*தினம் ஒரு புத்தகம்* - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:253

தேதி:14-04-2023

புத்தகம் எண்ணிக்கை:253             

புத்தகத்தின் பெயர் : புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 

ஆசிரியர் பெயர் :வல்லிக்கண்ணன் பக்கங்கள் : 358 

விலை: 200 

பதிப்பகம் : பாவை

*புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வரலாற்று நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகளே ஆகும்.

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி திரு. வல்லிக்கண்ணன் தீபம் இதழில் எழுதிய கட்டுரைத் தொடரை முதல்முதலில் நூல்வடிவில் திரு.சி.சு. செல்லப்பா தம் எழுத்து பிரசுரம் வெளியீடாகக் கொண்டு வந்தார் அந்த நூலே  இந்த நூல் ஆகும்

 

* 1979 வரை வெளிவந்த புதுக்கவிதை நூல்களின் பட்டியல் ஒன்றும் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளது.

 

*1978 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமிப் பரிசு இந்நூலுக்கு கிடைத்தது

 

*“சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை என்றார் பாரதி.

 

*புதுக்கவிதை முதலில் ‘வசன கவிதை என்றும் பின்னர் ‘சுயேச்சா கவிதை ‘லகு கவிதை ‘விடுநிலைப்பா என்றும், “கட்டிலடங்காக் கவிதை“ என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.

 

*வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள் என்ற புதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி அதைப் போலத் தமிழிலும் புதுமை படைக்கவேண்டும் என்ற ஆர்வத்தால் காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார்.  அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“ என்பதாகும். 

 

*பாரதி வழியில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபலன்,வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்து தமிழ்ப்புதுக்கவிதைகளை வளர்த்தனர்.

 

*புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள்

1.        மணிக் கொடிக் காலம்

2.        எழுத்துக் காலம்

3.        வானம்பாடிக் காலம் ஆகிய காலகட்டங்களில் தோன்றிய தமிழ் இதழ்கள் புதுக்கவிதைத் துறைக்குப் பொலிவூட்டின

 

*மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன், சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன.  இவற்றுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தை மணிக்கொடிக் காலம் என்று அழைத்தனர்.

 

* இக்காலத்தில், புதுக்கவிதை முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், க.நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் மணிக்கொடிகாலத்துக் கதாநாயகர்களாக விளங்கினர்.

 

*எழுத்து காலகட்டத்தில் எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற, போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில் புதுக்கவிதையை வளர்த்தன.

 

*ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன், ஆகியோர் ஒன்றுசேர்ந்து சிசுசெல்லப்பா,  க.நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்துக்கு சிறப்பு சேர்த்தனர்

 

*வானம்பாடி காலகட்டத்தில் வானம்பாடி,தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன. 

 

*புவியரசு, ஞானி, முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை கொங்காண்டான், தமிழ்நாடன், சக்தி கனல், மு.மேத்தா, தமிழன்பன்,  ரவீந்திரன் முதலியோர் வானம்பாடிக் கவிஞர்களாவர்

 

*மனமே! புலன்கள் தளையல்ல,

விடுதலைக் கால்வாய்.

அவைகளுக்கு சக்தி தந்தவன் ஈசன்-

அவனை அறிய,

ஆதி அழகில் மூழ்கி எழ,

கிளியே! ஈசனே ஊனாய், உருவாய், மலர்ந்திருக்கிறான்.

புலன்களொரு ஏணி,

ஏணியைத் தூற்றாதே!

(கிளிக்குஞ்சு) ந.பிச்சமூர்த்தி

 

*பேதாபேதம் என்றொரு கவிதை. இது வேறு ரகமான சோதனை.

 

மண்புழு

மண்ணைப்

பொன்னாக்கும்!

 

இலைப்

புழு

பட்டு நெய்யும்!

 

மனிதரில்

சிலந்தியும்

 

பெண்டிருட்

சிதலும்

உண்டு.

 

*‘அலங்காரம் என்றொரு சொல்லடுக்கு.

 

மயிற்கண்

முலைப்பால்,

நெடுவேனில்

கார்காலம்

சென்று தேய்ந்திறுதல்,

கொல்லிப்பாவை;

மன்னுமிவ்வுலகு.

                                

*படிமச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகப் பலரால் பல இடங்களில் கையாளப் யபெற்றுள்ள ‘விடிவு இவ்வைந்து கவிதைகளில் ஒன்று.

 

பூமித் தோலில்

அழகுத் தேமல்

பரிதி புணர்ந்து

படரும் விந்து

கதிர்கள் கமழ்ந்து

விரியும் பூ.

இருளின் சிறகைத்

தின்னும் கிருமி

வெளிச்சச் சிறகில்

மிதக்கும் குருவி

 

*சி. மணி சிறியசிறிய -ஆயினும் நயங்கள் நிறைந்த- கவிதைகள் அநேகம் எழுதுயிருக்கிறார். 1963 -64 வருடங்களில். எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடலாம்.

 

வெளுத்தது நான்கு

 

துவைக்க

வெளுத்தது

துணி.

 

காதலன்

சுவைக்க

வெளுத்தது

இதழ்!

 

ஞாயிறு

வெறிக்க

வெளுத்தது

நிலம்

 

வாழ்வு

நெறிக்க

வெளுத்தது

முடி

 

*கல்யாண்ஜியின் கவிதைகளில் ‘இதயவீணை தூங்கும் போது அருமையானது.

 

‘பேசும் பாரென் கிளியென்றான்

கூண்டைக் காட்டி வாலில்லை

வீசிப் பறக்க சிறகில்லை

வானம் கைப்பட வழியில்லை

பேசும் இப்போது பேசுமென

மீண்டும் மீண்டும் அவன் சொல்ல

பறவை யென்றால் பறப்பதெனும்,

பாடம் முதலில் படியென்றேன்.

 

*மு.மேத்தாவின் கவிதை

 

வைகறைப் போதுக்கு

வார்த்தைத் தவமிருக்கும்

வானம்பாடிகளே - ஓ

வானம்பாடிகளே!

இந்த பூமி உருண்டையைப்

புரட்டி விடக் கூடிய

நெம்புகோல் கவிதையை

உங்களில் யார் பாடப்போகிறீர்கள்?

ஓ! என் தோழரே

ஒப்பற்ற

அந்த மனிதாபிமானக் கவிதையை

நம்மில் யார் பாடப்போகிறோம்?

 

* புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் இந்நூலில் பல்வேறு புதுக்கவிதைகளை காலம் முறைப்படி ஆராய்ந்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளது 

 

*புதுக்கவிதை எழுதுவதற்கும் பயிற்சி செய்வதற்கும் இது ஒரு சிறந்த நூலாகும்

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments