*தினம் ஒரு புத்தகம்* - இரட்டைமலை சீனிவாசன்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:204

தேதி:24-02-2023

புத்தகம் எண்ணிக்கை:204

புத்தகத்தின் பெயர் :இரட்டைமலை சீனிவாசன் 

ஆசிரியர் :ஜே .பாலசுப்பிரமணியன் பக்கங்கள் :96 

விலை :50 

பதிப்பகம் :சாகித்ய அகாடமி 

 

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*விளிம்பு நிலை மக்களின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்ட இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறே இந்தப்புத்தகமாகும் 

 

*செங்கல்பட்டு மாவட்டத்தில் கோலியாளம் கிராமத்தில் ஜூலை 7ஆம் தேதி 1859 ஆம் ஆண்டு பிறந்தார் 

 

*இந்திய துணைக்கண்டத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களிலிருந்து பட்டப்படிப்பை முடித்த பெருமைக்குரியவர் இரட்டைமலை சீனிவாசன் 

 

*1891 பறையர் மகாஜன சபையை உருவாக்கினார் அதுவே ஆதிதிராவிட மகாஜன சபையாக மாறியது 

 

*ஆதிதிராவிட மக்கள் விழிப்புணர்வுக்காக 1893 ஆம் ஆண்டு பறையன் எனும் இதழை வெளியிட்டார் 

 

*தென்னாப்பிரிக்காவில் நேட்டாலில் உள்ள நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார் 

 

*தமிழ்நாட்டில் 74 பெயர்களில் அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை பொதுப் பெயரில் ஆதி திராவிடர் என அழைக்க ஆணையைப் பெற்றுத் தந்தார் 

 

*இவரின் மகத்தான பணியை பாராட்டி ஆங்கில அரசு ராவ் சாகிப் பட்டம் வழங்கி சிறப்பித்தது 

 

*வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அம்பேத்கர் உடன் கலந்து கொண்டார் 

 

*ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடம் நாட்டின் விடுதலை என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதலையே என்று கோரிக்கை வைத்தார் 

 

*1931 ஆம் ஆண்டு ராவ் பகதூர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார் 

 

*கற்பி,புரட்சி செய்,ஒன்றுசேர் என்பது வார்த்தை வரிகளில் அல்லாமல் வாழ்க்கை வரியாக அமைத்து செயல்பட்டவர் 

 

*1932 ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தத்தில் இரட்டைமலை சீனிவாசன் கையொப்பமிட்டார்

 

* 1945 இல் இயற்கை எய்தினார்

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments