*தினம் ஒரு புத்தகம்* - காமத்தில் இருந்து கடவுளுக்கு

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:213

தேதி:05-03-2023

புத்தகம் எண்ணிக்கை:213

புத்தகத்தின் பெயர் :காமத்தில் இருந்து கடவுளுக்கு 

ஆசிரியர் : ஓஷோ 

பக்கங்கள் :256 

விலை :150 

பதிப்பகம் : மா பிரேம் விமலா திருச்சி

 

* ஓசோவை ஏதேனும் ஒரு வகையில் வகைப்படுத்துவது கடினம் மனித குலத்தை மேன்மைப்படுத்தும் எல்லா கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறார் ஆனால் அதே சமயம் குறிப்பிட்ட தத்துவத்தையோ எண்ணத்தையோ அவர் சார்ந்திருக்கவில்லை 

 

*மத்திய பிரதேசம் மாநிலம் குச்சிவாடாவில் 1931 டிசம்பர் 11ஆம் தேதி அன்று பிறந்த ஓஷோவின் இயற்பெயர் சந்திரமோகன் ஜெயின் 

 

*சிறுவயதிலிருந்து ஊர் சுற்றிப்பார்க்க மிக்க விருப்பம் கொண்டிருந்ததாக Glimps of a golden childhood என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் 

 

*1990 ஜனவரி 19ஆம் தேதி இறந்தார் 

 

*ஓசோ என்ற சொல் ஒஷியானிக் என்ற சொல்லிலிருந்து உருவானது ஓஷியானிக் என்றால் கடலில் கரைந்து போவது என்று பொருள் 

 

*ஓசோவின் பொருள் வானம் பூச்செறிந்து ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன் 

 

*ஐந்து தலைப்புகளில் இந்தப்புத்தகத்தில் கட்டுரைகள் உள்ளன எனக்கு பிடித்த தலைப்பு தியானத்தின் உச்சநிலையாகும் 

 

*வாழ்க்கையில் அழகானதும் நேர்த்தியானதும் சில விஷயங்களை நாம் வாழ்ந்து பார்க்க முடியும் அறிந்து கொள்ள முடியும் ஆனால் அவைகளை விவரித்தால் அவைகளுக்கு பொருள் கூறுவது மிகவும் கடினம் தான் 

 

*கடவுள் கொடுத்துள்ளவற்றின் மீது நம்பிக்கை கொள்வதுதான் உங்களது விடுதலைக்கான வாயில் 

 

*மனிதனைத் தவிர எதுவும் வீட்டில் வசிப்பதில்லை 

 

*அன்பு என்பது கொடுத்துக் கொண்டே இருப்பது அன்பு கொடுப்பதற்கு எப்போதும் தயார் நிலையில் இருக்கும் 

 

*நாம் நமது வாழ்க்கையில் என்ன செய்கிறோம் என்பதுதான் நமது எதிர்காலத்தை உருவாக்குகிறது 

 

*சக்தியை பாதுகாப்பது தான் சமயநெறியின் அடிப்படை 

 

*ஒவ்வொரு இளம் மனதிலும் தியானத்தின் பயணத்தை நாம் ஆரம்பித்து வைக்காத வரையில் இந்த பூமியில் அமைதி ஒருபோதும் ஏற்படாது 

 

*குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மௌனமாக இருப்பதற்கு ஒவ்வொரு வீட்டிலும் பழக்க வேண்டும் பெற்றோர்களாகிய நீங்களும் அவர்களோடு சேர்ந்து மௌனத்தை பயிற்சி செய்தால் அது சாத்தியப்படும் 

 

*தியானம் ஒரு மணி நேரம் மௌனமாக இருப்பது சக்தியை சேகரம் செய்கிறது அதன் பின் 14 வயதில் அது சக்தி அலையில் மிகுந்து தியானத்தின் வாயிலை தள்ளி நிற்கிறது 

 

*பிரம்மச்சாரியத்தின் முதல் படி காமத்தை கடந்து செல்வதுதான் அதற்கான வழி தான் தியானம் இரண்டாவது படி அன்பு சிறு வயது முதற்கொண்டு குழந்தைகளுக்கு அன்பு செலுத்த கற்றுக் கொடுக்க வேண்டும் 

 

*கேள்வி என்னவென்று புரிந்து கொள்ளாமல் பதில் சொல்ல முயல்வது ஒரு மனிதனை முட்டாள் ஆக்கிவிடும் 

 

*அறிவில்லாமல் உயிர் வாழும் மதம் ஒரு மதமாகாது 

 

*தன்னைத்தானே பட்டை தீட்டிக் கொள்வதே தியானம் 

 

*தன் எண்ணங்களை கடந்து செல்வதே தியானம்

 

* தன்னை அழித்து உருக்கி ஓடச்செய்வதே தியானம்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments