சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் ஆசிரியர் : மைக்கேல் ஜெப்ரிஸ்



 தினம் ஒரு புத்தகம் 

நாள்:287
தேதி:17-05-2023
புத்தகம் எண்ணிக்கை:287     
புத்தகத்தின் பெயர் : சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் 
ஆசிரியர் : மைக்கேல் ஜெப்ரிஸ் 
தமிழில் : சி .ஆர். ரவீந்திரன் 
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் விலை : 200 
பக்கங்கள் : 682 
பாகங்கள் :மூன்று 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

 

*மகிழ்ச்சிக்கான ஒரே வழி கனவு காண்பது 

*வெற்றிக்கான ஒரே வழி கனவை நிஜமாக்குவது 

*சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் எனும் இந்த நூல் மிகப்பெரிய அளவில் கனவு கண்டு கனவை நிஜமாக்கிய சாதனையாளர்களை பற்றியது 

*இந்நூல் மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது, 

*இந் நூலில் ஒவ்வொரு பாகத்திலும் 5 சாதனையாளர்களாக மொத்தம் 15 சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்களை சொல்கிறது 

*சாதனையாளர்களுடைய பொருளாதார வெற்றியும் தொழில் அளவிலான அங்கீகாரமும் அவர்களின் புகழின் உச்சிக்க உச்சத்திற்கு கொண்டு சென்றன 

*இந் நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தை நீங்கள் படிக்கும் போது ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை தீவிர உணர்ச்சியுடன் எதிர்நோக்குவது எவ்வாறு என்பதை உணர்த்தும் 

*உங்களுக்குள் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் உதாரணங்களை தாராளமாக அறிய முடியும் 

*ஒவ்வொரு சொற்பொழிவாளரிடமும் தன்னம்பிக்கை ,ஊக்கம் ,மனஉறுதி ,
விடாமுயற்சி ஆகியவற்றின் மகத்துவங்கள் உங்களுக்குள் ஏற்படும் தாக்கத்தை தாராளமாக உணர முடியும் 

*இந்த நூல் நீங்கள் மிகச் சிறந்த மேடைப்பேச்சாளராகவும் தகவல் தொடர்பு உருவாகவும் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் கம்பீரமாக பார்க்கவும் வழிகாட்டுகிறது 

*உங்களுக்கு சரியானவை பொருத்தமானவை என்று நீங்கள் நினைக்கிற சிந்தனைகள் இயல்புகள் வெற்றிக்கான மூலக்கூறுகள் அனைத்தும் நீங்கள் இந்த நூலில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் 

*மனதைக் கவர்ந்த சில வரிகள்*

*நோக்கத்தை நிறைவு செய்வதற்கான வாழ்க்கை 

*இலக்கின் தரிசனத்தை நம்புதல் 

*விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 

*எவரையும் நீங்கள் நல்ல ஆசிரியர் என்று சொல்கிறீர்களோ அவர்கள் வழக்கமாக நல்ல பேச்சு கலைஞராக இருப்பார்கள்

*பொது பேச்சுக்கு இரண்டு விதிகள் பேச்சு ஆதாரப்பூர்வமாக இருக்க வேண்டும் இயல்பாக இருக்க வேண்டும் 

*ஆன்மீக அனுபவங்களை கொண்ட மனிதர்கள் அல்ல நாம் ஆனால் மனித அனுபவங்களை கொண்ட ஆன்மீகவாதிகளாக இருக்கிறோம் 

*எதைச் செய்ய மிகுந்த தாமதம் கூடாது 

*சிறந்த பேச்சாளர்கள் தங்களுடைய சொந்த அனுபவங்களிலிருந்து பேசுகிறார்கள் 

*ஒரு வெற்றி கண்டிப்பாக இன்னொரு வெற்றியைத் தரும் 

*நீங்கள் எத்தனை முறை தோற்றுப் போனீர்கள் என்பதை வைத்து உங்களை யாரும் எடை போடுவதில்லை ஆனால் நீங்கள் எத்தனை முறை வெற்றி அடைந்திருக்கிறீர்கள் என்பதை வைத்துத்தான் மதிப்பிடுகிறார்கள் 

*வெற்றியில் இருந்து நம்பிக்கை பிறக்கிறது 

*உங்களுக்கு கிடைத்திருக்கும் நேரத்திற்கும் உரியதை காட்டிலும் அதிகமாக சொல்லுங்கள் 

*ஒரு பேச்சாளராக இருக்க விரும்பினால் முதலில் நீங்கள் பேச வேண்டும்

                          *குறிப்பு*
*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.


Post a Comment

0 Comments