தமிழகக்கோயில் கலை

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:289
தேதி:19-05-2023
புத்தகம் எண்ணிக்கை:289    
புத்தகத்தின் பெயர் :தமிழகக்கோயில் கலை 
ஆசிரியர்கள் : முனைவர்.இரா.சந்திரசேகரன், பா.சரவணன் ,ஆர். சரவணன் 
,தா. செந்தில் ஜோதி 
விலை : 100 
பதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் பக்கங்கள் :256 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      



*தமிழகம் எங்கும் பரவிக்கிடக்கும் சிறந்த கோயில்களில் ஏழினை மட்டும் தேர்ந்தெடுத்து வரலாற்றியல் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்ட 
தகவல்களை இந்நூல் தருகிறது 

*இந் நூலின் வழியாக நமது பக்தி மரபு, சிற்பக்கலை மரபு ,தொழில் மரபு போன்றவற்றை காலவரியாக வகைப்படுத்தி புரிந்து கொள்ள முடியும்

* இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு கோவில்கள் 

*திருவரங்கம் அரங்கநாதர் கோவில் *நாமக்கல் நரசிம்மர் கோவில் 
*நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் *தோளூர் கோடீஸ்வரர் கோவில் *திருப்பாண்டி கொடுமுடி கோவில் *சின்னதாராபுரம் முக்தீஸ்வரர் கோவில் *கோவை மலை பழனியப்பர் கோவில் 

*ஒரு நாட்டின் பண்பாடு ,கலாச்சாரம் ,வளமை ,ஆன்மீக நிலை ஆகியவற்றை பறைசாற்றுகின்ற வகையில் கோயில்கள் அமைந்துள்ளன

* திருவரங்கத்தில் உள்ள திருவரங்கநாத சுவாமி கோயில் வைணவ மரபு நெறிக்கு உரியதாகும் 

*இதன் வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு செல்கிறது

* இங்குள்ள திருவரங்கன் ஆழ்வார்கள் அனைவராலும் மங்களாசாசனம் செய்யப்பட்டவர் 

*கம்பர் தனது ராமக்கதையை இக்கோயிலில் அரங்கேற்றம் செய்தார் 

*இங்கு திருவிழாக்கள் அனைத்தும் ஆகம முறைப்படி நடைபெறுகிறது

* விஷ்ணு என்பதன் பொருள் 

*எங்கும் நிறைந்தவர் 
*நன்மை தருபவர் 
*மாயை அகற்றவர் 
*எல்லா பொருள்களுக்கும் உயிர் நாடியாய் இருப்பவர் 

*நகருக்கு மையத்தில் ஸ்ரீசைலம் மலை நாமகிரி நாமக்கல் என்றெல்லாம் பெயர் கொண்டு ஒரே கல்லால் ஆன குன்றில் அமைந்துள்ளது நரசிம்மர் கோவில் 

*இறைவனுக்கு சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்தால் நினைக்கின்ற காரியங்கள் நிறைவேறும்

* நல்ல எண்ணெயால் அபிஷேகம் செய்தால் வாழ்க்கை சுமூகமாகவும்  சுகமாகவும் இருக்கும் 

*பசும்பாலினால் அபிஷேகம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும் 

*அன்னத்தால் அபிஷேகம் செய்தால் ராஜபோக வாழ்க்கை கிட்டும் 

*பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்தால் உடல் நலம் பெறும் செல்வம் சேரும் 

*பசு தயிரினால் அபிஷேகம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும் 

*இளநீரினால் அபிஷேகம் செய்தால் குடும்பம் நலம் பெறும் 

*இப்படி பல்வேறு இறைவன் சார்ந்த இறை நம்பிக்கை சார்ந்த தகவல்கள் இந்த புத்தகத்தில் நிறைந்துள்ளது 

*இறை நம்பிக்கை உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய நல்ல புத்தகம் 

*கோவில்கள், சிற்பக்கலை, கட்டிடக்கலை போன்ற வரலாறுகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்

                        *குறிப்பு*
*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.


Post a Comment

0 Comments