*தினம் ஒரு புத்தகம்* - வெற்றியின் திறவுகோல்


 

*தினம் ஒரு புத்தகம்*

நாள்:222

தேதி:14-03-2023

புத்தகம் எண்ணிக்கை:222

புத்தகத்தின் பெயர்:வெற்றியின் திறவுகோல்

ஆசிரியர் :கிறிஸ்கோல்

தமிழில் :சுசி.திருஞானம்

பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம் 

பக்கங்கள் :312

விலை :195

 

* நீங்கள் மற்றவர்களைப் புரிந்து கொள்ளவும் மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளவும் உதவும் வழிமுறைகள் என்ற நூலின் முதல் பக்கமே இந்தப்புத்தகத்தை நமக்கு படிக்கத் தூண்டுகிறது 

 

*ஒரு மரத்தை வெட்டி வீழ்த்துவதற்கு எட்டு மணி நேரம் எனக்கு அவகாசம் தரப்பட்டால் அதில் 6 மணி நேரத்தை எனது கோடரியை கூர்திட்டிக் கொள்வதற்கு பயன்படுத்துவேன் 

 

*நமது சொல்லையும் செயலையும் நிர்ணயிப்பவை நமது மதிப்பீடுகள் ,நம்பிக்கைகள், சிந்தனைகள் ,ஆகியவைதான் இவையே தான் வெற்றி தோல்விகளையும் நிர்ணயிக்கின்றன

 

*நமது சிந்தனைகளால் உருவாக்கும் பெறுவது தான் நமது வாழ்க்கை

 

* நாம் எந்த அளவுக்கு நமது நம்பிக்கையில் அடிப்படையில் செயல்படுகிறோமோ அந்த அளவுக்கு அவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம் 

 

*மனிதன் தன் நம்பிக்கைகளால் உருவாக்கப்படுகிறான் 

 

*ஒருவன் எதை விரும்புகிறானோ அதன்படியே இருக்கிறான் 

 

*சாதனைகள் அனைத்தும் நம்பிக்கையில் தான் துவங்குகின்றன 

 

*உங்கள் சுயமதிப்பை உயர்த்துங்கள் நேர்மறையான சுயப் பேச்சின் மூலம் வெற்றி காணுங்கள் 

 

*நமது கண்ணோட்டங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் நாம் நமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடியும் 

 

*வெற்றி என்பது நமக்கு வரும் வாய்ப்புகள் பற்றி விஷயம் அல்ல அது தேர்வுகள் பற்றிய விஷயம் அது காத்திருக்க வேண்டிய விஷயம் அல்ல அது செய்து சாதிக்க வேண்டிய விஷயம் 

 

* சிலந்தி வலைகள் ஒன்று சேரும்போது அவற்றால் ஒரு சிங்கத்தை கூட கட்டிப் போட்டு விட முடியும்

 

* தவறுகளை அல்ல தீர்வுகளை கண்டுபிடியுங்கள் 

 

*கவனத்தை எதிர்காலத்தின் மீது திருப்புங்கள் கடந்த காலத்தின் மீது அல்ல 

 

*இந்தப்புத்தகத்தில் ஒவ்வொரு பக்கங்களில் தத்துவங்களும் அறிஞர்கள் கருத்துக்களும் நிறைந்துள்ளன இதுவே இந்த புத்தகத்தின் தனி சிறப்பு ஆகும்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments