*தினம் ஒரு புத்தகம்* - நேருவின் உலக சரித்திரம்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:250

தேதி:11-04-2023

புத்தகம் எண்ணிக்கை:250             

புத்தகத்தின் பெயர் : நேருவின் உலக சரித்திரம் 

ஆசிரியர் பெயர் : த.நா. ஸேனாதிபதி பக்கங்கள் : 568

விலை: 360

பதிப்பகம் : கலா நிலையம்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*இந்தப்புத்தகத்தில் மொத்தம் 53 கட்டுரைகள் உள்ளன 

 

*சிறை வாழ்க்கையினால் எனக்கு பல நன்மைகள் உண்டு இதனால் ஓய்வு கிடைக்கிறது ஓரளவுக்கு பற்றற்று இருக்கவும் முடிகிறது என்கிறார் நேரு

 

*புத்தகங்களை சிறையில் அமைதியாக படிக்க முடிகிறது குறிப்பெடுத்துக் கொள்ளவும் முடிகிறது அவையெல்லாம் சிறையில் அனுமதிக்கிறார்கள் என்கிறார் நேரு 

 

*நான் சிறையில் கழித்த பல ஆண்டுகள் என் வாழ்விலே இனிமையாக போக்கிய காலம் என்று சொல்லத்தயாராக இல்லாவிட்டாலும் ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும் அப்போதுதான் படிக்கவும் எழுதவும் நல்ல வாய்ப்பு கட்டியது இதனால் தான் அந்தக் காலத்தை நன்றாக கழிந்தது  என்று நான் சொல்லுவேன் 

 

*நேருவின் இந்த உலக சரித்திர தத்துவ நூலில் நான்கு அம்சங்கள் இருக்கின்றன 1)எதையும் பறந்து காணும் பண்பு 2)பகுத்தறிவு 

3) நீதியை காணும் பண்பு 

4)மார்க்சிய வாதம் என விவரிக்கலாம் 

 

*மொத்தமாக வரலாற்றை நோக்குகிறார் அவருடைய சிந்தனையில் முக்கியமான அல்லது மையக்கருத்து மனிதன் காட்டுமிராண்டி நிலையிலிருந்து எழுந்து நாகரீக நிலையை நோக்கி வளர்ந்தது தான் நாகரீகத்தின் நுழைவாக கிட்டிய நலங்களான கல்வி ,விஞ்ஞானம் ,நீதி, கலை ,சுதந்திரம், சமூக கூட்டுறவு ,இவை தனிப்பட்ட ஒரு பண்பாட்டுக்கோ மனித இனத்துக்கு மட்டுமே உரிமை அல்ல இவை எங்கும் பறந்து விளங்குபவை 

 

*நேருவின் சிந்தனைப் போக்கில் எதையும் பறந்து காணும் பண்புக்கு அடுத்தபடியாக பகுத்தறிவு நோக்கு ஒரு அடிப்படை அம்சமாக இருக்கிறது 

 

*இந்தப் புத்தகம் உலக சரித்திர காட்சிகள் என்ற புத்தகத்தின் சுருக்கமாகும்

 

*இந்திரா காந்திக்கு அவருடைய தந்தை ஜவாஹர்லால் நேரு எழுதிய கடிதத் தொகுப்பைக் கொண்ட ‘உலக சரித்திரம்' என்ற நூலில் தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பிணைப்பையும் பாசத்தையும் எழுத்தார்வத்தையும் உணர முடியும். 

 

*பல்வேறு காலகட்டங்களில் தன் மகளுக்கு எழுதிய கடிதங்களில் உலக நாடுகளின் தோற்றம், பல நாடுகளின் அரசியல், சமய, சமூக, பண்பாட்டு நிலை, புரட்சிகள், உலகப் போர்கள் உள்ளிட்ட பலவற்றையும் விவாதிக்கிறார் நேரு. 

 

*இந்திரா காந்தி, அவர்கள் “என் அப்பா எழுதிய ‘உலக வரலாறு, ‘சுயசரிதை, ‘இந்திய வரலாறு ஆகிய மூன்று நூல்களும் என் வாழ்க்கை முழுதும் எனக்குத் துணையாக இருந்துவந்துள்ளன. அவற்றிலிருந்து பிரிந்திருப்பது என்பது இயலாதது. குறிப்பாக, ‘உலக வரலாறு எனக்காகவே எழுதப்பட்டது'' என்கிறார்.

 

* நேருவின் இந்தக் கடிதங்களில் வரலாற்றின் மீதான அவருடைய ஈடுபாடு, தேடல் திறன், பரந்துபட்ட அறிவு, வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்கும் எழுத்து பாணி, அழகான சொற்பயன்பாடு போன்றவற்றைக் காண முடியும். 

 

*கன்னியாகுமரியைப் பேசும்போது அது இமயமலை வரை நீள்கிறது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 19-ம் நூற்றாண்டு வரையிலான நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். 

 

*சிந்தனையாளர், தலைவர்கள், பேரரசுகள், தொழில் புரட்சி, அறிவியல் வளர்ச்சி, உலகப் போர் எல்லாம் வருகின்றன. 

 

*கடைசிக் கடிதத்தில், “இது வரலாறல்ல. இவை நமது கடந்த காலப் பதிவுகள். வரலாறு உனக்கு ஆர்வமூட்டினால், வரலாற்றின் அழகை நீ உணர்ந்தால் பல நூல்களின் துணையோடு கடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடியும் என்கிறார்.

 

*உலக வரலாற்றை ஒரு பறவைப்பார்வையாக இந்தக் கடிதங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். 

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301


         இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD -ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

                   

Post a Comment

0 Comments