என்னை நான் சந்தித்தேன் ஆசிரியர் :ராஜேஷ் குமார்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:265

தேதி:26-04-2023

புத்தகம் எண்ணிக்கை:265             

புத்தகத்தின் பெயர் :என்னை நான் சந்தித்தேன் 

ஆசிரியர் :ராஜேஷ் குமார் 

பக்கங்கள்: 504 

விலை :390 

பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

*2010-ல் தமிழக அரசு இவருடைய எழுத்துப் பணியைப் பாராட்டி கலைமாமணி பட்டத்தை அளித்து கௌரவித்தது. 

 

*க்ரைம் நாவல்கள் மட்டும் அல்ல, சமுதாய அவலங்களைச் சாடும் சமூக நாவல்களையும் 1500 என்கிற எண்ணிக்கையையும் தாண்டி இன்னமும் எழுதிக் கொண்டிருப்பவர்.

 

*41 ஆண்டுகளில் நான்கு தலைமுறை வாசகர்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர். 

 

*தமிழில் வெளிவந்த, இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கிற அனைத்து மாத, வார, நாளிதழ்களில் 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர்.

 

*எழுத்துலகில் அவர்க்கு நேர்ந்த அவமானங்களையும், கிடைத்த வெகுமானங்களையும்  தனக்கே உரித்தான விறுவிறுப்பான பரபரப்பான நடையில் 500க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் கொட்டியுள்ளார்.

 

*ராஜேஷ்குமார் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். குற்றப் புனைவு, அறிபுனை மற்றும் துப்பறிவுப் புனைவு பாணிகளில் 1500க்கும் மேற்பட்ட புதினங்களையும், 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்

 

*1980களிலும் 90களிலும் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த “பாக்கெட் நாவல் புத்தகங்களை ஆயிரக்கணக்கில் எழுதியதன் மூலம் புகழ் பெற்றவர். தமிழின் காகிதக்கூழ் புனைவின் ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

 

*கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், 20 மார்ச், 1947இல் பிறந்தார்.

 

* இவரது இயற்பெயர் ராஜகோபால். கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் கல்வி கற்றார். பவானிசாகர் பயிற்சிப் பள்ளியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 

 

*1968இல் கல்கண்டு இதழில் தன் முதல் சிறுகதையை வெளியிட்டார். 

 

*இவரது முதல் புதினம் “வாடகைக்கு ஒரு உயிர் 1980இல் வெளியானது. 

 

*பின் ஆனந்த விகடன், குமுதம் போன்ற வெகுஜன இதழ்களிலும் பெஸ்ட் நாவல், திகில் நாவல், எவரெஸ்ட் நாவல், கிரேட் நாவல், கிரைம் நாவல் போன்ற பாக்கெட் நாவல் பதிப்புகளிலும் இவரது படைப்புகள் வெளியாகின. 

 

*விவேக்-ரூபலா என்ற புகழ்பெற்ற துப்பறியும் சோடிப் பாத்திரங்கள் இவரால் உருவாக்கப்பட்டவை. 

 

*இவரது சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பிளாஃப்ட் பதிப்பத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 

 

*2009 ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,  M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments