தினம் ஒரு புத்தகம் - ஸ்ரீ நடராசத் தத்துவம்

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:256

தேதி:17-04-2023

புத்தகம் எண்ணிக்கை:256     

நூலின் பெயர் : ஸ்ரீ நடராசத் தத்துவம் 

ஆசிரியர் பெயர் : வை.தட்சிணாமூர்த்தி பக்கங்கள் :376

விலை : 46

பதிப்பகம் : வானதி பதிப்பகம்

 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


*ஸ்ரீ நடராஜர் தத்துவம் நடராஜர் சிலை ஐந்து தொழில்களை குறிக்கிறது 

 

*நடராஜருக்கு பஞ்ச சபைகள் உள்ளன 

 

*முதல் சபை ரத்தின சபை இது திருவாலங்காட்டில் உள்ளது  இது ரத்தின கற்களால் வேயப்பட்டது 

 

*அடுத்தது கனக சபை இது சிதம்பரத்தில் உள்ளது.ஐந்து சபைகள் இருக்கும் மூல சபை இதுவே இங்கே இறைவன் அருவமாகவும் உருவமாகவும் இருக்கிறார் 

 

*சிதம்பர கருவறையில் ஒரு கருப்பு திரையிருக்கும் அந்த கருப்பு திரைக்குள் தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ இலைகள் தொங்கவிடப்பட்டிருப்பார்கள் இது அருவம் இது இறைவனுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை என்று குறிக்கிறது 

 

*உலகத்தில் இருக்கும் அனைத்து சிவன் கோவிலிலும் இறைவன் லிங்க வடிவில் தான் இருப்பார் ஆனால் சிதம்பரத்தில் மட்டும் இறைவன் கூத்தனாக இருக்கிறார் 

 

*இங்கு அவருக்கு அபிஷேகங்கள் கிடையாது 

 

* சிதம்பரத்திலிருக்கும்  சிவலிங்கம் ஸ்படிகத்தால் செய்யப்பட்டது இதற்கு தான் நான்கு கால பூஜையும் அபிஷேகங்களும் இருக்கிறது 

 

*தாமிர சபை இது திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருக்கிறது இறைவனின் பெயர் அழகிய கூத்தன் இங்கே இருக்கும் இறைவனின் திருமேனி செப்பல் செய்யப்பட்டது 

 

*திருக்குற்றாலம் சித்திர சபை இறைவன் பார்வதிக்கு ஆடிய ஸ்தலம் இங்கே இறைவனுக்கு சிலை இல்லை சித்திரத்தால் வழங்கப்படுகிறார் 

 

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள வெள்ளியம்பலம் இங்கு இறைவன் கால் மாறி ஆடி உள்ளார் இங்கே ஒரு பெரிய சிலை வடிவமும் அதற்கு கீழே உற்சவர் சிலையும் தான் உள்ளது இதுதான் நடராஜரின் பஞ்ச சபை 

 

* சிதம்பரத்தை பற்றி உலகத்தில் சிவனுக்கு உருவம் கொடுத்து கட்டி உள்ள முதல் கோவில் இது. இங்கு இறைவன் ஆனந்தமாக தாண்டவம் ஆடுகிறார் 

 

*இறைவன் பெயர் சபாநாயகர் தமிழில் இறைவனின் பெயர் ஆனந்த கூத்தன் 

 

*சிதம்பரத்தில் இருக்கும் ரகசியம் என்ன என்றால் இறைவனுக்கு பக்கத்தில் ஒரு கருப்பு திரையில் இருக்கும் இந்த கருப்பு திரையில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ இலை தொடங்கப்பட்டிருக்கும் இது இறைவனுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை என்று சொல்லுவது இங்கு இறைவனுக்கு கொங்கு நாட்டில் இருந்து எடுத்துக் கொண்டுவரப்பட்ட பொன்னை  வைத்து ஓடு வேய்ந்து உள்ளார்கள் இதில் நிறைய தத்துவங்களும் அடங்கியுள்ளன 

 

 

* சிதம்பரத்தில் சபையினுள் மொத்தம் ஐந்து பீடங்கள் உள்ளன 

 

*முதல் பீடம் பிரம்ம பீடம் இதில் பஞ்சாட்சரப்படி ஏறி கால் வைக்கும் இடம்

 

* அடுத்து விஷ்ணு பீடம்  சற்றே குறைய ஓர் அடி அகலம் உள்ள இடத்தில் ஐந்து தங்க தூண்கள் உள்ளன இப்பகுதி விஷ்ணு பீடம் எனப்படும் ஐந்து தூண்களும் பஞ்சபூதம் எனப்படுகின்றன 

 

*அடுத்து ருத்ர பீடம் இங்குதான் 28 வெள்ளி தூண்கள் உள்ளன இது 28 ஆகமங்களை குறிக்கிறது இந்த இடம் 3 அடி அகலம் இருக்கும் இங்குதான் அர்ச்சகர்கள் நின்று பூஜை செய்வார்கள் 

 

*அடுத்து மகேஸ்வர பீடம் இங்குதான் ஆனந்த நடராஜரும் சிவகாமி அம்மனும் இருக்கிறார்கள் இப்பீடம் தங்கத்தால் போர்த்தப்பட்டிருக்கும் இந்தப் பீடத்தில் ஒரு அழகிய மண்டபம் உள்ளது இங்குதான் சந்திரமவுலீஸ்வரர் எனப்படும் ஸ்படிகலிங்கமும் ரத்தின சபாபதி என அழைக்கப்படும் ரத்தினத்தினால் செய்யப்பட்ட நடராஜர் திருமேனியும் தனித்தனியாக ஒரு பேழையில் வைக்கப்பட்டிருக்கிறது 

 

*இந்த ரத்தினம் இழைத்த இறைவனின் திருமேனி சிவ பாதுகை என நடராஜருக்கு பக்கத்தில் தங்கத்தட்டில் வைத்துள்ளார்கள் 

 

* மகேஸ்வர பீடத்தில் ஆறு தங்கத் தூண்கள் அமைந்துள்ளன இது ஆறு சாஸ்திரங்கள் எனப்படுகிறது அதேபோல் இங்கு நான்கு தங்கத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன இது நான்கு வேதங்கள் எனப்படுகிறது 

 

*அடுத்து சதாசிவ பீடம் சிற்சபை அடைப்பை அடுத்து அமைந்துள்ள முதல் தெய்வம் சிதம்பர ரகசியம் இங்கு இறைவன் அழகுற ஒரு நாமமும் ஓர் உருவமும் இல்லாமல் கருப்பு திரைக்குள் தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ இலையாக இந்த சதாசிவ பீடத்தில் இறைவனுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை என்று நிரூபிப்பதே இந்த தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ இலை ஆகும்

 

" அதுதான் இங்கே முதல் கடவுள் அது யாருக்கும் தெரியாது இதுதான் அனவரதத் தாண்டவ உயர் ஞான ரகசிய நிலை 

 

*இந்த ரகசிய ஆண்டவர் இருக்கும் சதாசிவ பீடமும் ஸ்ரீ நடராஜர் கொழு  வீற்றிருக்கும் மகேஸ்வர பீடமும் சேர்ந்து சிற்றபை கீழ்ப்பகுதியில் மேற்பகுதியில் ஐந்தில் மூன்று பகுதியை நிறைவு செய்வன இரு மடங்கும்  ஐந்தில் ஒரு பகுதி சுற்றிடம் அமைந்துள்ளது பொன்னம்பல சபையில் இருக்கும் ஐந்து பீடங்கள் இதுவே

              *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

*நன்றி*'சிவ நெறி' பெ.த.சங்கமேஸ்வரன்

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments