அரவிந்த் கெஜ்ரிவால் ஆசிரியர் : ஜெகாதா

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:276

தேதி:07-05-2023

புத்தகம் எண்ணிக்கை:276     

புத்தகத்தின் பெயர் : அரவிந்த் கெஜ்ரிவால்

ஆசிரியர் : ஜெகாதா  

பதிப்பகம் : நக்கீரன் பதிப்பகம் 

விலை : 180

பக்கங்கள் : 208

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*அரவிந்த் கெஜ்ரிவால் இந்திய அரசியல்வாதி மற்றும்  சமூக ஆர்வலராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் டெல்லியின் முதலமைச்சர்

 

*ஹரியானாவின் தொலைதூர கிராமத்தில் பிறந்தார்

 

* மிகச்சிறந்த கல்வித் தகுதியும் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படித்த அறிவும் இவருக்கு உண்டு

 

*சிறுவயதில் இருந்து பிரகாசமான மாணவரான அரவிந்த் தனது முதல் முயற்சியில் டி தேர்வினை வென்று மேற்கு வங்கத்தில் உள்ள ..டி கரக்பூரில் சேர்ந்தார்.

 

* இயந்திர பொறியியலாளராக அவரது கெரியரை தேர்ந்தெடுத்தார். பட்டப்படிப்பை முடித்தபின், அவர் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இதற்கிடையில் பணியை ராஜினாமா செய்து சிவில் சர்வீஸ் பணியில் சேரும் முயற்சிகளில் இறங்கினார்

 

*1993 ல் அவர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வருவாய் சேவையில் சேர்ந்தார்

 

*1993ம் ஆண்டு ஐஆர்எஸ்ல் உடன் பணி புரிந்த சுனிதாவை 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

 

*1999 ஆம் ஆண்டில் பரிவர்த்தன் என்ற இயக்கம் மூலம் போலி ரேஷன் அட்டை ஊழலை அம்பலப்படுத்தினார். மேலும் வருமான வரி, மின்சாரம் மற்றும் உணவு விருந்து தொடர்பான விஷயங்களில் தில்லி குடிமக்களுக்கு உதவினார்

 

*சமூக பணிகளில் கவனம் செலுத்துவதற்காக தன் பணியை ராஜினாமா செய்தார்

 

*2006 ஆம் ஆண்டில் பொதுக் கோட்பாட்டு ஆராய்ச்சி அறக்கட்டளை இவரால் நிறுவப்பட்டது.

 

*2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் தன்னை இணைத்தபோது கெஜ்ரிவால் பிரபலமடைந்தார்

 

* லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக பிரச்சாரம் செய்தார்

 

*அன்னா ஹசாரேவுடன் இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை அரசியல்மயமாக்குகிறாரா இல்லையா என்பதைப் பற்றி அவர் கருத்து வேறுபாடு கொண்டார். ஆம் ஆத்மி கட்சி (AAP) என்ற தனது சொந்த அரசியல் கட்சியை நிறுவிகார்

 

*2013 ஆம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 70 இடங்களில் 28 இடங்களை வென்றார்

 

*இந்திய தேசிய காங்கிரசின் நிபந்தனையற்ற ஆதரவுடன் அவர் அரசாங்கத்தை உருவாக்கி தில்லியின் முதலமைச்சராக பதவியேற்றார்

 

* டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 70 இடங்களில் 67 இடங்களை வென்றார். டெல்லியின் ஏழாவது முதலமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

 

*என் மனதைக்கவர்ந்தவை*

 

*கெஜ்ரிவால் ஒரு எளிமை விரும்பி. சைவை உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர். படிப்பாளி

 

*தனது அலுவலகத்திலும் கூட பியூனை இவர் பயன்படுத்துவதில்லை. தனது மேசையை தானே துடைத்துக் கொள்வார். தனது, தனது குழந்தைகளின் பிறந்த நாளை இவர் கொண்டாடியதில்லை.

 

* ஸ்வராஜ் என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டார், இது இந்திய ஜனநாயகத்தின் ஊழல் மற்றும் மாநிலத்தின் மீதான அவரது கருத்துக்களை விவாதிக்கிறது.

 

*கல்வித்துறையில் டெல்லி மாநிலத்தின் பள்ளிகளை நவீனமயமாக்கியது அடிப்படை உள்கட்டமைப்புவசதிகளை மேம்படுத்தியது போன்றவற்றுக்கு  சிறந்த மாநிலமாக கூறலாம்

 

* வெளிப்படையான நிர்வாகத்தை பாராட்டலாம்

 

*சுமார் 2.5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளை விட்டு வெளியேறி டில்லி அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் இது இவரின் மகத்தான சாதனைகள்

 

*பொதுவாக இந்த புத்தகத்தை படிக்கும் போது நம்மாலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது

 

* எந்தத் திட்டத்தை தீட்டினாலும் அதனின் நீண்ட கால பயன்களை ஆராய்ந்து முயற்சியோடு செய்தால் நல்ல பயன்களை விளைவுகளாகப் பெறலாம் என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் மூலம் அறிந்து கொள்ள  முடிகிறது

 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் பள்ளிபாளையம் அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

 

Post a Comment

0 Comments