*தினம் ஒரு புத்தகம்* - மீராவின் குக்கூ

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:216

தேதி:08-03-2023

புத்தகம் எண்ணிக்கை:216

புத்தகத்தலைப்பு:  மீராவின் குக்கூ

ஆசிரியர்:மீரா

 

**ஹைக்கூ என்னும் ஜப்பானியக் கவிதை வடிவத்தை அப்படியே தமிழில் பின்பற்ற முயன்று பலர் எழுதியுள்ளனர். மீரா அதிலும் வடிவத்தைப் பின்பற்றாமல், தம் தனித்தன்மையுடன் எழுதிக் குக்கூ என்ற நூலைப் படைத்துள்ளார்

 

**இந்தக் கவிதைகளில் பல ‘லிமரிக் தன்மையுடன் குறும்பாக்களாக அமைந்துள்ளது அதாவது லிமரிக்குக்கோ, ஹைக்கூவுக்கோ மிக நெருங்கிப் போகாமல் தனித்தன்மையுடன் உள்ளன. நகைச்சுவை நடை, விமரிசனச் சொடுக்கு, சிந்தனை நறுக்கு இவற்றால் மீராவின் குறும்பாக்களாகவே விளங்குகின்றன. இவற்றைப் பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்.

 

**கவிஞர் மீராவின் குக்கூ படிக்க படிக்க வியப்பு நாட்டில் நடைபெறும் அவலங்களை மிகக் குறுகிய வரிகளில் அழகாய் பதிவு செய்துள்ளார்.

 

** கூடல் நகர் மதுரையில் மக்கள் கூட்டமாக இருப்பது பற்றி

 

கூட்டம்

கூட்டம் கூட்டம்

கூட்டம் பார்க்க...

 

** மார்கழி மாத விடியல் 

 

குங்குமப் பொட்டிட்டு

மலம் அள்ள வந்தாள்

தோட்டி மகள்

 

** விழும்போதெல்லாம்

மீசையில் ஒட்ட வேண்டும்

இந்தச் செம்மண்

ஏனெனில் எம்மண்

 

** மேலே மேலே

பூக்கடை

கீழே

நாறும் சாக்கடை

 

** மொத்தம் 110 கவிதைகள் ஒவ்வொன்றும் படிக்க படிக்க மிகவும் வித்தியா சமாக இருக்கிறது

 

** மேலேட்டமாக படிக்காமல் ஆழ்ந்து படிக்கும் போது பல பொருள்கள் கிடைக்கிறது

 

**ஹைக்கூ போன்று குக்கூ ஒரு புரட்சிகரமான வடிவம்

 

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments