*தினம் ஒரு புத்தகம்* - அழகர் கோயில்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:249

தேதி:10-04-2023

புத்தகம் எண்ணிக்கை:249              

புத்தகத்தின் பெயர் :அழகர் கோயில்

 ஆசிரியர் :தொ.பரமசிவன் 

பக்கங்கள் : 408 

விலை :290 

பதிப்பகம் : ரிதம் பதிப்பகம்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*அழகர் கோயில் என்னும் பண்பாட்டாய்வு நூலை,  பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் எழுதி வெளியிட்டுள்ளார். 

 

*மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையால் வெளியிடப்பட்ட இந்நூல் இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடாகும். 

 

*துறைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1976 – 79 ஆம் ஆண்டுகளில் அழகர் கோயில் குறித்து மேற்கொண்ட கள ஆய்வுகள், ஆய்வேடாகச் சமர்ப்பிக்கப்பட்டது.

 

*பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்  70 வயது நிறைவடைந்த பண்பாட்டு ஆய்வறிஞர், எழுத்தாளர், மார்க்சிய பெரியாரியக் கொள்கைகளில் பற்றுடையவர், இளையான்குடி, ஜாகிர் உசேன் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி, பாளையங்கோட்டை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில்  பேராசிரியராகப் பணியாற்றியவர். 

 

*மூன்று தசாப்தங்களாக மார்க்சிய-பெரியாரிய அடிப்படையில் வெகுசன வழக்காறுகள், சடங்குகள், நம்பிக்கைகள் சார்ந்த பண்பாட்டாய்வுகளை மேற்கொண்டு வரும் பண்பாட்டாய்வாளர், மண்ணின் வரலாற்றையும், பண்பாட்டின் வரலாற்றையும் இணைத்து கோயில் வரலாற்றாய்வுகளை மேற்கொண்டு வரும் இந்த ஆராய்ச்சியாளர், 

 

*ஏறக்குறைய 18 ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டவர், பழகுவதற்கு இனிமையானவர்,  வாசகர்களின் பெருமதிப்பைப் பெற்றவர். 

 

*கோயில் பற்றிய சமூக ஆய்வுகள் நாட்டு வரலாற்றாய்வாக மட்டுமின்றிச் சமூக, பண்பாட்டாய்வுகளாகவும் விளங்கும் திறமுடையான. தமிழ்நாட்டில், கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுகள் தரும் செய்திகளும், கோயில்களின் கட்டடக்கலை, சிற்பக்கலைச் சிறப்புகளுமே பெரிதும் ஆராயப்படுகின்றன. 

 

*அழகர்கோயில் குறித்த ஆய்வு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

*மண்ணின் வரலாற்றையும், பண்பாட்டின் வரலாற்றையும் இணைத்துக் கோயில் வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வு முறைமை புதுமையானதும் முழுமையானதும் ஆகும்.  கோயில் ஆய்வுகளுக்கு, பேராசிரியர். தொ.பரமசிவன் அவர்கள் மேற்கொண்ட இந்தக் கள ஆய்வு முன்னோடியாகத் திகழ்கிறது.

 

*பேராசிரியர். முனைவர் தொ. பரமசிவன் நூல் மொத்தம் 11 இயல்களைக் கொண்டுள்ளது. 

 

*பின்னிணைப்பாக பழமுதிர்ச்சோலை, பலராமன் வழிபாடு குறித்த இரண்டு கட்டுரைகளும், அச்சிடப்படாத ஐந்து வர்ணிப்புப் பாடல்களும், வரைபடங்களும், புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

 

*அழகர் கோயிலின் தோற்றம், கோயில் அமைப்பு, தமிழ் இலக்கியங்கள் மற்றும் நாட்டுப்புற இலக்கியங்களுடனான தொடர்புகள், கோவிலின் வைணவ ஆகம நடைமுறைகள், சித்திரைத் திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள், சமுதாய உறவு, அதாவது  கோயிலோடு நாட்டுப்புறத்து அடியவர்கள் கொண்டுள்ள உறவு ஆகியவற்றை விளக்க முயன்றதன் விளைவாக எழுந்தது இந்த ஆய்வேடு என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

 

*அழகர் கோவில் மதுரை மாவட்டத்தில் உள்ளது 

 

*அழகர்கோவிலில் இருக்கும் பெருமாள்  கள்ளராக மலையில் அருள் பாலிக்கிறார் 

 

*இங்கே முதல் பூஜை 18-ஆம் படி கருப்புசாமிக்கு தான் நிகழ்த்தப்படுகிறது 

 

*கருப்பசாமிக்கு இங்கு உருவம் இல்லை இங்கிருக்கும் ராஜகோபுரத்தில் இருக்கும் இரட்டை கதவில் உறைவதே பதினெட்டாம் படி கருப்பசாமி ஆகும் 

 

*இதற்கு ஒரு கதை சொல்லுகிறார்கள் முன்னொரு காலத்தில் மலையாள தேசத்திலிருந்து மன்னர் ஒருவர் அழகர் கோவிலுக்கு வந்தார் அப்போது அழகர் சிலை மீது மயக்கம் கொண்டார்

 

* அந்த சிலையை தன்னோடு எடுத்து செல்ல அர்ச்சகர்களிடம் கேட்டார் அர்ச்சகர்கள் அனுமதி தரவில்லை 

 

*அதனால் மலையாள தேசத்திலிருந்து 18 மந்திரவாதிகளை அனுப்பினார் அவர்கள் ஒரு மண்டல காலத்திற்கு தனது கண்ணிற்கு மேல் ஒரு மையை தொடவிக் கொண்டு தினமும் அழகர் சிலை மீது இருக்கும் சக்தியை உரிந்த  அவர்கள் கொண்டு வந்த கும்பத்தில் அடைப்பார்கள்

 

* இந்தப் 18 மந்திரவாதிகளுக்கு காவலாக மன்னன் 18 ஆம் படி கருப்பசாமியை அனுப்புகிறார் மலையாள தேசத்திலிருந்து கருப்பசாமி அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார். 

 

*அவர்கள் சிலையின் மீது இருந்து சக்தியை எடுக்கும் பொழுது ஒரு நாள் அங்கு இருக்கும் பட்டரின் கனவில் பெருமாள் தோன்றி இதுபோல் எனது சக்தியை 18 மந்திரவாதிகள் உறிந்து தினமும் எடுத்து செல்கிறார்கள் அதை நீ எப்படியாவது தடுத்து நிறுத்து என்கிறார் 

 

*இந்த வழக்கு அழகர் கோவில் பெரிய வேளாளர்களிடம் செல்லுகிறது அப்போது அவர்கள் ஒரு திட்டமிடுகின்றனர் சுடுதண்ணியை ஊற்றி அழகருக்கு படைக்கிறார்கள் அதிலிருந்து வரும் வேர்வை மந்திரவாதிகளின் கண்மேல் பட்டு அவர்கள் மை கரைந்து அவர்களின் உருவம் தெரிகிறது உருவம் தெரிந்தவுடன் அந்த 18 மந்திரவாதிகளையும் பிடித்து பெரிய வேளாளர் இடம் ஒப்படைக்கிறார்கள் அந்த 18 மந்திரவாதிகளின் தலையை இந்த வேளாளர்கள் வெட்டி விட்டனர் அப்போது அவர்களுக்கு காவலாக வந்த கருப்பு கெஞ்சி அது என்னை மட்டும் விட்டு விடுங்கள் நான் இந்த இடத்திலேயே இருந்து இந்த கோவிலை பாதுகாத்துக் கொள்கிறேன் என்றது அதனால் அந்த கருப்பை அவர்கள் விட்டுவிட்டனர் அந்த மந்திரவாதிகளை கொன்று அவர்கள் தலைகளை எடுத்து 18 படிகள் கோபுரத்திற்குள் அமைத்து வைத்துள்ளனர் அதற்கு காவலாக கருப்பை நிறுத்தி உள்ளார்கள் இதுதான் பதினெட்டாம்படி கருப்பசாமியின் வரலாறு.

 

*அழகர் தனது தங்கை மீனாட்சி கல்யாணத்திற்கு மதுரை வரும் பொழுது மீனாட்சி இன் கல்யாணம் முடிந்து விட்டது இதனால் அழகர் கோபம் கொண்டு வைகை நதி கரைக்கு அந்த பக்கம் இருக்கும் மலையில் தங்கி விட்டார் இதனால் அந்த இடம் அழகர் மலை என்று அழைக்கப்படுகிறது 

 

*அழகர் மக்களுக்கு ஒரு கள்ளராக திருடனாக தான் காட்சியளிக்கிறார்  அருள் பாலிக்கிறார்

                       

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments