ஒ.பி.எஸ் ஆசிரியர் :டாக்டர் மானோஸ்

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:266

தேதி:27-04-2023

புத்தகம் எண்ணிக்கை:266    

புத்தகத்தின் பெயர்: ஒ.பி.எஸ் 

ஆசிரியர் :டாக்டர் மானோஸ் 

பதிப்பகம் :ஹலோ பதிப்பகம் 

பக்கங்கள் :436

விலை :350

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


* இந்தப்புத்தகத்தில் ஒ. பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மிகவும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது

 

*தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை கிராமத்தில் 1951-ம் ஆண்டு, ஜனவரி 14-ம் தேதி பிறந்தார் 

 

*பேச்சிமுத்து என்கிற பன்னீர்செல்வம். திருவில்லிப்புத்தூரை பூர்வீகமாகக்கொண்ட இவரின் பெற்றோர் ஓட்டக்காரத்தேவர் - பழனியம்மாள், அங்குள்ள தங்களின் குலதெய்வமான பேச்சியம்மன் நினைவாக இவருக்கு பேச்சிமுத்து எனப் பெயரிட்டு அழைத்தனர். பின்னாளில் அதை பன்னீர்செல்வம் என மாற்றிக்கொண்டார். 

 

*இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், கவிதா பானு என்ற மகளும், ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

 

*சொந்த ஊரிலுள்ள விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த இவர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ பட்டம் பெற்றார். 

 

*ஆரம்பகாலத்தில் இவரின் தந்தையுடன் சேர்ந்து ஃபைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார் பன்னீர்செல்வம். பின் சொந்தமாக பால் பண்ணை ஒன்றையும், தனது நண்பர்களுடன் சேர்ந்து டீக்கடை ஒன்றையும் நடத்திவந்தார்.

 

*எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்த பன்னீர்செல்வம், அவர் கட்சி ஆரம்பித்த பிறகு அ.தி.மு.க உறுப்பினராகத் தன்னை இணைத்துக்கொண்டார். 

 

*1982-ம் ஆண்டு கட்சியில் இவருக்கு பெரியகுளம் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணித் துணைச் செயலாளர் பதவி

 

*2001-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வம், வெற்றிபெற்று முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். 

 

*முதன்முறை எம்.எல்.ஏ ஆனபோதே அவருக்கு வருவாய்த்துறை அமைச்சர் பதவியும், பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியும், முதல்வராகும் வாய்ப்பும் கிடைத்தது.

 

*2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் பன்னீர்செல்வம். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடையவே, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

 

*2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறை பன்னீர்செல்வத்துக்கு நிதியமைச்சர் பதவியும், அவை முன்னவர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது.

 

*2001-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அந்தச் சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக முன்மொழிய, சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2001, செப்.21 முதல் 2002 மார்ச் 1 வரை தமிழக முதல்வராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றார்.

 

*2014-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டு சிறைதண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட, தனது முதல்வர் பதவியை மீண்டும் இழக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 2014, செப்.29 முதல் 2015 மே 22 வரை முதல்வராகப் பணியாற்றினார்.

 

*2016-ம் ஆண்டு, டிசம்பர் 5-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த காரணத்தால், 2016, டிசம்பர் 6-ம் தேதி மூன்றாவது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு 2017, பிப்.15-ம் தேதி வரை அந்தப் பதவியில் இருந்தார்.

 

* ஓ பன்னீர்செல்வம் அவர்களது வாழ்க்கை வரலாறு விரிவாக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது

                     

              *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments