ஊஞ்சல் தேநீர் ஆசிரியர் : யுகபாரதி




தினம் ஒரு புத்தகம்

நாள்:278

தேதி:09-05-2023

புத்தகம் எண்ணிக்கை:278     

புத்தகத்தின் பெயர் :  ஊஞ்சல் தேநீர்

ஆசிரியர் :  யுகபாரதி

பதிப்பகம் :  

விலை : 400 

பக்கங்கசுவர்கள் 

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

 

*கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். 

 

*தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்-கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர்.

 

*கவிஞர் யுக பாரதிபத்து கவிதைத் தொகுப்புகளும் பத்து கட்டுரைத் தொகுப்புகளும் தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார். 

 

*இந்நூல், இவருடைய பதினொன்றாவது கட்டுரைத் தொகுப்பு. வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத் தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரை உரையாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கவனத்தைப் பெற்று வருகின்றன.

 

*திரைமொழியையும் மக்கள் மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்-பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்.

 

*யுகபாரதி ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவரின் இயற்பெயர் "சந்தான தேசன்" என்பதாகும். இவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களால் "சந்தானம்" என்று அழைக்கப்பட்டார். 

 

*இவர் 1990 களின் முற்பகுதியில் பத்திரிகைகளில் கவிதைகள் எழுதத் தொடங்கினார்

 

* ​​சிறந்த தமிழ்க் கவிஞரான சுப்பிரமணிய பாரதியின் நினைவாக "யுகபாரதி" என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

 

*கவிதைத் தொகுப்புகள்

1)தொகு

2)மனப்பத்தாயம்

3)பஞ்சாரம்

4)தெப்பக்கட்டை

5)நொண்டிக்காவடி

6)தெருவாசகம்

7)அந்நியர்கள் உள்ளே வரலாம்

 

*கட்டுரைத் தொகுப்புகள்

1)தொகு

2)கண்ணாடி முன்

3)நேற்றைய காற்று

4)ஒன்று

5)நடுக்கடல் தனிக்கப்பல்

6)வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்

 

* ஊஞ்சல் தேநீர் யுகபாரதியின் கட்டுரைத் தொகுப்புகள் ஆகும்

 

*ஊஞ்சல் தேநீர் எனும் தலைப்பில் குங்குமம் வார இதழ் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் ஆகும் 

 

*ஆளுமைகளின் நினைவுகளே நம்மை வழி நடத்துகின்றன 

 

*புதிய வலியை நோக்கி நம்முடைய பயணத்திற்கு அவர்களின் காலடிச் சுவடுகளை துணை வானத்திலிருந்து இயங்கக்கூடிய வசனங்களை பெற்று சமூகத்திற்கு வழங்கும் பேரை நாம் பெறவில்லை எனவே தான் வாழ்வில் இருந்து சிலவற்றை தேடிக் கொள்கிறோம் 

 

*நம்மையும் நம் வாழ்வையும் நமக்கு முன்னே இருந்த ஆளுமைகளை வடிவமைக்கிறார்கள். 

 

*ஊக்கமும் தன்னம்பிக்கையும் அல்லாமல் ஒருநாளும் நம்மால் கலக்க முடிவதில்லை அத்தகைய ஊக்கத்தையும் நம்பிக்கையும் பிறருடைய வாழ்விலிருந்து பெற்றுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம் 

 

*நமக்கு  கிடைத்துள்ள சொற்ப அனுபவங்கள் கூட அவர்களால் கிடைத்தது

 

* யார் மாதிரி நாம் இருக்கிறோம் அல்லது எவர் மாதிரி நாம் இருக்க விரும்புகிறோம் என்பது ஆராய்ந்து பார்ப்பதில் தான் வாழ்வை புரிந்து கொள்ள முடியும் 

 

*முன்மாதிரிகளால் உருவாக்கப்பட்ட நாம் ஒரு கட்டத்தில் அவ் மாதிரியாக வாழ விரும்புகிறோம் 

 

*நதியின் மேல் விழுந்த இலை நீரோடும் திசை வெளியே பயணிப்பது எப்படி தவிர்க்க முடியாததாயே ஆகிறதோ அப்படியே என் பயணமும் அமைந்திருக்கிறது 

 

*கால ஓட்டத்தில் நான் சந்தித்த ஆளுமைகள் அவர்களின் அறிவுரைகள் ஆலோசனைகள் எனக்கு மட்டும்  அல்ல அனைவருக்கும் உரியவை 

 

*தொடர் வாசிப்பின் பயனே இக்கட்டுரை 

 

*வாழ்வின் ஏதோ நல்ல சந்தர்ப்பத்தில் இக்கட்டுரைகளில்  இடம் பெற்றுள்ள ஆளுமைகளை நான் சந்தித்து இருக்கிறேன் அவர்களின் சிறப்பை பதிவு செய்து உள்ளேன்

 

 *யுகபாரதி கவர்ந்த 22 ஆளுமைகளைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் 

 

* அதிகார கண்களுக்கு அவர் சாதாரணமானவர் ஊடகங்களுக்கு எளிமையானவர். ஊழல் அரசியல்வாதிகளுக்கு பிழைக்க தெரியாதவர் இயற்கை சொரண்டுபவர்களுக்கு எதிரானவர் எவர் கண்களிலும் பார்த்தாலும் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கு மட்டுமே அவர் தோழர் வேட்பாளராக தோற்று இருக்கலாம் ஆனால் ஒருபோதும் தோழராக அவர் தோற்றதில்லை என்று தோழர் நல்லக்கண்ணு பற்றி கூறுகிறார் 

 

*இவர் எழுதியுள்ள ஒவ்வொரு ஆளுமைகளைப் பற்றி படிக்கும் போது அவர்களிடம் உள்ள இவர் கண்ட நல்ல குணங்கள் பண்புகள் நமக்கு அப்படியே மனதில் பதிந்து விடுகிறது 

 

*இவரை பாதித்த ஆளுமைகள் நம்மையும் பாதித்து விடுகிறார்கள் அந்த அளவிற்கு இவரின் எழுத்து நடை நம்மை ஈர்க்கிறது 

 

* வாழ்க்கை வரலாறுகளை படிப்பதன் மூலமும் மிகச்சிறந்த ஆளுமைகளை பற்றி படிப்பதன் மூலமும் நம்மை அறியாமலே அவர்களின் நல்ல செயல்கள் நம்முடைய மனதிற்குள் புகுந்து விடுகிறது

 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் பள்ளிபாளையம் அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.


 

Post a Comment

0 Comments