தினம் ஒரு புத்தகம் - காவல் கோட்டம்

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:260

தேதி:21-04-2023

புத்தகம் எண்ணிக்கை:260    

புத்தகத்தின் பெயர்: காவல் கோட்டம் 

ஆசிரியர் :சு.வெங்கடேசன் 

விலை : 770 

பக்கங்கள் : 1173

பதிப்பகம்  ஆனந்த விகடன் 

 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


*இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்திய அகடாமி விருது பெற்ற நாவல் இது 

 

* காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துக்கள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம் 

 

*காவல் கோட்டம் என்ற இந்த நூலில் குறிப்பிடும் குற்றப்பரம்பறையினர் யாரையும் நம்ப வைத்து கழுத்து அறுத்தது கிடையாது காவல் தொழில் பார்த்தவர்கள் ஆடுகளை இடையில் இருந்து திருடும் கொள்ளை கூட்டமாக உருவானது பெரும் சோகம் இந்த குற்றப்பரம்பரையின் வரலாற்றில் எத்தனை வீரம் எத்தனை சோகம் எத்தனை நிகழ்ச்சி இதோ நம் தமிழகத்தில் மண் மணக்கும் மதுரையில் நிலை கொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் வரலாறு இந்த காவல் கோட்டம் இதன் மூலம் மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றை தரிசிக்கலாம் 

 

*பிரம்மாண்டம் என்பது பக்க அளவல்ல கால அளவு தான் 600 வருஷத்து நீள் பயணத்தை கதாபாத்திரத்தின் வழியே அறிந்து உணர்ந்து சமூக வரலாற்றின் பெரும் பரப்புகளை பிளந்து கொண்டு கடைசி அத்தியாயத்தின் வழியே மேல் என்னும் என்கிறார் நூல் ஆசிரியர் 

 

*வரலாறுகள் வழி வழியாக வாய்மொழியாக சொல்லப்பட்டு வருபவை மாத்திரமல்ல எனினும் குற்றப் பரம்பரையின் எஞ்சிய கடைசி கட்ட வாரிசுகள் தங்கள் பரம்பரையை பற்றி தாங்களே சொல்லும் கதைகள் சுவாரஸ்யம் நிறைந்தவை 

 

*வீரமும் தீரமும் இந்த பரம்பரையும் சொத்தாக இருந்துள்ளதை காவல் கோட்டம் பதிவு செய்துள்ளது 

 

*நூல் ஆசிரியர் சு.வெங்கடேசனின் பத்தாண்டு கால உழைப்பு இந்த நூல்

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments