*தினம் ஒரு புத்தகம்* - கலைஞர் வாழ்க்கை வரலாறு

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:252

தேதி:13-04-2023

புத்தகம் எண்ணிக்கை:252             

புத்தகத்தின் பெயர் : கலைஞர் வாழ்க்கை வரலாறு 

எழுதியவர் : வாணியம்பாடி டாக்டர் அக்பர் கௌசர் 

விலை : 150 

பக்கங்கள் : 366 

பதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*திருக்குறள் உரை தந்த 

எங்கள் தமிழ்க் குறள்....! 

தொல்காப்பிய பூங்கா 

தந்த எங்கள் நல் காப்பியம் ...!

சங்கத்தமிழ் தந்த 

எங்கள் தமிழ் ...!

தெற்கிலிருந்து 

உதித்த சூரியன் ..!

பாயும் புலி..! 

பண்டரக வன்னியன் ...!

குமரியில் திருக்குறளை செதுக்கியவன் ..!

தமிழ் ஐயனுக்கு 

சிலை வடித்தவன் ...!

தரணிக்கு கவிஞர் ..!

கட்சிக்கு கலைஞர் ...!

காட்சிக்கு எளியவர் 

அனைவருக்கும் தலைவர் ..!

மு க என்ற இரண்டு எழுத்து 

சூரியன் யார் அவர்....?

அவர் தான் கலைஞர் கருணாநிதி. அவரின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் புத்தகம்

 

*நில மக்கள் பெற்றெடுத்த நிலா மகன் கருணாநிதி 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி திருக்குவளையில் பிறந்தார் 

 

*அப்பா பெயர் முத்துவேலர் அம்மா பெயர் அஞ்சுகம் பெற்றோர்கள் வைத்த பெயர் தட்சிணாமூர்த்தி பின்பு கருணாநிதி மக்கள் அழைக்கும் பெயர் கலைஞர் அவருடைய மகன் அழைக்கும் பெயர் தலைவர் 

 

*இளம் வயதிலேயே கவிதை ,கட்டுரை, கதை, பேச்சு போன்றவற்றில் சிறந்து விளங்கினார் 

 

*எட்டாம் வகுப்பு படிக்கும் போது பேச்சு போட்டியில் நட்பு என்ற தலைப்பில் பேசியதே அவரின் முதல் பேச்சு 

 

*பள்ளியில் படிக்கும் போது கைகளால் எழுதி மாணவநேசன் என்ற பத்திரிக்கையை நடத்தினார் அது தற்போது முரசொலி என வருகிறது 

 

*சிறுவயதில் கலைஞர் எழுதிய இளமைப்பலி கட்டுரையை படித்த அறிஞர் அண்ணா நேரில் அழைத்து பாராட்டினார் 

 

*விளையாட்டில் ஹாக்கி ,கிரிக்கெட் கலைஞருக்கு பிடிக்கும் 

 

*வயது குறைவு காரணமாக பள்ளியில் சேர்க்க மறுக்கப்பட்டபோது என்னை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் இந்த குளத்தில் வீழ்ந்த இறப்பேன் எனப் போராடி பள்ளியில் சேர்ந்தவர் 

 

*14 வயதில் இந்திய எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார் 

 

*போராட்டம் போராட்டம் 

தாயின் வயிற்றிலிருந்து 

மண்ணில் விழப்போராட்டம்...!

 பள்ளியில் சேர 

இளமையில் போராட்டம் ...!

இறந்த பிறகு 

சமாதிக்கு போராட்டம் ...!

எங்கும் போராட்டம் ...!

எதிலும் போராட்டம்...!

 கலைஞரின் போராட்டம் மக்களுக்கு நன்மையை தந்தது

 

* போராட்டமே விடியலுக்கு வழி என்று கலைஞர் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது 

 

*இயல் ,இசை, நாடகம் என்ற முத்தமிழ் மட்டுமல்லாமல் 92 அடையாளங்களால் தமிழை உருவாக்கப்படுத்தினார் 

 

*கலைஞர் வாருங்கள் போருக்கு புறப்படுவோம் வந்திருக்கும் இந்தி பேயை விரட்டுவோம் என கவி பாடி கல்லாகுடியில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து இந்து எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட வீரத்தமிழர் கலைஞர் 

 

*முதலமைச்சராக பதவியேற்றதும் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார் தமிழில் கையெழுத்து போட்டார் தமிழுக்கு தனி துறையாக தமிழ் வளர்ச்சித் துறையை உருவாக்கினார் 

 

*2010 ஆம் ஆண்டு கோவையில் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தினார் 

 

*சென்னையில் 

வள்ளுவருக்கு கோட்டம் ...!

குமரியில் 

வள்ளுவருக்கு சிலை ..!

பூம்புகாரின் 

சிலப்பதிகார கலைக்கூடம்...!

 எனப் பல தமிழ் நினைவுச் சின்னங்களை அமைத்தார் 

 

*12 வயதில் நாடகம் எழுத தொடங்கியவர் 92 வயதில் பொன்னர் சங்கர் திரைப்படத்திற்கு கதை வசனம் டிவியில் ராமானுஜர் நாடகத்திற்கு கதை வசனம் என ஓய்வில்லாமல் எழுதிக் கொண்டே இருந்தார் 

 

*குரளோவியம் ,சங்கத்தமிழ் ,நெஞ்சுக்கு நீதி ,தென்பாண்டி சிங்கம், பொன்னர் சங்கர் முதலிய 178 நூல்களை எழுதியுள்ளார்

 

* 62 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் ஐந்து முறை தமிழக முதலமைச்சராகவும் மக்களுக்கு அயராது உழைத்தவர் கலைஞர் 

 

*மத்தியில் கூட்டாட்சி...!

 மாநிலத்தில் சுயாட்சி ...!

என்பதே கலைஞரின் லட்சியம் 

 

*தனது மனைவி இறந்தவுடன் தனது வீட்டை ஏழை மக்களுக்கு மருத்துவமனையாக பயன்படுத்துங்கள் என உயில் எழுதி வைத்துள்ளார் 

 

*இந்தியாவிலேயே முதன்முதலாக மதுரை சேர்ந்த வசந்தி என்ற பெண்ணை அரசு பேருந்து டிரைவர் ஆக்கினார் 

 

*பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு தந்தார் 

 

"இந்தியாவிலேயே பெண் காவலர்களை நியமித்தவர் கருணாநிதி.

 

* மகளிர் காவல் நிலையத்தை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார் 

 

*அண்ணாமலைப்பல்கலைக்கழகம் , மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கலைஞருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது 

 

*தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் கலைஞருக்கு ராஜராஜன் விருது வழங்கியது 

 

*செம்மொழியான தமிழ் மொழி என கோவை செம்மொழி மாநாட்டிற்கு தலைப்பு பாடல் எழுதி நீங்கா பெருமை பெற்றார்

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments