*தினம் ஒரு புத்தகம்* - ஆரோக்கிய வாழ்விற்கு எளிய மருத்துவம்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:233

தேதி:25-03-2023

புத்தகம் எண்ணிக்கை:233               

புத்தகத்தின் பெயர் :ஆரோக்கிய வாழ்விற்கு எளிய மருத்துவம் 

ஆசிரியர் பெயர் : மரு. பெ.ராஜலட்சுமி பக்கங்கள் : 136 

விலை : 70 

பதிப்பகம்: சிவகுரு பதிப்பகம் 

  கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*நமது முன்னோர்களின்  மருத்துவ முறைகள் நோய்களை நீக்கவும் வராமல் தடுக்கவும் நோய் நீங்கிய பின் உடல் தேறவும் அந்நோய் மற்றவர்களுக்கு தொற்றாமல் இருக்கவும் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படாமல் இருக்கவும் உதவும் வகையில் சிறப்புற அமைந்திருந்தது 

 

*பக்க விளைவுகள் இல்லாமல் பார் புகழ வாழ்ந்த மருத்துவ முறையே நமது சித்த மருத்துவ முறையாகும் 

 

*நமது வீட்டில் உபயோகிக்கும் அஞ்சறை பெட்டியின் அருமருந்துகளே சித்த மருத்துவ மருந்துகள் 

 

*ஒவ்வொரு சுவையும் ஒரு நன்மையே 

நன்மைக் கருதி நம் உணவில் சேர்க்கப்பட்டுள்ளது 

 

*இனிப்பு சுவை வளமான தன்மையையும் ஐம்புலன்களுக்கு தெளிவையும் தரும்  உடலுக்கு வலிமையை செய்யும் 

 

*புளிப்பு சுவை இனிமையான ஒரு உணர்வையும் கொழுப்பையும் அதிகப்படுத்தும் செரிக்கும் தன்மையை அதிகப்படுத்தும் 

 

*உவர்ப்பு  சுவை தெளிவை தரும் எலும்புகளுக்கு வளமையை தரும் 

 

*கசப்பு மென்மைத் தன்மையை உண்டாக்கும் நரம்புகளுக்கு வளமையை தரும்  நஞ்சுக்களையும் நீக்கும் 

 

*காரம்  உமிழ்நீர் சுரப்பை அதிகப்படுத்தும் 

 

*துவர்ப்பு ரத்தத்தை தூய்மையாக்கும் ஆற்றலை வளர்க்கும் கொழுப்பை குறைக்கும் புண்களை ஆற்றும் 

 

*உணவே நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் உணவினையே மருந்தாக மாற்றினார்கள் 

 

*இந்தப்புத்தகத்தில் மொத்தம் 45 வகையான நோய்களுக்கு மருந்து கூறப்பட்டுள்ளது 

 

*மிகவும் பயனுள்ள மருத்துவ குறிப்புகளும் கண்டிப்பாக அனைவரும் படிக்கலாம்

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301 

Post a Comment

0 Comments