இபிஎஸ் என்னும் அரசியல் தலைவன் ஆசிரியர் : டாக்டர் மானோஸ்

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:277

தேதி:08-05-2023

புத்தகம் எண்ணிக்கை:277     

புத்தகத்தின் பெயர்இபிஎஸ் என்னும் அரசியல் தலைவன் 

ஆசிரியர்டாக்டர் மானோஸ்

பதிப்பகம்ஹலோ பதிப்பகம்

விலை : 300 

பக்கங்கள் :304

*மொத்தம் இந்தப் புத்தகத்தில் 88 கட்டுரைகள் உள்ளன 

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*சாதுர்யம், சமயோசிதம் சாணக்கியத்தனம் இவர்தான் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இவரை புகழாரம் சூட்டுகின்றது இந்து குடும்பத்திலிருந்து வெளிவரும் காமதேனு வார இதழ் 

 

*கிரேக்க நாட்டில் பழங்கால பழமொழி ஒன்று உள்ளது குதிரையைக் கட்டிவைத்து அதன் திறனை எடைபோடாது அதனை ஓட விட்டுப் பார்த்தால் தான் அந்த குதிரையின் தனித்திறனை அறிந்து கொள்ள முடியும்  

 

*அப்படித்தான் எடப்பாடி கே. பழனிசாமியும் முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொண்டு தன் திறனை வெளிப்படுத்திக் கொண்டு வருவதை  தான்  சாதுரியம், சமோஜிதம் ,சாணக்கியத்தனம் என்று பாராட்டித் தள்ளி உள்ளது அந்த இந்து குழுமத்தின் காமதேனும் வார இதழ் 

 

*உழைப்பால் உயர்ந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வாழ்க்கை வரலாற்றை சுவைப்பட எழுதியுள்ளார் யோக சித்தர் டாக்டர் மானோஸ் 

 

*வாழ்க்கை வரலாற்றுடன் முதலமைச்சரின் சாதனைகள் திட்டங்கள் போன்றவை விரிவாக இடம் பெற்றுள்ளன

 

* குறிப்பிட்டுச் சொன்னால் தமிழகத்தில் அண்மைக்கால அரசியல் பற்றி அறிந்து கொள்ள இந்தப்புத்தகம் பெரிதும் உதவும் 

 

*மருத்துவப்படிப்பிற்கு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தது மிகச்சிறந்த கல்வித்துறை சாதனையாகும் 

 

* இந்த இட ஒதுக்கீடு மூலம் பல அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர் அவர்களுக்கு உரிய கட்டணத்தை அரசை ஏற்றுக் கொள்கிறது இது கல்வித்துறையில் சிறப்பானத்திட்டம்

 

* தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ் வழி படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு இதுவும் சிறப்பானத்திட்டம்

 

*இபிஎஸ் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த முதல் 90 நாட்களுக்குள் பதினோராயிரம் கோப்புகுகளில் கையெழுத்து போட்டு இருக்கிறார் 

 

*முடியும் முடியாது என்று சொல்லி உடனுக்குடன் கோப்புகள் மீது ஒரு முடிவை எழுதி விட வேண்டும் என்பதுதான் அவரது பாணி 

 

*இந்தியா டுடே பத்திரிகையின் மாநிலங்களில் சிறந்த மாநிலங்கள் விருது 2018ல் பெரிய மாநிலங்கள் வரிசையில் நான்கு விருதுகளை எடப்பாடி பழனிசாமி பெற்றார் 

 

*அனைத்து துறைகளின் செயல்பாட்டில் மிகச்சிறந்த மாநிலம் 

 

*சட்ட ஒழுங்கு  சிறப்பாக பராமரிப்பதில் சிறந்த மாநிலம் 

 

*சுற்றுலா வளர்ச்சியில் மிகச் சிறந்த மாநிலம்

 

* சட்ட ஒழுங்கு பராமரிப்பின் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்த மாநிலம் என 4 விருதுகளை பெற்றார் 

 

*அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார்

 

* பெரியகுளம் காவல் நிலையம் இந்தியாவிலேயே எட்டாவது சிறந்த காவல் நிலையமாக தேர்வு

 

*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தினை திறமையாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் 5 விருதுகள் 

 

*மரபுசாரா எரிசக்தி துறைக்கான கட்டமைப்புகளை சிறப்பாக உருவாக்கியதற்கு மத்திய அரசின் விருது

 

* பொது விநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினி மையம் ஆக்கியதற்கு விருது 

 

*பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டத்திற்கு சிறந்த முறையில் செயல்படுத்தியதற்கான முதன்மை மாநில விருது 

 

*இப்படி இந்தப்புத்தகத்தை படிக்கும்போது அவருடையடைய ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் நல்ல திட்டங்கள் பற்றிய புள்ளி விபரங்களோடு கொடுக்கப்பட்டுள்ளது 

 

*முதல்வர் என்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி திட்டங்களுக்கு ஒதுக்கிய தொகை திட்டங்கள் செயல்படுத்திய விதம் அவர் ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்திய திட்டங்கள் அந்தத் திட்டங்களை செயல்படுத்திய விதம் போன்றவை புள்ளி விவரங்களோடு கொடுக்கப்பட்டுள்ளது 

 

*இந்தப் புத்தகம் படிப்பதற்கு பொதுவாக மிக எளிய நடையில் நம்மை கவரும் விதத்தில் உள்ளது

 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் பள்ளிபாளையம் அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

 

Post a Comment

0 Comments