணங்களையும் எதற்கும் விட்டுக் கொடுக்காதவர்.

 

*அறம் சார்ந்து காடுகளால் மனவளமும், நிம்மதியும், இன்பமும் பெற விழைபவர்கள் சூழல் நேசிப்பவர்கள்.

 

*இந்நூல் அகராதி மாதிரியும் அல்லாமல், கலைக்களஞ்சியம் மாதிரியும் அல்லாமல் புதுமாதிரியாக   சுற்றுச்சூழல் சார்ந்த தகவல்களின் பெட்டகமாக உள்ளது.

 

வேதிப்பொருள்கள்

நீர் நிலைகள்

மலைகள்

தாவரங்கள்

சங்கு சிப்பிகள்

மீன்கள்

பூச்சி புழுக்கள்

ஊர்வனவும் பிறவும்

பறவைகள்

பாலூட்டிகள்

இயல்கள்

பொதுச் செய்திகள்

மணிமொழிகள்

விழாக்கள்

பெயர்கள், சொற்கள்

முக்கிய நூல்கள்

வரலாற்றுச் சுருக்கம்

வரைபடங்கள்

 

*நூலிலிருந்து சில சுவையான தகவல்கள்...

 

*கொன்றை மரக் குடும்பத்தில் சிறு கொன்றை, பெருங்கொன்றை, சரக்கொன்றை, செங்கொன்றை, மயில் கொன்றை, கருங்கொன்றை, மந்தாரக்கொன்றை, முட்கொன்றை, கிளிமூக்குக் கொன்றை, புலிநகக் கொன்றை என்று பல உள்ளினங்கள் உள்ளன.

 

*ஒரு கிலோ தேன் கிடைக்க சுமார் 1 1/4 லட்சம் பெரிய மலர்கள் தேவை.

 

*சங்கிலிக் கருப்பன்.

இந்தியாவில் உள்ள 4 நஞ்சுள்ள பாம்புகளில் ஒன்றான கண்ணாடி விரியனின் முதுகுப்புறத் தோலில் கரிய சங்கிலி போன்ற அடையாளம் இருக்கும். இதன் காரணமாகவே இப்பாம்புக்கு சங்கிலி கருப்பன் என்ற புனைப் பெயர் நிலவுகிறது.

 

*உணவில் பல்லி உண்டோர் வாந்தி, மயக்கம் என் செய்தித்தாளில் செய்திகள் வருவது வழக்கம். இது பல்லியின் குற்றம் அல்ல. அதாவது நஞ்சோ, ஒவ்வாமைப் பொருள்களோ எதுவும் பல்லிகளிடம் இல்லை. பழக்கமில்லாத காரணத்தால் ஏற்படும் அருவருப்பு காரணமாகவே வாந்தி வருகிறது. வாந்தி வந்ததால் மயக்கம் வருகிறது.

 

இன்னும் பல சுவையான தகவல்களை உள்ளடக்கிய அருமையான நூல்‌.

 

*சூழல் சார்ந்த அருமையான வாசகங்களை தொகுத்திருப்பது மிகச் சிறப்பு மிக்கது‌.

 

*காட்டுயிர்களுக்கு என்றும் குறைந்த நண்பர்கள், அதிக எதிரிகள்

 - ஜிம் கார்பெட்

 

*மனிதர்கள் இன்றி பறவைகளால் வாழ முடியும். ஆனால் பறவைகள் இன்றி மனிதரால் வாழ முடியாது.

 

-சாலிம் அலி.

 

*சுற்றுச்சூழலை நேசிப்பவர்களும் இயற்கை ஆர்வலர்களும்  கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

 

*நன்றி : நண்பர் ராமமூர்த்திநாகராஜன்*

 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments