தமிழர் நாட்டுப் பாடல்கள் தொகுப்பாசிரியர் : ந.வானமாமலை

 


தினம் ஒரு புத்தகம் 

நாள்:282

தேதி:12-05-2023

புத்தகம் எண்ணிக்கை:282   

புத்தகத்தின் பெயர் : தமிழர் நாட்டுப் பாடல்கள் 

தொகுப்பாசிரியர் : ந.வானமாமலை 

பக்கங்கள் :580 

விலை : 750 

பதிப்பகம் : நியூஸ் செஞ்சுரி புக் ஹவுஸ் 

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*தமிழக நாட்டார் பாடல்களை சமுதாய கண்ணோடுத்தோடு அணுகும் முறையை இத்தொகுப்பு அறிமுகப்படுத்தியுள்ளது 

 

*தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கையின் பல கோணங்களையும் அவர்களது சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன

 

* சிறப்பிற்கும் பாராட்டிற்கும் உரிய அரிய வகையிலான இம்முயற்சி கலை இலக்கிய ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகுந்த பயன் அளிப்பதாகும் 

 

*தமிழகப்பல்கலைக்கழகங்களிலும் கேரளப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த் துறையில் இந்நூல் மூலநூலாக பயன்பட்டு வருகிறது 

 

*ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் தமிழக நாட்டுப் பாடல் துறையில் இது சிறந்த நூல் என மதிக்கின்றனர் 

 

*10 தலைப்புகளை உடையது 

 

*10தலைப்பின் கீழ் பாடல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன 

 

*தெய்வங்கள் 

மழையும் பஞ்சமும் 

தாலாட்டு 

விளையாட்டு 

காதல் 

திருமணம் 

குடும்பம் 

சமூகம் 

உழவும் தொழிலும் 

ஒப்பாரி 

 

*1964ஆம் ஆண்டு வெளியான தமிழர் நாட்டுப் பாடலின் மறு பதிப்பு தான் அச்சுப் பிழைகள் விடுபட்டு போன சொற்கள் வரிகள் ஆகியவற்றை திருத்தி சேகரிப்பு விவரங்களில் உள்ள குறைகளை போக்கி இந்த பதிப்பு வெளிவந்துள்ளது 

 

*அழகிரிசாமி போன்ற இலக்கிய ஆர்வலர்களின் போற்றுதலையும் பத்திரிகைகளின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது 

 

*இந்த நூல் ஒரு நாட்டுப் பாடல் எப்படி உருவாகிறது தொழில் களங்கலில் ஒரு பாட்டை பலர் உருவாக்கலாம் 

 

*நடுகை முக்கிய தொழில் பாடல்கள் தொழிலாளர் அது பொதுவான உணர்ச்சியால் விசையாகி வெளிப்படுகின்றன அதுவும் அல்லாமல் ஒரு சமூக நிகழ்ச்சி வர்ணிக்கவும் சிக்கலான கதை அமைப்பை கதைப்பாடல் ஆகவும் இந்த முறை உதவுகிறது 

 

*நாட்டு மக்களின் பிரதிபலிப்பை வெளியிடுகிறது 

 

*நாட்டுப் பாடல்கள் கிராமப்புற வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையவை 

 

*கதைப்பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் நாட்டுப்புற வாழ்க்கையின் அன்றாட சம்பவங்களையே பொருளாக கொண்டவை 

 

*இதனால் தான் வாழ்க்கையின் சாதாரண சம்பவங்களான பிறப்பு ,குழந்தை பருவ நிகழ்ச்சி விளையாட்டு ,காதல் ,பொருந்தா மானம் ,குடும்ப விவகாரங்கள் கிராம தொழில்கள் ,பஞ்சம் ,கிராம தேவதைகள் ,போன்றவை நாட்டுப் பாடல்களின் பொருளாக அமைந்துள்ளன

 

* ஏழ்மை நிலை பொறுமையின் எல்லை தாண்டியபோது கிராம மக்கள் கிராம சமுதாய அமைப்பு எதிர்த்து போராடி உள்ளனர் இத்தகைய போராட்டங்களை பற்றி நாட்டு பாடல்களில் இருந்தும் கல்வெட்டுகளில் இருந்தும் அறிந்து கொள்கிறோம் 

 

* தாய் தந்தை இறக்கும்போது மகள் பாடும் ஒப்பாரிகள் முக்கியமாக சொத்துரிமை பிரச்சனையையும் தாய் தந்தையர் காலத்திற்குப் பின் பிறந்த வீட்டில் உரிமை இன்றிப்போவதையும் சொல்லுகின்றன 

 

*மனதைக் கவர்ந்த சில நாட்டுப்புறப் பாடல்கள்*

 

*விநாயகனே வணங்கி பாடும் பாடல்

 

*காலை ஏறு 

முந்தி முந்தி விநாயகனே முக்கண்ணனார் தம் மகனே

 கந்தருக்கு முன் பிறந்த 

காளை கணபதியே 

வேலருக்கு முன் பிறந்தனே 

விக்கினரே 

முன் நடவாய்...

 

*மாரி அம்மனை வேண்டுதல் வைத்து பாடும் பாடல்

 

* நாட்டு அரசன் 

கோட்டையிலே 

நல்லதொரு கண்ணாத்தா 

வயிற்று வலி தீர்த்தின்னா

 வந்திருவேன் சன்னதிக்கு 

 

*தாய் பாடும் அழகிய தாலாட்டுப்பாடல்

 

*ஆரடிச்சா நீ அழுத ?

ஆரடிச்சா சொல்லியழு 

பேரனடிச் சார்

பிச்சிப்பூ கைனாலே 

மாமன் அடிச்சாரோ 

மல்லிகைப்பூ கைனாலே?

மாமன் கைச்சிலம்பு 

மச்சினார் கைச்சிலம்கோ..நீ 

பேரனார் கொண்டைக்கு 

வாடா மருக் குழந்தை?

 

* சடுகுடு விளையாடும் போது பாடும் 

பாடல் 

 

*நான்தான் வீரன் 

நல்லமுத்து பேரன் 

வெள்ளி பிரம்பெடுத்து 

விளையாட வாரேன்டா தங்கப்பரம்பெடுத்து 

தாலி கட்ட வாரேண்டா 

குடுகுடு சல்லி 

குப்பன் சல்லி 

ராவுத்தன் சல்லி 

ரவ்வாச் சல்லி 

வேர்த்து வழியும் சாராயம் 

காத்திருந்து பூஜை பண்ணோம் 

காவடி பண்டாரம் 

சடுகுடு என்பது 

சாட்டை என்பது 

மேட்டுப்பத்திரி 

முத்தையா நாடான் 

செத்துக்கிடக்கான்

 சம்புருக்  கொண்டாடா

 சம்புருக்  கொண்டாட

 

* இப்படி மக்களோடு வாழ்வோடு கலந்த நாட்டு பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது 

 

*இந்தப்புத்தகத்தை படிக்கப்படிக்க பல நாட்டு பாடல்களை அறிந்து கொள்ள முடிகிறது 

 

*ஒவ்வொரு பாடலையும் பாட மனம் இனிமையாக இருக்கிறது

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments