*தினம் ஒரு புத்தகம்* - எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:247

தேதி:08-04-2023

புத்தகம் எண்ணிக்கை:247     

புத்தகத்தின் பெயர் : எங்கும் தமிழ் எதிலும் தமிழ் 

பதிப்பகம் ::தமிழ் ஐயா வெளியிட்டகம் பக்கங்கள் : 474 

விலை : 250 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக கட்டடக்கலை துறையுடன் இணைந்து திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் நடத்திய அனைத்து உலகத் தமிழ் ஆறாவது ஆய்வு மாநாடு டெல்லி தமிழ்ச் சங்க அரங்கத்தில் நடைபெற்ற போது கருத்து அரங்கங்களில் படித்த அளிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் ஆகும் 

 

*நாளைக்கு என் மொழி செத்துவிடும் என்றால் இன்றே நான் செத்து விட நினைக்கின்றேன் என்று சொன்னான் கவிஞன் ஒருவன் தமிழ் பேசி உயிர் பிழைக்கும் தமிழன் வாழும் புண்ணிய பூமி நம் தமிழ் நிலம் 

 

*அறிவியலின் இயல்பை உணர்ந்தவாறு கூறும் தமிழ் இலக்கியங்கள் புறநானூறு ,திருக்குறள், காப்பியங்கள் ,சிந்தாமணி ,தேம்பாவணி போன்ற இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் பொதிந்து உள்ளன 

 

*வெள்ளி நிறம் உடைய கோள் வெள்ளி எனப்படும் காலையில் தோன்றும் வெள்ளியை விடிவெள்ளி என்பார் இதை புறநானூறு பாடல் கூறுகிறது 

 

*வெள்ளி தென்குளத்துறைய விலை வயல் பள்ளம் வாடிய பயனில் காளை

 

* ஒரு மொழி என்பது தூய ஆற்று நீர் போன்றது அதில் பிறமொழிச் சொற்கள் வேண்டாத வகையில் வந்து கலப்பது என்பது அந்த ஆற்று நீரில் மாசுக்கள் வந்து கலப்பது போன்றது எனவே மாசுக் கலவாத ஆற்று நீராக அருந்தமிழை காக்க வேண்டும் 

 

*ஹைக்கூ என்பது 17 ஒலிக்குறிப்புகள் கொண்ட ஒரு சிறிய கவிதை இதை உடனே புரிந்து கொள்வதற்காக இந்த ஒலி குறிப்புகளை மூன்று வரிகளில் அமைத்துக் கொள்கிறார்கள் 

 

*1984 ஆம் ஆண்டு புள்ளிப்பூக்கள் என்ற முதல் தமிழ் ஹைக்கூ தொகுதியை வெளியிட்டவர் ஓவியக் கவிஞர் அமுத பாரதி 

 

*மொத்தம் இந்த நூலில் 75 ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் சார்ந்து உள்ளது 

 

* தமிழ் இலக்கியம் உணர்வுகளை புலப்படுத்தி காட்டும் கண்ணாடி போன்றது அது பன்முக பரிணாமங்களின் திகழ்கின்றது அப்ப பரிணாமங்களில் புதினமும் ஒன்று

 

* தூது இலக்கியங்களில் மிகச்சிறந்த நூலான தமிழ்விடு தூது தமிழைச் சக்கரவர்த்தி என்று உருவகமாக்கி 10 திசைகளிலும் தமிழ் செங்கோல் ஆட்சி செய்கிறது என்கிறது 

 

*உலகில் தோன்றிய உயிர்களை ஒழுங்கா பெருகும் புகழ் தொல்காப்பியனார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு அறிவு நெறியால் ஆறாக பகுத்தார் அவ்வகையில் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு பெற்ற மக்கள் மாந்தர் என பெற்றனர்

 

* மக்கள் தாமே ஆறு அறிவுயிரே-தொல்காப்பியம் 1532

 

*கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய நல்ல நூலாகும் 

 

*தமிழைப் பற்றி பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள இந்த நூல் கலைக்களஞ்சியமாக உதவும்         

 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments