*தினம் ஒரு புத்தகம்* - கலைத்திட்ட செயல்பாட்டின் கோட்பாடுகள்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:235

தேதி:27-03-2023

புத்தகம் எண்ணிக்கை:235             

புத்தகத்தின் பெயர் :கலைத்திட்ட செயல்பாட்டின் கோட்பாடுகள் 

ஆசிரியர் : என். ராஜேஸ்வரி 

பதிப்பகம் : சார்ந்த பதிப்பகம் 

பக்கங்கள் : 344 

விலை : 110

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

 

    *கலைத்திட்டம் என்பது பார்க்கக் கூடியது என்பதை விட உணரக்கூடியது என்பதே பொருத்தமானது 

 

*கலைத்திட்டம் கல்வியின் இலக்கை அடையத் துணை நிற்கும் 

 

*பாடப் பொருளையும் கற்பிக்கும் முறையும் குறிக்கும் 

 

*மாணவர்கள் 

ஆசிரியர்கள் 

பாடப்பொருள் 

மதிப்பீட்டு முறை

கற்பிக்கும் முறை இவற்றிற்கு இடையே உள்ள தொடர்பால் மாணவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களின் தொகுப்பே கலைத்திட்டம் 

 

*கலைத்திட்டம் என்பது ஆசிரியரின் கையில் உள்ள ஆயுதம் போன்றது இக்கருவியானது மாணவர்களைத் தன் குறிக்கோளுக்கு ஏற்ப நல்ல விதத்தில் வகுப்பறையில் உருவாக்க உதவுகிறது 

 

*கலைத்திட்டத்தின் மிக முக்கியமான கூறுகள் நோக்கம் ,பாடப்பொருள் ,கற்பிக்கும் முறை ,மதிப்பிடுதல்.

 

* கலைத்திட்டம் பல்வேறு கோட்பாடுகளை உள்ளடக்கியது மாணவர் மையக் கோட்பாடு 

இயற்கை கோட்பாடு 

ஒருங்கிணைந்த கோட்பாடு புற்றுநோக்கால் கோட்பாடு 

ஆக்கத்திறன் கோட்பாடு 

நெகிழ் உடமை கோட்பாடு 

முன்னேற்ற கோட்பாடு 

சமூக மையக் கோட்பாடு 

செயல்பாட்டு மையக் கோட்பாடு எல்லாவற்றையும் உள்ளடக்கிய கோட்பாடு 

பயன்பாட்டு நிலை கோட்பாடு 

அமைப்பு கோட்பாடு 

 

*பெஞ்சமின் புலமின் வகைப்பாடு அறிவு சார் பகுதிகள் ,எழுச்சி சார் பகுதிகள் ,முயற்சி சார் பகுதிகள் 

 

*கற்பித்தல் என்பது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் ஒருங்கிணைந்த செயல் முறையை குறிக்கும் 

 

*கற்பித்தல் என்பது எளிமையாகவும் சிறப்பாகவும் அமைய பயன்படுத்த வேண்டிய உத்திகள்

 

*தெரிந்தவைகளில் இருந்து தெரியாதவைக்கு செல்லுதல் 

 

*எளிமையில் இருந்து  கடினமானவைகளுக்கு செல்லுதல் 

 

*காட்சிப்பொருளிலிருந்து கருத்துப் பொருளுக்கு செல்லுதல் 

 

*சிறப்பிலிருந்து பொதுவுக்கு செல்லுதல் 

 

*முழுப்பகுதியில் இருந்து தனிப் பகுதிக்கு செல்லுதல் 

 

*உளவியலில் இருந்து தர்க்கவியலுக்கு செல்லுதல் 

 

*எளிமையில் இருந்து கடினமானவைக்குச் செல்லுதல் 

 

*பகுப்பு முறையில் இருந்து தொகுப்பு முறைக்கு செல்லுதல்

 

* திட்டமிட்டவைகளில் இருந்து திட்டமிடாதவைக்கு செல்லுதல் 

 

*உண்மையிலிருந்து மாதிரிக்கு செல்லுதல் போன்ற முறைகளை ஆசிரியர்கள் பயன்படுத்தினால் கற்பித்தல் சிறப்பாக இருக்கும் 

 

*இந்தப்புத்தகமானது முழுக்க முழுக்க ஆசிரியர்களுக்கு பயன்படும் புத்தகமாகும் 

 

*கற்பித்தல் திறன்கள் நுண்ணிலைக் கற்பித்தல் பற்றி கூறப்பட்டுள்ளது 

 

*பாடம் திட்டமிடுதல் மதிப்பிடுதல் பற்றி விளக்கப்பட்டுள்ளது 

 

*இந்தப்புத்தகத்தை பெற்றோர்கள் படித்தால் தன் குழந்தைக்கு வீட்டில் எவ்வாறு சொல்லிக் கொடுக்கும் திறனை அமைத்துக் கொள்ளலாம் என்பதை உணர்ந்து கொள்ளலாம் 

 

*ஆசிரியரைக்காட்டிலும் குடும்பத்தில் கல்வி அறிவு பெற்ற பெற்றோர்கள் அல்லது மாணவரின் மூத்த சகோதரர்களோ சகோதரிகளோ இந்தப் புத்தகத்தை படித்து பயன்படுத்தலாம்

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments